நீச்சல் அடிப்பவர்களா நீங்கள்? அப்ப இந்த 8 விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்...

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

குழந்தைகளின் கோடை விடுமுறையில் கூட பல பெற்றோர்கள் அவர்களை நீச்சல் வகுப்புகளில் சேர்க்கத் தான் விரும்புகின்றனர். இது வெயிலில் இருந்து அவர்களை காப்பதற்கும் மேலும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் தான். குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் இது சிறந்த உடற்பயிற்சியாகவும் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

எந்த ஒரு நீச்சல் குளத்தை பார்த்ததும் அனைவருக்கும் ஒரு குளியல் போட வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால், அதற்கு முன் நாம் அந்த தண்ணீரின் தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.

Things to keep in mind while swimming

தண்ணீரில் உள்ள குளோரினின் அளவை நிச்சயம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குளோரின் கலந்த தண்ணீரானது சருமத்திற்கும் முடிக்கும் மட்டுமல்ல கண் பார்வைக்கும் கேடு விளைவிக்கக் கூடும். 

நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது உங்கள் சருமம் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது நாம் அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வெளிபுற நீச்சல் குளம்

வெளிபுற நீச்சல் குளம்

வெளிபுறத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதே சிறந்ததது. ஏனெனில், வெளிபுறத்தில் அமைந்திருந்தால் நச்சு வாயுக்களை அது எளிதில் அகற்றிவிடும்.

உட்புறத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் இவை வெளியேற முடியாமல் உள்ளயே இருந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். எனவே, வெளிபுறத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தையே பயன்படுத்துங்கள்.

 குளோரினின் அளவை சரி பார்க்க வேண்டும்

குளோரினின் அளவை சரி பார்க்க வேண்டும்

நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதற்கு முன்னதாக நீரில் உள்ள குளோரினின் அளவை தெரிந்துக் கொள்ள வேண்டும். அதில் இரசாயத்தின் அளவு அதிகமாக இருந்தால் நீச்சல் மேற்கொள்வதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அது சரும அலர்ஜி மற்றும் கண் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.

நீச்சல் முடித்தவுடன் சவர் குளியல் அவசியம்

நீச்சல் முடித்தவுடன் சவர் குளியல் அவசியம்

நீச்சல் அடித்து முடித்தப்பின்னர் மிதமான சோப்பினை உபயோகித்து சவரில் குளிக்க வேண்டியது மிக முக்கியம். இது உடலில் உள்ள குளோரினை நீக்க உதவும். இது பல்வேறு சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கக்கூடும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

நீச்சல் அடிப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் தண்ணீர் அளவை தக்க வைத்துக் உடலில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.

கண் கியர் அணிந்துக் கொள்வது

கண் கியர் அணிந்துக் கொள்வது

நீச்சல் அடிக்கும் போது கண்களைப் பாதுகாக்க கண் கியர் உபயோகிப்பதே மிகச் சிறந்தது. குளோரின் கலந்த தண்ணீர் கண்களில் பட்டால் அது கண்களை பாதித்துவிடும். இது ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் கண் கியரை உபயோகிக்க வேண்டும்.

ஸ்விம்மர்ஸ் இயர்ஸ்

ஸ்விம்மர்ஸ் இயர்ஸ்

நீச்சல் அடிக்கும் போது காதுகளுக்குள் நீர் புகுந்து விடாமல் இருக்க இயர் பிளக்குகளை உபயோகிக்க வேண்டும். இது இரசாயன தண்ணீர் காதுக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தாமல் தடுத்துவிடும்.

நீச்சல் அடித்தற்குப் பிறகு செய்ய வேண்டியவை

நீச்சல் அடித்தற்குப் பிறகு செய்ய வேண்டியவை

நீச்சல் அடித்து முடித்தப் பிறகு உடனே நீச்சல் உடையை மாற்றி விட வேண்டும். இது உடலில் ஆடை பட்ட பகுதிகளில் எந்த தொற்றுக்களும் ஏறபடாமல் தடுத்துவிடும்.

மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது

மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது

நீச்சல் முடித்தப்பிறகும், அதன் பின் சவர் பாத் எடுத்தப் பின்னும் உடலுக்கு மாய்ஸ்சுரைசர் போட வேண்டியது மிக அவசியம். இது சருமத்தை வறட்சி அடையாமலும் மற்றும் வெடிப்புகள் ஏற்படாமலும் தடுத்துப் பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things to keep in mind while swimming

Things to keep in mind while swimming
Story first published: Monday, April 17, 2017, 18:00 [IST]
Subscribe Newsletter