இந்த 10 கேள்விய கேட்டா போதும்... பொண்ணுங்க செம காண்டாயிடுவாங்க...

Posted By: Ashok Raj R
Subscribe to Boldsky

கல்யாணம் என்பது சம்பத்தப்பட்ட கணவன் மட்டும் மனைவி, இருவரின் தனிப்பட்ட விஷயம் மற்றும் உரிமை. கல்யாணமான பெண்கள், தினசரி பல கேள்விகளை தங்களுடைய வாழ்க்கையில் எதிர்கொள்கிறார்கள். சில சமயம், ஒரே கேள்வியை பல முறை, சில நன்கு தெரிந்த நபர்களிடமிருத்து எதிர்கொள்ளும்போது எரிச்சல் அடைகிறார்கள்.

relationship

பெண்கள் இது போல திடீரென்ற கேட்கப்படும் வித்தியாசமான, மழுங்கிய கேள்விகளுக்கு எப்படி பதில் கூறுவது என்று பல சமயம் நினைப்பது உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணமான பெண்கள்

திருமணமான பெண்கள்

சமயங்களில் இது போன்ற சொந்த வாழ்கை மற்றும் விசயங்களை பற்றிய கேள்விகளை அவர்களின் சொந்தகாரர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கங்கள் கேட்கும்போது, பதிலளிக்கும் அவர்கள் மன வேதனை அடைகிறார்கள். இந்த கட்டுரையில், சில பொதுவான, சாதாரணமான மணமான பெண்களிடம் கேட்கப்படும் எரிச்சலூட்டும் கேள்விகளை காணலாம். நான் உங்களிடம் தயவுசெய்து யாரேனும் இது போன்ற கேள்விகளை உங்கள் நண்பர்களிடமோ அல்லது உங்கள் குடும்ப அங்கங்களிடமோ கேட்கும்போது அவர்களிடம் இது போன்ற கேள்விகளுக்கு பதில் கூற அவசியம் இல்லை என்று புரிய வையுங்கள். அப்படி என்னென்ன கேள்விகளெல்லாம் திருமணமான பெண்களிடம் கேட்கக்கூடாது என்று பார்ப்போமா?...

எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள போகிறீர்கள்?

எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள போகிறீர்கள்?

இது பொதுவாகவே ஓவ்வொரு நாளும், ஓவ்வொரு தருணமும் கல்யாணம் ஆனா பெண்கள் எதிர்கொள்ளும் கேள்வி. தானும் தனது கணவனும் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் சொந்த தனிப்பட்ட விஷயம். மற்றவர்கள் அதை ஏன் கேட்கவேண்டும்? வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த கேள்வி எந்த அளவுக்கு கேட்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்பதுதான்? இதுவும் ஒரு வகை கிசுகிசு வகை கேள்வியாகும்.

இது போன்ற கேள்விகளை தவிருங்கள், எந்த பெண்ணும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பமட்டாள். செக்ஸ் போலவே இது அவர்களின் மிகவும் தனிப்பட்ட மற்றும் சொந்த விஷயமாகும். இதுபோன்ற கேள்விகளால் பெண்கள் மிகவும் எரிச்சலடைகிறார்கள்.

ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்?

ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்?

இது ஒரு மிகவும் அபத்தமான கேள்வி இதை கேட்கத்தான் வேண்டுமா? பெண்கள் வேலைக்கு செல்வதால் அவர்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள். கணவன் வேலைக்கு செல்லும் நிலையில், அவர்களின் மனைவிகள் வேலைக்கு செல்ல கூடாது என்று ஏன் மற்றவர்கள் நினைக்க வேண்டும்? ஏன் அந்த கேள்வியை கேட்கவேண்டும்? இரட்டை சம்பளம் என்பது ஒரு குடும்பத்திற்கு வேண்டாத விஷயமல்ல, கல்யாணமான பெண்கள் வேலைக்கு செல்வதில் என்ன தப்பு உள்ளது?

படித்த மருமகள் என்பவள் குடும்பத்தின் கவுரவம் உயர காரணமாகிறாள். கல்யாணமான பெண்கள் வேலைக்கு செல்லவேண்டுமா அல்லது வேண்டாமா என்பது தம்பதிகளின் சொந்தமான முடிவு இதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் இதில் இடை பட கூடாது. இது போன்ற கேள்விகள் கல்யாணமாகி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்

மெலிஞ்சிட்டீங்க... கணவருடன் எதாவது பிரச்சனையா?

மெலிஞ்சிட்டீங்க... கணவருடன் எதாவது பிரச்சனையா?

