For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

15 வருட திருமண வாழ்க்கையின் குற்ற உணர்வு இது! my story #249

பதினைந்து வருட திருமண வாழ்க்கையில் குற்ற உணர்வு பெண் பகிரும் ஓர் உண்மை பக்கங்கள்.

|

இங்கே பெண்களின் உயர்ந்த இலக்கே அவர்களது திருமண வாழ்க்கை தான் என்று நிர்ணயிக்கப்படுகிறது. அது பெண்களாக அல்லாமல் பெரும்பாலும அவர்களைச் சுற்றி இருப்பவர்களாலேயே இப்படி நிர்ணியிக்கப்படுகிறது. காலாகாலத்துல கல்யாணம் பண்றத விட்டுட்டு இன்னும் என்ன படிப்பு வேண்டி கிடக்கு, நல்ல பையனா பாத்து புடிச்சு கொடுத்துட்டா நம்ம கடமை முடிஞ்சது என்று தான் அநேக பெற்றோர் நினைக்கிறார்கள்.

எனக்கு திருமணமாகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகிறது. கணவர் வீட்டிலோ அல்லது கணவரிடமோ சின்ன சின்ன மனக்கசப்புகளைத் தாண்டி பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு குழந்தைகள், அலுவலகம், வீடு என பிஸியாக நாட்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே தான் அந்த ஒரு விஷயமும் என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது. இன்று நேற்றல்ல நான் திருமணம் முடிந்து இந்த வீட்டிற்கு வந்த நாள் முதல்... ஆம், கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாகவே அந்த உறுத்தல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நாள் :

ஒரு நாள் :

காலை ஐந்து மணிக்கு முழிப்பு வந்ததிலிருந்து காலில் சக்கரத்தை மாட்டிக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் காலை தேநீரிலிருந்து,காலை உணவு, லன்ச் என எல்லாம் தயார் செய்து டேபிளில் வைக்க வேண்டும். குழந்தைகளை எழுப்பி தயார் செய்ய வேண்டும். இடையில் கணவருக்கும் எனக்கும் லன்ச் பாக்ஸில் எடுத்து வைக்க வேண்டும். எல்லாரும் கிளம்பினால் நான் வீடு திரும்ப மாலை ஆறு மணி ஆகிடும்.

வந்த களைப்பு தீர சற்று ஆசுவாசமாக உட்கார முடியாது. அம்மா பசிக்கிது என்று இருவரும் அனத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இரவு :

இரவு :

அரக்க பரக்க இரவு உணவு, மறுநாளுக்குரிய காய்கறிகள்,துணி துவைப்பது, பாத்திரம் கழுவது காலையில் வீடு கூட்ட மறந்திறந்தால் அதைக் கூட்டி பெருக்குவது, நல்ல தண்ணீர் வரும் நாட்களை நினைவில் வைத்துக் கொண்டு பிடித்து வைப்பது என இரவு பத்து மணி ஆகிடும்.

தன்னால் முடிந்தளவு கணவரும் உதவி செய்வார். சமையலைத்தவிர பிற வேலைகளில் அவரின் பங்கு நிச்சயம் உண்டு.

குற்ற உணர்வு :

குற்ற உணர்வு :

இவ்வளவு பிஸியான நேரத்திலும் நான் சதா சர்வகாலமும் ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்து கவலைப்படுகிறேன் என்றால் அது எவ்வளவு வலியையும் வேதனையையும் எனக்கு கொடுத்திருக்க வேண்டும்.

என்னையறியாமலேயே திடீரென்று அழுகை வரும். ஏதோ கணவருக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் செய்கிறோம். இந்த குடும்ப வாழ்க்கையில் என்னால் முழுதாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை என் கவனம் முழுவதும் இங்கேயில்லை பிற பெண்களைப் போல கணவர் மற்றும் குழந்தைகள் தான் என்னுடைய உலகம் என்று என்னால் சொல்லிக் கொள்ள முடியவில்லை.

