For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...

By Maha
|

கோடையில் அடிக்கும் வெயிலுக்கு, வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியாது. ஏனெனில் அந்த அளவில் வெயிலானது போட்டு தாக்குகிறது. எனவே இந்த காலத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும், காட்டன் ஆடைகளை அணிவது, லேசான மேக்-கப் போடுவது, முடியை தூக்கிக் கட்டிக் கொள்வது என்றெல்லாம் செய்வோம். ஆனால் பாதங்களை கண்டு கொள்ளவே மாட்டோம்.

ஆனால் கொளுத்தும் வெயிலில் நடப்பதற்கு உதவியாக இருக்கும் பாதங்களை பராமரிக்காவிட்டால், பாதங்களில் வறட்சி, பித்தவெடிப்புக்கள், துர்நாற்றம், சொரியாசிஸ், சில சமயங்களில் வெடிப்புக்களால் இரத்தம் வடிதல் போன்றவை கூட நிகழும். ஏனெனில் மற்ற காலங்களை விட, கோடையில் தான் பாதங்கள் அதிக வறட்சியடைவதோடு, அதிகப்படியான வெயிலால் கருமையடைந்து, மாசுக்கள் படிந்து அசிங்கமான தோற்றத்தைத் தரும்.

எனவே அழகான பாதங்கள் கோடையில் வேண்டுமெனில், இதோ சில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுவுதல்

கழுவுதல்

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், கால்களை கழுவும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். அதுவும், கால்விரல்களுக்கிடையே நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அங்கு தான் மாசுக்கள் அதிகம் இருக்கும்.

இறந்த செல்கள் நீக்குதல்

இறந்த செல்கள் நீக்குதல்

பாதங்களுக்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி கழுவுவது மிகவும் முக்கியமானது. இதனால் இறந்த செல்கள் நீங்கி, பாதங்களில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கும். மேலும் இதனால் பாதங்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

சரியான செருப்பு அணிதல்

சரியான செருப்பு அணிதல்

கோடையில் பாதங்களை முற்றிலும் கவரும் வகையிலான செருப்புக்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அணிந்தால், சருமத்துளைகள் சரியாக சுவாசிக்க முடியாதவாறு ஆகிவிடும். எனவே கால்களுக்கு நன்கு மென்மையாக இருக்கும் காலணிகளை அணிவது சிறந்தது.

சன் ஸ்க்ரீன் லோசன்

சன் ஸ்க்ரீன் லோசன்

சூரியனின் புறஊதாக்கதிர்களில் இருந்து, சருமத்திற்கு மட்டுமின்றி பாதங்களுக்கும் தான் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வெளியே செல்லும் போது, பாதங்களுக்கும் சன் ஸ்க்ரீன் லோசன் தடவி செல்ல வேண்டும்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

பாத பராமரிப்பில் முக்கியமான ஒன்று தான் மாய்ஸ்சுரைசர் தடவுவது. எந்த ஒரு காலமாக இருந்தாலும், பாதங்களுக்கு சரியான மாய்ஸ்சுரைசரை தடவி வர வேண்டும். ஏனெனில் அங்கு எண்ணெய் சுரப்பி இல்லாத காரணத்தினால், பாதங்கள் எளிதில் வறட்சியடையும். எனவே தினமும் இரண்டு முறை, குளித்த பின்னும், தூங்கும் முன்பும் மாய்ஸ்சுரைசரை தவறாமல் தடவ வேண்டும்.

பெடிக்யூர்

பெடிக்யூர்

எப்போதும் மாதத்திற்கு இரண்டு முறையாவது பாதங்களுக்கு பெடிக்யூர் செய்ய வேண்டும். அதுவும் அதனை ஸ்பாவிலோ அல்லது வீட்டிலேயே கூட செய்யலாம்.

மசாஜ்

மசாஜ்

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக தங்கு தடையின்றி ஓட வேண்டுமெனில், பாதத்திற்கு மசாஜ் செய்வது தான் சிறந்த வழி. இதனால் பாதங்கள் மட்டுமின்றி, உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Summer Foot Care Tips To Follow | கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...

During summers your feet becomes more dry and is almost all the time exposed to sun and dirt.To maintain a clean and proper feet in summers, here are few foot care tips for you.
Story first published: Thursday, May 16, 2013, 13:05 [IST]
Desktop Bottom Promotion