For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்குள் வாடையைப் போக்கும் சில இயற்கை சிகிச்சைகள்!!!

By Super
|

வாடையடிக்கும் அக்குள் ஒன்று போதும், உங்கள் மனநிலையை மாற்ற. இப்படி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது - சுகாதாரமுற்ற வாழ்வு முறை, அக்குளை சரி வர கழுவாமல் விடுதல், பங்கஸ் வளர்ச்சி, அந்த இடத்தை சுற்றிய அதீத கொழுப்பு, ஹார்மோன்கள், பரம்பரை வியாதி, வானிலை என அடுக்கி கொண்டே போகலாம். இந்த வாடைக்கான காராணம் எதுவாக இருந்தாலும் சரி, வாடையடிக்கும் அப்பகுதியை சரிவர பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தவர்கள் முன் கூனி குறுக வேண்டி வரும். மேலும் பல சரும வியாதிகளும் வந்தடையும்.

இந்த வாடையை நீக்க பல வீட்டு சிகிச்சைகளே உள்ளது. இவைகள் எல்லாம் மிகவும் எளிய வழிமுறைகளாகும். குளிக்கும் போது அக்குள் பகுதியை ஆண்டி-பாக்டீரியா அல்லது ஆண்டி-பங்கஸ் அடங்கிய சோப்பை கொண்டு நன்றாக கழுவுவதும் எளிய வழிமுறைகளில் ஒன்று தான். அதனால் உங்கள் அக்குள் பகுதி சுத்தம் அடைந்து வாடை இல்லாமல் இருக்கும். உங்கள் சருமத்திற்கு உகந்ததாக விளங்கும் டியோடரண்ட்டை சந்தையிலிருந்து வாங்கியும் பயன்படுத்தலாம்.

சில நேரம் இந்த வாடை நீங்கள் அணியும் உடையினால் கூட ஏற்படலாம். அவைகளை சரியாக துவைக்காமல் விட்டாலோ அல்லது பல நாள் அவைகளை துவைக்காமல் விட்டாலோ இவ்வகை வாடையை அது உண்டாக்கும். அதற்கு துணிகளில் உள்ள பாக்டீரியா மற்றும் பங்கஸை ஒழிக்கும் நல்லதொரு டிடர்ஜெண்டை உபயோகிக்கலாம். அதே போல் நீங்கள் பயன்படுத்தும் டிடர்ஜெண்ட்டுகளால் துணிகளில் நல்ல நறுமணமும் வீச வேண்டும். கோடைக்காலத்தில் வெளியே சுற்றினால் வியர்வை வெளியேறி, அக்குள் வாடையடிக்க தொடங்கிவிடும். அதனால் வானிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரி அக்குளில் ஏற்படும் வாடையை நீக்க சில எளிய வழிமுறைகளை பற்றி பார்க்கலாம் வாங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி ஷவரில் குளிப்பது

அடிக்கடி ஷவரில் குளிப்பது

ஷவரில் எத்தனை முறை குளிக்கலாம் என்பது நீங்கள் வசிக்கும் வட்டாரம் மற்றும் உங்களின் சரும வகையை பொறுத்து அமையும். அதனால் ஷவரில் அடிக்கடி குளித்து மிகுந்த கவனத்துடன் அக்குள் பகுதியை பார்த்துக் கொள்ளவும். வியர்வையில் இருந்து ஏற்படும் வாடையை இது நீக்கும்.

காட்டன் அல்லது லினென் ஆடைகள்

காட்டன் அல்லது லினென் ஆடைகள்

சிந்தெடிக் ஆடைகளை விட காட்டன் மற்றும் லினென் ஆடைகளையே தேர்ந்தெடுங்கள், முக்கியமாக கோடைக்காலத்தில். காட்டன் மற்றும் லினென் வகை ஆடைகள் வியர்வையை உறிந்து போதுமான காற்றோத்தை அளிக்கும். அதனால் அக்குள் பகுதி ஈரப்பதத்துடன் இல்லாமல் குளுமையாக இருக்கும்.

உண்ணும் உணவு

உண்ணும் உணவு

சில வகை உணவுகள் உங்கள் வியர்வையிலிருந்து துர்நாற்றத்தை வீசச் செய்யும். அதனால் உங்கள் அக்குளில் வாடை உண்டாகும். பூண்டு, வெங்காயம், கப்பைன் கலந்த பானங்கள் போன்ற உணவு வகைகளை தவிர்க்கவும். இது உங்கள் உடலில் இருந்து துர்நாற்றத்தை வீசச் செய்யும், முக்கியமாக அக்குள் பகுதிலிருந்து.

ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் ஸ்ப்ரே

ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் ஸ்ப்ரே

ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் அல்லது டீ-ஓடரைசிங் ஸ்ப்ரேக்கள் உங்கள் அக்குளில் ஏற்படும் வாடையை கட்டுப்படுத்த உதவும். ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் ஸ்ப்ரேவை பயன்படுத்தினால், பயன்படுத்திய இடத்தில் வியர்வை ஏற்படுவதை தடுக்கும். அதனால் அதனை அக்குளில் பயன்படுத்தினால் அங்கே பாக்டீரியா உண்டாகாமல் தடுக்கும்.

ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் பவுடர்

ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் பவுடர்

சந்தையில் பல ஆண்டி-பெர்ஸ்பிரண்ட் பவுடர்கள் கிடைக்கின்றன. அதனை வாங்கி குளித்து விட்டு உங்கள் அக்குள் பகுதியில் கொஞ்சம் தூவினால் போதும். அந்த இடத்தை பல மணி நேரத்திற்கு சுத்தமாகவும் வியர்வை உருவாகாமலும் வைத்திருக்கும். இதனால் உடலிலும் அக்குளிலும் வாடை வீசாமல் இருக்கும்.

ஷேவ் அல்லது வேக்ஸ்

ஷேவ் அல்லது வேக்ஸ்

உங்கள் அக்குளில் உள்ள முடியை நீக்கி சுத்தமாக வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். அதனை ஷேவிங் அல்லது வேக்ஸிங் மூலமாக நீக்கலாம். இதனால் இந்த இடத்தை சுற்றி வியர்வை உண்டாகாமல் இருக்கும். அதன் விளைவாக வாடை வீசாமலும் இருக்கும். அக்குளில் இருக்கும் முடிகளை ட்ரிம் செய்தும் இந்த பிரச்னையை கையாளலாம்.

சுத்தமான ஆடைகளை அணியுங்கள்

சுத்தமான ஆடைகளை அணியுங்கள்

துவைக்காத துணி அல்லது நோய்க்கிருமி பாதித்த துணிகளை அணிந்தாலும் அக்குளில் வாடை அடிக்கலாம். இவ்வகை துணிகளை அணிவதால் உங்கள் அக்குளில் இருந்து வெளிப்படும் வியர்வையில் நாற்றம் அடிக்கும். அதனால் உங்கள் துணிகளை நல்லதொரு ஆண்டி-பாக்டீரியா டிடர்ஜெண்டை பயன்படுத்தி ஒழுங்காக துவையுங்கள்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

அக்குளில் ஏற்பட்டுள்ள வாடையை நீக்க மிகவும் புகழ் பெற்ற எளிய முறை தான் பேக்கிங் சோடா. குளித்த பின் பேக்கிங் சோடாவை உங்கள் அக்குளில் தெளித்து நல்ல பயனை பெற்றுள்ளனர் பலர்.

காட்டன் அட்டைகள்

காட்டன் அட்டைகள்

உங்கள் அக்குளில் வைப்பதற்கு காட்டன் அட்டைகள் சந்தையில் விற்கப்படுகிறது. ஆண்டி-பாக்டீரியல் மற்றும் மிதமான வாசனையுடன் கூடிய அட்டைகளை வாங்கி உங்கள் அக்குளில் வைத்துக் கொள்ளவும். அது உங்கள் அக்குளில் ஏற்படும் வியர்வையை உள்ளிழுத்து பாக்டீரியா உருவாகுவதை தடுக்கும்.

வினிகர்

வினிகர்

அக்குளில் ஏற்படும் வாடையை தடுக்க வீட்டில் பயன்படுத்தப்படும் மற்றொரு பொருள் தான் வினீகர். சிறிய பஞ்சுருன்டையை வைத்து வினிகரில் முக்கி உங்கள் அக்குளில் தடவவும். இது பல மணி நேரங்களுக்கு வியர்வையை தடுத்து வாடை ஏற்படுவதை தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cure for smelly armpits

There is nothing more awful a thing that turns off more than smelly armpits. The causes and reasons for the smelly armpits can be many such as unhealthy lifestyle, improper cleaning of armpits, fungal growth, excessive fat around the region, hormonal, genetic issues, weather etc. Let us take a look at some simple steps to treat smelly armpits.
Desktop Bottom Promotion