போன் :

போன் :

ஞாயிற்றுக்கிழமை மதிய நேரங்களில் தான் சற்று சாவகாசமாக இருப்பேன். ஊரிலிருந்து அம்மா போன் செய்வார் என்னப்பா எப்டி இருக்க? பசங்க என்ன பண்றாங்க என்ற வழக்கமான விசாரிப்புகளில் ஆரம்பித்து ஒரு வாரக்கதையை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசுவோம்.

ஒரு கட்டத்தில் உரையாடல் தீர்ந்து மௌனமாக நிற்கையில் சட்டென மீண்டும் அந்த நியாபகம் வரும்.... அம்மா உடம்பு எப்டி இருக்கு அப்பா சுகர் ரெகுலரா செக் பண்றாரா வெயில்ல அலைய வேண்டாம்னு சொல்லு இங்க வான்னு சொல்றேன் நீ தான் கட்டிக்கொடுத்த இடம் அங்கெல்லாம் ரெண்டு நாளைக்கு மேல தங்க கூடாதுன்னு பேசிட்டு இருக்க என்ற என் சிந்தனையை மாற்ற முயற்சிப்பேன்... அம்மாவோ அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது போலவே தெரியாது... இங்க எல்லாம் நான் பாத்துகுறேன் அடுத்த லீவு எப்போ? குழந்தைங்கள கூட்டிட்டு வா என்று முடித்துக் கொள்வார்.

அலுவலகம் :

அலுவலகம் :

அன்றைக்கு அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். கழுத்தை நெரிக்கும் வேலையெல்லாம் அல்ல அக்கௌண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை ஆனால் பெரும்பாலும் ஆர்டர் கணக்கு சரி பார்க்க வேண்டிய வேலை தான் எனக்கு இருக்கும்.

திடீரென்று சும்மா இப்டியே தோணிட்டு இருக்கு இதுக்கு மேலயும் இங்க நம்மலால வாழ முடியாது பேசாம ஓடிப் போய்டலாமா சென்னைல இருந்து ஆபிஸ் முடிஞ்சு கோயம்பேடுக்கு ஒரு ஏழு மணிக்கு போனா கூட பஸ் கிடச்சிரும்.

பசங்க :

பசங்க :

நினைக்கும் போதே ஆனந்தமாய் இருந்தது. சம்பளப்பணம் அக்கௌண்டில் இருக்கும் அதை வைத்து மேனேஜ் செய்யலாம். ஒரு வாரத்தில் அங்கே புதிய வேலை தேடிக் கொள்ளலாம் என்று மனதில் அடுத்தடுத்து திட்டங்கள் வகுத்துக் கொண்டேன். எல்லாம் சரி, குழந்தைகள்.... கணவர் என்ன செய்வார்கள்?

ஏழு மணியிலிருந்து அம்மா பசி என்று சிணுங்க ஆரம்பித்து விடுவார்களே.... கணவர் என் மீதும் குழந்தைகள் மீதும் எவ்வளவு பாசத்தை வைத்திருக்கிறார்.

கணவர் :

கணவர் :

திடீரென்று ஒரு நாள் நான் காணவில்லை, இங்கிருந்து இந்த குடும்பத்திலிருந்து நான் ஓட்டம் பிடித்துவிட்டேன் என்பதையறிந்தால் அவர் எப்படி தாங்கிக் கொள்வார் நிலைகுலைந்துவிடமாட்டாரா? அவருக்கு டீ கூட போடத்தெரியாதே.... அவர் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்வார்? நானில்லாமல் குழந்தைகள் இரவில் எப்படி தூங்கும்... அம்மா வேணும் என்று அடம்பிடித்தால் எப்படி சமாளிப்பார்.

இவை எல்லாவற்றையும் விட உன் மனைவி எங்கே? என்று ஊரார் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்?

