Latest Updates
-
1 வருடம் கழித்து உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்: ஏப்ரல் மாதத்தில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
கோதுமை ரவா ஊத்தாப்பமும்.. தேங்காய் சட்னியும்.. - டக்குன்னு எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம்...! -
செவ்வாய்-புதன் மீன ராசியில் இணைவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மைசூர் தேங்காய் சட்னி ரெசிபி.. தேங்காய் சட்னிய இந்த மாதிரி செஞ்சு பாருங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் வாக்காளர்கள் மிகவும் குறைவாக உள்ள தொகுதி எது தெரியுமா? -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் நேரத்துல இந்த இனிப்பை செய்யுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
April 2026 Calendar: ஏப்ரல் மாதத்தின் முக்கிய நாட்கள், பண்டிகைகள் மற்றும் வங்கி விடுமுறை நாட்கள்...! -
கல்யாண பந்தி முட்டைக்கோஸ் உருளை மசாலா ரெசிபி... ஒருதடவை இப்படி செய்யுங்க... சூப்பர் சைடிஷா இருக்கும்...! -
ஏப்ரல் மாதத்தில் மகாராஜா போல வாழப்போற 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பெண்களைப் போல ஆண்கள் செய்யும் 10 செயல்கள்!
ஆண்கள் செய்யக்கூடிய செயல்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டால், அதில் சற்றே பெண்களின் சாயல் இருப்பதை எல்லா ஆண்களும் ஏற்றுக் கொள்வார்கள். இதனை ஆண்களின் குணமல்ல என்றோ, பெண் பிள்ளையைப் போல என்றோ அல்லது மோசமானதாகவோ கூட சிலர் கருதுகிறார்கள்.
இது குறித்து செய்யப்பட்ட நேர்முக ஆய்வுகளில் வெளிவந்த சில உண்மைகளை உங்களிடம் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

லோசன்கள் மற்றும் க்ரீம்கள்
தங்கள் துணைவியாரின் லோஷன்கள், பேஸியல் கிரீம்கள் மற்றும் ஷவர் சப்ளைகளை பயன்படுத்துதல். அது ஆண்களின் சென்ட்-ஐ விட நல்ல நறுமணத்தைக் கொடுக்கிறது எனலாம். நான் சொன்னதை பரிசோதித்துப் பாருங்கள்!

நடனம் ஆடுவது
ஆண்கள் யாரும் இல்லாத போது, தங்களுடைய படுக்கை அறையில் தனியாக டான்ஸ் ஆடுவார்கள்.

பல உடைகளை மாற்றுவது
பெரும்பாலான ஆண்கள் வெளியே செல்லும் முன்னர் நிறைய உடைகளை போட்டுப் பார்த்து முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களிடம் கேட்டால் இல்லை என மறுப்பார்கள்.

கண்ணாடி பார்ப்பது
பெண்கள் கண்ணாடி பார்க்காமல் இருக்கவேமாட்டார்கள். ஏன் தங்களது பையில் கண்டிப்பாக ஒரு கண்ணாடியை வைத்துக் கொண்டு தான் எங்கும் சுற்றுவார்கள். அதேப் போன்று தான், ஆனால் ஆண்கள் ஒரு கண்ணாடியிலிருந்து, மற்றொரு கண்ணாடி என தொடர்ந்து போய் பார்த்து, ஒன்றை விட மற்றொன்றில் நன்றாக தோற்றமளிப்பதாக நினைப்பார்கள்.

கைக்கால் நகங்களை அழகுப்படுத்துவது
இதை பெரும்பாலான ஆண்கள் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், இதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று சொல்ல முடியும்.

படம் பார்த்து அழுவது
உணர்வுப்பூர்வமாக இருப்பது ஒன்றும் பெரிய குற்றமல்ல. 50/50-க்கு என்ற விகிதத்தில் ஒரு குழந்தையைப் போல ஆண்களும் திரைப்பட காட்சிகளில் அழுகிறார்கள் என்பது உண்மை.

மேக்கப்
முகத்தில் தேவையற்றிருக்கும் பருவை எப்பாடுபட்டேனும் நீக்கிவிட வேண்டும் அல்லது மேக்கப் போட்டு மறைத்து விட வேண்டும் என்று நினைக்காத ஆண்மகனா நீங்கள்? ஒருமுறை யோசித்து பதில் சொல்லுங்கள்.

ஸ்பா
நல்ல மசாஜை விரும்பாதவர்கள் யாருமில்லை. மேலும் இதனை நீங்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்வீர்கள்.

செலிபிரிட்டி இதழ்கள் அல்லது பெண்களுக்கான இதழ்களை படித்தல்
ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு இதழை விட பெண்களுக்கான செய்திகள் இருக்கும் இதழை படிப்பதில் தான் ஆண்களுக்கு த்ரில் இருக்கும்.

குளிக்கும் போது பாட்டு
குளிக்கும் போது பெண்கள் மட்டும் பாடுவதில்லை, ஆண்களும் தான். அதிலும் தங்களது கனவுக்கன்னியை எண்ணிக் கொண்டு பாடுவார்கள்.



Click it and Unblock the Notifications











