For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?

By Maha
|

உங்கள் நாக்கு நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்களா, இல்லையா என்பதைச் சொல்லும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பழங்கால சீன வைத்திய முறைப்படி, நாக்கு ஒருவரின் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் கூறும். நாக்கின் தோற்றம் மற்றும் நிறத்தைக் கொண்டே ஒருவரின் உடல் நலத்தைப் பற்றி கூற முடியும்.

உங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்!!!

உங்களின் உடல்நலத்தைப் பற்றி அறிய விரும்பினால், ஓர் எளிய சிறிய சோதனையைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் கண்ணாடியின் முன் நின்று நாக்கை நன்கு உற்று கவனிக்க வேண்டும். ஒருவேளை உங்களின் நாக்கில் ஏதேனும் புள்ளிகள் அல்லது வித்தியாசமாக ஏதேனும் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். உங்கள் நாக்கில் தென்படும் வித்தியாசமானதை புறக்கணித்தால், பிற்காலத்தில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உங்கள் விரல் நகங்கள் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்!!!

சரி, இப்போது உங்கள் நாக்கு உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற நாக்கு

சிவப்பு நிற நாக்கு

உங்கள் நாக்கு சிவப்பு நிறத்தில் இருந்தால், உங்கள் உடலில் இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதாக அர்த்தம். குறிப்பாக இந்த மாதிரியான சிவப்பு நிற நாக்கு, சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவோருக்குத் தான் அதிகம் இருக்கும். ஏனெனில் சைவ உணவாளர்களுக்குத் தான் வைட்டமின் பி12 குறைபாடு அதிகம் ஏற்படும்.

பழுப்பு நிற நாக்கு

பழுப்பு நிற நாக்கு

உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பழக்கங்களான புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவோருக்குத் தான் பழுப்பு நிற நாக்கு இருக்கும். உங்கள் நாக்கு பழுப்பு நிறத்தில் இருந்தால், வாய் துர்நாற்றம் வீசும். எனவே பழுப்பு நிற நாக்கில் இருந்து விடுபட, கெட்ட பழக்கங்களைக் கைவிடுவதோடு, தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

வெள்ளைப்படல நாக்கு

வெள்ளைப்படல நாக்கு

உங்கள் நாக்கின் மேல் வெள்ளை அல்லது மஞ்சள் கலந்த வெள்ளைப் படலம் இருந்தால், உங்களுக்கு ஈஸ்ட் தொற்றுகள் உள்ளதாக அர்த்தம். பொதுவாக இப்பிரச்சனையானது அளவுக்கு அதிகமான கேண்டிடா உற்பத்தினால் ஏற்படும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்குத் தான் இம்மாதிரியான நாக்கு இருக்கும்.

சுருக்கங்கள் கொண்ட நாக்கு

சுருக்கங்கள் கொண்ட நாக்கு

முதுமையை எய்தியவர்களுக்குத் தான் இம்மாதிரியான நாக்கு இருக்கும். நாக்கில் விரிசல்கள் மற்றும் வெடிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் ஏற்படும். குறிப்பாக வயதாகிவிட்டால், அவர்களின் நாக்கு இந்த மாதிரி தான் இருக்கும். நாக்குகளில் இப்படி விரிசல்கள் இருந்தால், வாயை சுத்தமாக பராமரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

வெள்ளைப்புள்ளிகளுடன் கூடிய நாக்கு

வெள்ளைப்புள்ளிகளுடன் கூடிய நாக்கு

புகைப்பிடிப்போரின் நாக்கில் இருக்கும் ஒருசில செல்களின் அதிகப்படியான வளர்ச்சியினால் தான் வெள்ளைப்புள்ளிகள் காணப்படுகிறது. ஒருவேளை நீங்கள் புகைப்பிடிக்காதவராக இருந்து, இம்மாதிரியான வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், அதற்கு காரணம் பல் சிராய்ப்பினால் உங்கள் நாக்கு அதிகமாக தேய்மானத்திற்கு உட்படுத்தப்படுவது தான்.

காயங்கள் நிறைந்த நாக்கு

காயங்கள் நிறைந்த நாக்கு

நாக்குகளில் காயங்கள் மற்றும் கொப்புளங்கள் அதிகமாக இருந்தால், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது நாக்கு புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும். இது மிகவும் அரிய கொடிய நோய். எனவே கவனமாக இருங்கள்.

எரிச்சலுடனான நாக்கு

எரிச்சலுடனான நாக்கு

உங்கள் நாக்கில் எப்போதும் ஒருவித எரிச்சல் ஏற்பட்டால், அதனால் காரணம் நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டினால் நாக்கில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது தான். சில நேரங்களில், இறுதி மாதவிடாய் நெருங்குவதால், உங்கள் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Your Tongue Telling You About Your Health?

Have you paid any attention to your tongue lately? Do you know what your tongue is telling you about your health? Well, here is what your tongue is saying.
Desktop Bottom Promotion