For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷேவிங் க்ரீம் தீர்ந்துவிட்டதா? கவலையவிடுங்க...

By Maha
|

ஆண்கள் காலையில் எழுந்ததும் பற்களை துலக்கியப் பின்னர் செய்யக்கூடிய ஒரு செயல் தான் ஷேவிங் செய்வது. இத்தகைய செயலை சிலர் தினமும் பழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் சில ஆண்களுக்கு ஷேவிங் க்ரீம் மூலம் அலர்ஜி ஏற்படுவதால், அதனை அடிக்கடி பயன்படுத்தாமல் இருக்க, ஷேவிங் செய்யவே மாட்டார்கள். ஆகவே அத்தகைய சென்சிடிவ் சருமம் உள்ள ஆண்களுக்கு ஒரு சூப்பரான மற்றும் இயற்கையான ஷேவிங் க்ரீம்கள் உள்ளன.

அவைகளில் எந்த ஒரு கெமிக்கல்களும் கலந்திருக்காது. அதனால் எந்த ஒரு பக்கவிளையும் ஏற்படாமல் இருக்கும். மேலும் இவை அனைத்தும் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள். இத்தகைய பொருட்களை தினமும் பயன்படுத்தலாம் அல்லது வாரத்திற்கு ஒருமுறையும் பயன்படுத்தலாம்.

சரி, இப்போது இயற்கையாக கிடைக்கும் அந்த ஷேவிங் க்ரீம்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நறுமண எண்ணெய்கள்

நறுமண எண்ணெய்கள்

ஷேவிங் க்ரீமிற்கு ஒரு சிறந்த மாற்று பொருளாக இருப்பது தான் நறுமண எண்ணெய்கள். இந்த எண்ணெய்களை முகத்தில் தடவி, பின் ஷேவிங் செய்வதால், சருமம் மென்மையாகவும், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவு ஏற்படாமலும் இருக்கும்.

ஷியா வெண்ணெய்

ஷியா வெண்ணெய்

ஷேவிங் செய்த பின்னர் சருமம் மென்மையாகவும், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்மெனில், ஷியா வெண்ணெயை உபயோகிக்கலாம்.

ஆப்ரிக்காட் பேஸ்ட்

ஆப்ரிக்காட் பேஸ்ட்

இரவில் படுக்கும் போது ஆப்ரிக்காட் பழத்தை அரைத்து, அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, காலையில் அதனை ஷேவிங் க்ரீமாக பயன்படுத்தலாம். இதனால், அந்த ஆப்ரிக்காட் பேஸ்ட்டானது ஷேவிங் செய்வதால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தும்.

பாதாம் பேஸ்ட்

பாதாம் பேஸ்ட்

எப்படி ஆப்ரிக்காட் பேஸ்ட் செய்தோமோ, அதேப் போன்று பாதாமை நீரில் ஊற வைத்து, அதனை மென்மையாக அரைத்து, ஷேவிங் க்ரீம் போன்று பயன்படுத்தலாம். அதிலும் சென்சிடிவ் சருமத்திற்கு இது ஒரு மிகச்சிறந்த ஷேவிங் க்ரீமாக இருக்கும்.

டிஷ் வாஷ் நீர்மம்

டிஷ் வாஷ் நீர்மம்

அவசர காலத்தில் வீட்டில் ஷேவிங் க்ரீம் தீர்ந்துவிட்டால், அப்போது டிஷ் வாஷ் நீர்மத்தைப் பயன்படுத்தி ஷேவிங் செய்யலாம். இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெயைப் பயன்படுத்தி ஷேவிங் செய்தால், அது ஷேவிங் செய்த பின்னர் ஏற்படும் வறட்சியை தடுப்பதோடு, சருமத்தை மென்மையாகவும் வைத்துக் கொள்ளும்.

லோஷன்

லோஷன்

வீட்டில் ஷேவிங் க்ரீமை தேடி கிடைக்காவிட்டால், உங்கள் மனைவி அல்லது காதலி பயன்படுத்தும் பாடி லோஷனைப் பயன்படுத்துங்கள். இதுவும் ஷேவிங் க்ரீமிற்கு சிறந்த மாற்றாக இருக்கும். அதிலும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு, இது மிகவும் நல்லது.

சோப்பு

சோப்பு

அனைவருக்கும் தெரிந்த மற்றும் பெரும்பாலான ஆண்கள் பின்பற்றும் ஒரு முறை தான் சோப்பை பயன்படுத்துவது. இந்த சோப்பு ஷேவிங் க்ரீமை விட சிறந்ததாக இல்லாவிட்டாலும், அவரசத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

ஷாம்பு

ஷாம்பு

சோப்பு பயன்படுத்த விரும்பாதவர்கள், வேண்டுமெனில் தலைக்கு போடும் ஷாம்புவைப் பயன்படுத்தி, ஷேவிங் செய்யலாம்.

கண்டிஷனர்

கண்டிஷனர்

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், ஷேவிங் க்ரீம் இல்லாவிட்டால், சோப்பு, ஷாம்புவிற்கு பதிலாக, வீட்டில் கண்டிஷனர் இருந்தால், அதனைப் பயன்படுத்தலாம். ஆனால் இதனைப் பயன்படுத்தி ஷேவிங் செய்த பின்னர், ஓடும் நீரில் முகத்தை நன்கு அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Alternative Shaving Creams For Men

Take a look at these alternatives for shaving creams dedicated to men. You will also notice natural alternatives for shaving cream in the list. These natural alternatives for shaving cream can be used everyday when you shave to remove the unwanted facial hair or can be used once a week too.
Desktop Bottom Promotion