 இப்போது நான் என்ன செய்ய ? :

இப்போது நான் என்ன செய்ய ? :

எந்தப் பக்கம் நிற்பது என்று முடிவெடுக்கத் தெரியாமல் கையில் ஏந்தியிருந்த கோப்பினை அப்படியே டேபிளில் வைத்தேன். இப்டியே காலம் பூரா மனசுலயே நினச்சுட்டு அழுதுட்டு இருக்க வேண்டியது தானா....

நம்ம வாழ்க்கைய நம்மல வாழ விடாம வேற யார் யாரோ தீர்மானிச்சு இது தான் உன்னுடைய வாழ்க்கை இப்டி தான் நீ வாழணும்னு சொல்லிடறாங்க அதையே விதின்னு ஏத்துட்டு நான் ஏன் வாழணும்...

இப்படி ஒவ்வொரு நாளும் கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்க நிலையான ஒரே முடிவாக முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

அம்மா அப்பா :

அம்மா அப்பா :

நான் வீட்டிற்கு ஒரே மகள். உடன் பிறந்தவரக்ள் யாருமில்லை. இளம் வயதில் பெற்றோருக்கு உறுதுணையாக இருக்கிறோமோ இல்லையோ வயதான காலத்தில் அவர்களுக்கு ஆதரவாய் இருக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம்.

அரக்க பறக்க ஓடியாடி எல்லா வேலையும் செய்தாகிவிட்டது. இப்போது அவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம். இப்போதும் அப்பா வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் அம்மா தன்னால் முடிகிறதோ இல்லையோ வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

ஊர்ல என்ன பேசுவாங்க :

ஊர்ல என்ன பேசுவாங்க :

அம்மா நீயும் அப்பாவும் இங்க என் கூட வந்திடுங்க நீங்க மட்டும் தனியா அங்க என்ன பண்றீங்க என்று பல முறை இங்கே அழைத்துவிட்டேன். இங்கே என்னோடு என் வீட்டில் வசிக்க மறுத்துவிட்டார்கள்.

அம்மாக்களுக்கு மகளின் வீட்டில் வேலை அதிகம் என்று சொன்னால் தான் பொறுக்க முடியாதே.... அம்மா வீட்டு வேலையும் பாத்துட்டு ஆபிஸ் வேலையும் பாக்க முடியல பசங்க வேற ஸ்கூல் முடிஞ்சு சீக்கிரம் வந்திடறாங்க நான் வர்ற வரைக்கும் அவங்கள பாத்துக்கணும் நீயும் அப்பாவும் இங்க வந்து இருந்தா எனக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்ல என்றும் கேட்டு கெஞ்சிப் பார்த்துவிட்டேன்.

வேலைக்கு ஆள் வச்சுக்கோ பசங்கள டியூசன் சேத்துவிடு என்று எதேதோ ஐடியா கொடுத்தர்களே தவிர இங்கு வருகிறேன் என்று தப்பித் தவறியும் சொல்லவில்லை.

குற்றவுணர்ச்சி :

குற்றவுணர்ச்சி :

மகளை பெற்றெடுத்தால் அவளை ஒரு கடனாக சுமையாக மட்டுமே பார்க்கும் வண்ணம் இன்றும் நீடிக்கிறது. இருக்கும் வரையிலும் திருமணத்திற்காக நகை,பணத்தை சேர்த்து திருமணம் கட்டிக் கொடுக்க வேண்டும். அந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதோ இல்லையோ முட்டி மோதி அதிலேயே வாழ்ந்திட வேண்டும்.

கடமைக்கே என்று வாழும் இந்த வாழ்க்கை தேவை தானா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women Feels Guilty After her 15 Years of Marriage Life

Women Feels Guilty After her 15 Years of Marriage Life
Story first published: Monday, May 7, 2018, 14:44 [IST]
Desktop Bottom Promotion