For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஸ்ட்ராங்க் தான்...

By Maha
|

Tomato soup
இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடும் முன்பு, அதிகமான அளவு உண்ணக்கூடாது என்பதற்காக சூப்பை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஏனெனில் அதை சாப்பிட்டால், பாதி வயிறு நிறைந்துவிடும். மேலும் சூப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் ஏதேனும் குளிர் காலம், மழைக் காலம் என்றால் போதும், அந்த நேரத்தில் அடிக்கடி சூப் சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றும். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் தக்காளி சூப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை குடிப்பதால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். சொல்லப்போனால் இது ஒரு சிறந்த டயட் மேற்கொள்ளும் போது உடலில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பொருள். அது எப்படியென்று கேட்கிறீர்களா? சரி, இப்போது அதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளங்கள்...

* உடல் எடையை குறைக்க சிறந்த பொருளான இந்த தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியுன் அளவை கரைத்துவிடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. அதிலும் இந்த தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் சூப் செய்து சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும், டயட்டிற்கு டயட் ஆகவும் இருக்கும். மேலும் தக்காளியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். ஆகவே எடை எளிதில் குறையும்.

* இந்த சூப் சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளியால் செய்யப்படுவதால், புற்றுநோய்க்கு சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதனை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால், மார்பக புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

* உடலில் உள்ள அதிகமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள், உடலில் சேராமல் தடுக்கும் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் குறைக்கும். அதனால் இதயத்தில் ஏற்படும் இதய நோய்கள், கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இந்த தக்காளியில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆகவே தக்காளி சூப்பை குடிப்பது நல்லது.

* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் இருப்பவர்கள், நீண்ட நாட்கள் ஆரோகக்கியமாக வாழ தக்காளி சூப்பை குடித்தால், உடலில் புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். அதுவும் தினமும் ஒரு பௌல் தக்காளி சூப்பை குடிப்பது நல்லது. ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள், புகை பிடிப்பதால் உடலை அழிக்கும் பொருளான கார்சினோஜென்னின் சக்தியை குறைத்துவிடுகிறது.

* தினமும் தக்காளி சூப்பை குடித்து வந்தால், சருமம் நன்கு அழகாக, பட்டுப் போன்றும், முகப்பரு மற்றும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கிவிடும். அழகை மட்டும் பெறாமல், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே எலும்புகள், பற்கள் மற்றும் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.

எனவே, தக்காளி சூப் நல்லதா கெட்டதா என்று நினைத்து எதற்கும் பயப்படாமல், இனிமேல் சந்தோஷமாக விரும்பி குடித்து வாருங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகும் பெறும்.

English summary

Tomato Soup Benefits The Health | தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஸ்ட்ராங்க் தான்...

Tomato soup is one of the most commonly made and preferred soup recipes. In the monsoon and winter seasons, everyone likes to have tomato soup. It is filling, healthy and low in fat. Soup diet is one of the most popular diets that is effective to lose weight and stay healthy at the same time.
Desktop Bottom Promotion