பஞ்சு போன்ற பாதங்களுக்கு பரவச சிகிச்சை

Posted By:
Subscribe to Boldsky

மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் பாதுகாக்கப் படவேண்டியவையே. முகத்திற்கு காட்டும் அக்கறையை யாரும் கை, கால்களுக்கு காட்டுவதில்லை. இதனால்தான் அழகு நிலையங்களில் மெனிக்யூர், பெடிக்யூர் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

பாதங்களை பராமரிக்காமல் இருப்பதானால் பலருக்கு பாதமானது பொலிவு இழந்துவிடுகின்றன. இதனால் சேற்றுப்புண், பித்தவெடிப்பு போன்றவை ஏற்படுகின்றன. நம்மை வழிநடத்திச் செல்லும் பாதங்களிடம் நாம் அக்கறை செலுத்தினால் அவை ஏன் நம்மை மருத்துவமனை வாசலுக்கு அழைத்துச் செல்லப்போகின்றன. பாதங்கள் பொலிவடைய சில ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.

மென்மையான பாதங்கள்

கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சை பயிறை பவுடராக்கி அதனுடன் கோதுமை மாவு மற்றும் கடலை மாவு ஆகியவற்றையும் சேர்த்து பன்னீரில் கலந்து பாதத்தில் பூசவேண்டும். 20 நிமிடம் கழித்து பாதங்களை கழுவினால் அவை பளபளப்பாகும்.

ரோஜா இதழ்கள், எலுமிச்சை சாறு, வேப்பிலை ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பின்பு மிதமான சூட்டில் கால்களை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதுபோல் செய்துவந்தால் கால்கள் சொரசொரப்பு இன்றி மிருதுவாக மாறும்.

மிதமான சுடுதண்ணீரில் சிறிதளவு ஷாம்பு, சிறிது உப்பு, பாதி எலுமிச்சை சாறு கலந்து அந்த தண்ணீரில் பாதங்களை பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின்பு ஸ்க்ரப்பர் கிரீமை தடவி மசாஜ் செய்யவும்.

நகப்பூச்சு உபயோகிப்பவர்கள் வாரம் ஒரு முறை நகங்களில் உள்ள நகப்பூச்சு நீக்கி (நெயில்பாலிஷ் ரிமூவர்) மூலம் சுத்தம் செய்துவிட்டு ஒரு நாள் முழுவதும் நகப்பூச்சை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். இப்படி செய்வது நகங்களுக்கு நல்லது.

பாதவெடிப்பு சரியாக

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் எண்ணெயிலுள்ள இரசாயனம், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும். அதைப் போக்க சில எளிய வழிகள் இதோ:

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.

வெடிப்பு உள்ள பாதங்களை ஐஸ் கட்டியில் சிறிது நேரம் ஊறவைத்து பின் சந்தனத்தூளை பூசி 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை அலசவும். இதுபோல் செய்து வந்தால் வெடிப்பு சரியாகும். முகத்திற்கு போடும் ப்ளீச் கிரீம், க்யோலின் பவுடர், ஹைட்ரஜன் பெராக்ஸை டு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.

கால்வலி நீங்கும்

கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, தோல் மிருதுவாகும். கடுகு எண்ணெய் வாங்கி சூடாக்கி பாதங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாதங்கள் அழகாவதுடன் கால்வலி உள்ளவர்களுக்கு கால்வலி நீங்கும்.

பாத வெடிப்பு அதிகம் உள்ளவர்கள் மருதாணியை அரைத்து பூசி வந்தால் கால்கள் குளிர்ச்சியாக இருப்பதோடு வெடிப்புகள் சரியாகும். மருதாணி தூளுடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கைக் காய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று அழகாகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

English summary

Tips for beautiful feet | பஞ்சு போன்ற பாதங்களுக்கு பரவச சிகிச்சை

Unfortunately, feet are the neglected area which ladies frequently pass up to take care. There are lots of elements in daily routine of women which are totally torturous for your feet. i.e. standing all day, airless or rough shoes, too-small shoes. Girls usually take feet as for granted until they start to hurt which can cause harms in future. If we do not take care of our feet for a long span of time, they can turn out to be sandpaper-dry, abrasive and ugly. Only small efforts can re-establish the softness of your feet.
Story first published: Saturday, August 13, 2011, 16:43 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter