நமது முகத்தில் இருக்கும் களைப்பை போக்கி பொலிவான சருமம் பெற என்ன செய்ய வேண்டும் எனத் தெரியுமா?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

நமது முகத்தில் இருக்கும் களைப்பை போக்கி பொலிவான சருமம் பெற என்ன செய்ய வேண்டும் எனத் தெரியுமா

நீங்கள் ஒவ்வொரு நாள் எழுந்திருக்கும் போதே புத்துணர்வோடு இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் அல்லவா. ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் நாள் முழுவதும் இடைவெளி விடாத வேலை, வெயிலிலே சுற்றுத் திரிந்து வீட்டிற்கு வந்து கண்ணாடியின் முன் நின்று உங்கள் முகத்தை பாருங்கள். ஆம் முகமே வாடி போகியிருக்கும். காலையில் கிளம்பும் போது இருந்த முகப்பொலிவு எல்லாம் காணாமல் போய் இருக்கும்.

முகத்தில் இருக்கும் களைப்பை போக்கும் மேக்கப் குறிப்புகள்

சரி இதற்கு என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா. கவலையை விடுங்க. உங்கள் முகத்தில் உள்ள களைப்பை போக்கி எப்போதும் பூத்த மலரைப் போல புத்துணர்வோடு வைக்க சில டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால் போதும்.

மாலையில் உங்கள் வேலைகளை முடித்து விட்டு என்ன தான் நீங்கள் ஓய்வெடுத்தாலும் உங்கள் முகக் களைப்பு போகாது அப்படியே தான் இருக்கும். அதற்கு நாங்கள் கூறும் சில மேக்கப் டிப்ஸ்களை பின்பற்றுங்கள். எப்போதுமே களையிழக்காத பொலிவான ப்ரஷ்ஷான சருமத்தை பெறலாம்.

சில பேர்கள் நினைப்பீர்கள் காலை மாதிரியே மாலையில் வேலை முடிந்ததும் மேக்கப் போட்டு கொள்ளலாம் என்று ஆனால் நாள் முழுவதும் எல்லாம் மேக்கப் பொருட்களை கையில் எடுத்துக் கொண்டே செல்ல வேண்டியது இருக்கும். அதனால் தான் நாங்கள் கூறும் மேக்கப் டிப்ஸ்கள் மூலம் உங்களுக்கு தேவையான பொருத்தமான பொருட்களை கொண்டு சென்றால் மட்டும் போதும்.

மேலும் இந்த மேக்கப் பொருட்களை எளிதாக உங்கள் பேக்கிலயே எடுத்து செல்லவும் முடியும். நாள் முழுவதும் புத்துணர்வான பொலிவான அழகிய முகம் உங்களுக்கு கிடைக்கும்.

சரி வாங்க அதற்கு தேவையான பொருட்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ் மிஸ்ட்

பேஸ் மிஸ்ட்

பேஸ் மிஸ்ட் தற்போது சிறிய வடிவ பாட்டிலில் கூட கிடைக்கிறது. இதை எடுத்து சென்றால் உங்கள் வேலை நேர இடைவெளியில் கூட உங்கள் முகத்தை ப்ரஷ்ஷாக்கி கொள்ளலாம். உங்கள் இருக்கையில் இருந்த படியே எளிதாக உங்கள் முகத்திற்கு ஸ்பிரே செய்து கொள்ளலாம். ஆபிஸில் சில நேரங்களில் நீங்கள் தூங்கி எழுந்தால் கூட அந்த நேரங்களில் உங்கள் முகத்தை ப்ரஷ்ஷாக வைக்க இந்த பேஸ் மிஸ்ட் பெரிதும் பயன்படுகிறது. இந்த பேஸ் மிஸ்ட் நிறைய வகைகளில் கிடைக்கிறது. அதில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் சி பேஸ் மிஸ்ட் வகைகள் மிகவும் சிறந்தது. லாவண்டர் நறுமணம் நிறைந்தது உங்கள் முகத்தை புதுப் பொலிவாக வைக்க பெரிதும் உதவுகிறது. விட்டமின் சி உங்கள் முகத்தில் உள்ள களைப்பை போக்கி முகத்தை ஜொலிக்க வைக்கிறது.

கண்சீலர்

கண்சீலர்

எந்த முகப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு கண்சீலர் பெரிதும் பயன்படுகிறது. மேலும் இது சருமத்தை பொலிவாக்குகிறது. குறிப்பாக அதிக களைப்பு காணப்படும் பகுதியான கண்கள் போன்றவற்றை பிரகாசமாக காட்ட உதவுகிறது. எனவே இந்த கண்சீலரை பயன்படுத்தி உங்கள் முகத்தை எளிதாக பொலிவாக்கி விடலாம். இதற்கு நமது சருமத்திற்கு ஏற்ப ஒரே ஒரு தடவை லேசாக கண்சீலரை பயன்படுத்தினால் போதும். பயன்படுத்தும் போது முகத்தின் எல்லா இடங்களிலும் சமமாக பரப்ப வேண்டும். இல்லாவிட்டால் திட்டு திட்டாக தெரிய வாய்ப்புள்ளது.

ப்ளஷ்

ப்ளஷ்

ப்ளஷ் உங்கள் முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும். எல்லாரும் பிங்க் நிற ஆப்பிள் கன்னத்திற்கு தான் ஆசைப்படுவோம். அந்த ஆசையை இந்த ப்ளஷ்யை கொண்டு நிறைவேற்றி கொள்ளலாம். நீங்கள் பீச் அல்லது பிங்க் நிற ப்ளஷ்யை பயன்படுத்தினால் உங்கள் சரும நிறத்திற்கு ஒரு இயற்கையான அழகை கொடுக்குமாறு அப்ளே செய்து கொள்ளுங்கள் . அதே நேரத்தில் சருமத்தை இன்னும் துணிப்பாக காட்ட விரும்பினால் நீங்கள் மேட்டி ப்ளஷ் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

ப்ரோன்ஸர்

ப்ரோன்ஸர்

உங்கள் சரும வடிவமைப்பை துணிப்பாக காட்டுவதில் ப்ரோன்ஸர் பெரிதும் பயன்படுகிறது. தற்போது ப்ரோன்ஸரை காண்டூராக பயன்படுத்துகின்றனர். முகத்திற்கு காண்டூரிங் செய்வதன் மூலம் முகழகு ஒரு துணிப்பான வடிவமைப்பை பெறுவதோடு நல்ல லுக்கையும் கொடுக்கிறது. நடிகைகள், மாடல்கள் இப்படி எல்லாரும் பிறக்கும் போதே முக அம்சங்களோடு பிறந்ததில்லை அவர்களின் அழகுக்கும் தோரணையான முக அம்சங்களுக்கும் காரணம் இந்த ப்ரோன்ஸர் தான்.

மாய்ஸ்சரைசர்

மாய்ஸ்சரைசர்

நீங்கள் எந்த விதமான மேக்கப் போட்டாலும் கண்டிப்பாக மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் அதை செய்வதே இல்லை. நீங்கள் மேக்கப் போடுவதற்கு முன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாவிட்டால் மேக்கப் திட்டு திட்டாக தெரியும்.

ஸ்லீப்பிங் மாஸ்க்

ஸ்லீப்பிங் மாஸ்க்

உங்கள் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளும் பாதிப்புகளும் இரவில் தான் குணமடையும் வேலையை தொடங்கும். எனவே தான் இரவு நேர க்ரீம் மற்றும் மாஸ்க் மிகவும் முக்கியமானது. இந்த இரவு நேர மாஸ்க் உங்கள் முகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து விடும். உங்கள் முகத்தில் உள்ள தூசி, அழுக்கு நாள் முழுவதும் ஏற்பட்ட களைப்பு இவை எல்லாவற்றையும் ஒரே நாள் இரவில் போக்கி விடும். மேலும் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து சீக்கிரம் வயதாகுவதை தடுக்கும்.

ஹைலைட்

ஹைலைட்

உங்கள் முகழகை துணிப்பாக காட்ட இந்த ஹைலைட் ரெம்ப முக்கியம். இதற்கு லேசாக ஹைலைட் க்ரீம் அல்லது பாம் தடவினால் போதும். உங்கள் முகத்தில் எந்த பகுதியை ஹைலைட் செய்ய விரும்புகிறீர்களோ அங்கே அப்ளே செய்து சமமாக பரப்பி இயற்கையான அழகை பெறலாம். மூக்கின் ஓரங்கள், நெற்றி, கன்னத்தின் மேடான பகுதி, மேல் உதட்டின் மேலே உள்ள இரு கோடுப்பகுதி போன்றவற்றை நீங்கள் ஹைலைட் செய்து கொள்ளலாம்.

நிறமேற்றப்பட்ட லிப் பாம்

நிறமேற்றப்பட்ட லிப் பாம்

வறண்ட உதடுகள் உங்கள் ஒட்டுமொத்த முகழையும் கெடுத்து விடும். எனவே அதற்கு நிறமேற்றப்பட்ட லிப் பாம்களை பயன்படுத்துங்கள். இது உங்கள் உதட்டை இயற்கையான நிறத்தோடு இருப்பது போல் காட்டுவதோடு உங்கள் இதழ்களையும் மென்மையாக ஈரப்பதத்துடன் எப்பொழுதும் வைத்து கொள்ளும்.

என்னங்க கண்டிப்பாக இந்த மேக்கப் டிப்ஸ்கள் உங்கள் முகத்தை நாள் முழுவதும் புதுப்பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

முகத்தில் இருக்கும் களைப்பை போக்கும் மேக்கப் குறிப்புகள்/ முகத்தில் இருக்கும் களைப்பை போக்கி முகத்தை எப்படி ஜொலிக்க வைப்பது/ நமது முகத்தில் இருக்கும் களைப்பை போக்கி பொலிவான சருமம் பெற என்ன செய்ய வேண்டும் எனத் தெரியுமா

Most of us have plans in the evenings after spending a whole day at work. It is obvious that the tiredness will start to show on your face. There are some makeup and skincare tips you can use to look a little bit brighter and fresher.
Story first published: Thursday, March 1, 2018, 13:10 [IST]