கல்யாணமான பெண்களுக்கு விகைப்புக்குரிய மற்றும் எரிச்சலூட்டும் கேள்வி மட்டுமல்ல, இது அவர்களை அடி மனதை காயப்படுத்தும் கேள்வி. அவர்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி என்னவென்றால், என் கணவர் காரணமாக நான் மெலிந்து வருகிறேன் என்று யார் இவர்களிடம் சொல்லியது? நீங்கள் எப்படி முட்டாள்தனமான கற்பனையை செய்யலாம்? எடை குறைவது எனபது ஒரு இயற்கையான உடல் சார்ந்த செயல். அப்படியே, கணவருடன் பிரச்சனை ஏற்பட்டால் கூட, அது பெண்களுடைய தனிப்பட்ட பிரச்சினை. அதை அவர்கள் ஏன் வெளியே சொல்ல வேண்டும்? இது போன்ற கேள்வியை நீங்கள் எப்படி கேட்கலாம்? இது போன்ற சில கேள்விகள் வரும்போது பெண்கள் உடைந்து போகிறார்கள். இது பெண்களை எரிச்சலூட்டுவது மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த காரியங்களில் உரிமை மீறி அடுத்தவர்கள் தலைடுவதாக ஆகும்.

யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

கேள்வி கேட்பவர்கள் திருமணமான பெண்ணிடம் இருந்து ஒரு வேளை எதிர்பார்ப்பது இப்படிபோன்ற பதிலைத்தான் - 'அவர் பகல் நேரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார், நான் படுக்கையில் இருக்கும்போது ஆதிக்கம் செலுத்துகிறேன்'. பெண்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்பும் சில விஷயங்களை பற்றி அடுத்தவர் தெரிந்துகொள்ள விரும்புவது அவசியமில்லை, பெண்கள் விரும்பினால் அதை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பது ஒரு பெண்ணின் மனதில் எரிச்சலை அதிகரிக்கும்.

கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா?

கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா?

அது உங்கள் விருப்பம். ஒரு திருமணமான பெண் உங்களுக்கு எப்படி இக்கேள்விக்கு பதில் அளிப்பார்? சில நேரங்களில், நண்பர்களும் இளைய சகோதர, சகோதரிகளும் இக்கேள்வியை கேட்க்கக்கூடும். திருமண அனுபவம் எனபது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். வேறு ஒருவரின் அனுபவத்தின் அடிப்படையில், நீங்கள் உங்கள் முடிவுகளை எடுத்தால் நீங்கள் ஒரு முட்டாள், வேறு என்ன சொல்வது. ஒரு திருமணமான பெண்ணிடம் இதைக் கேட்பது உங்களுக்கு உதவாது. திருமணமான பெண்களிடமிருந்து இது போன்ற கேள்விகளை கேட்பதும் பதிலை எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றது. நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், நினைத்தால் செய்து கொள்ளுங்கள்.

நன்றாக சமைக்க தெரியுமா?

நன்றாக சமைக்க தெரியுமா?

பதில் ஆம் அல்லது இல்லை என்பது வேறு விஷயம். முக்கிய விஷயம் என்னவென்றால், சமைக்க தெரிந்தாலும் கூட, தினமும் சமைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா எனபது அவர்களின் சொந்த விஷயம். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

ஆண் நண்பர்களை கணவர் அங்கீகரிப்பரா?

ஆண் நண்பர்களை கணவர் அங்கீகரிப்பரா?

இது ஒரு பெண்ணின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை நேரடியாக பாதிக்கும் கேள்வி. ஒருவரின் நேர்மையைப் பற்றி கேள்விகளைக் கேட்காதீர்கள், அது தவறு. இது அவள் கணவரின் சொந்த விருப்பம், ஆம் இல்லை என்ற அந்த பதில் உங்களுக்கு உதவாது, ஒருவேளை பதில் வதந்தியை உண்டாக்கலாம்.

கணவர் தேவைகளை பூர்த்திசெய்கிறாரா?

கணவர் தேவைகளை பூர்த்திசெய்கிறாரா?

இந்த கேள்வி மிகவும் கடுமையானதும் மற்றும் மிகவும் தனிப்பட்டதுமாகும். கேள்வி கேட்பவர் திருமணமான பெண்ணுக்கு அன்னியர் ஆக இருக்கும் நிலையில், அது அவளுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கும், இந்த கேள்வியின் வலியை அவளால் தாங்கமுடியாது.

சச்சரவுகள் உண்டாகுமா?

சச்சரவுகள் உண்டாகுமா?

நீங்கள் அவளுக்கு மிகவும் நெருங்கிய நபராக இல்லாத பட்சத்தில் இதுபோன்ற மிகவும் சொந்த மற்றும் தனிப்பட்ட கேள்விகளை கேட்கக்கூடாது. அவளது சொந்த திருமணமான வாழ்க்கையில் கஷ்டம் ஏதேனும் இருந்தால் அவள் நெருங்கிய நபர்களிடம் தானாகவே சொல்லுவார். நீங்கள் அவளுக்கு நெருங்கிய நபராக இல்லாத பட்சத்தில் இந்த கேள்வி அவளை வெறுப்படைய வைத்து எரிச்சலுட்டும்

 இரண்டாவது குழந்தை எப்போ?

இரண்டாவது குழந்தை எப்போ?

முதல் குழந்தையைப் பெற்ற பிறகு, அடிக்கடி இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏற்கனவே ஒரு குழந்தைக்கு என்ற பொறுப்பு உள்ளது, இன்னொரு குழந்தை எனபது இந்த பொறுப்பை அதிகரிக்கும். இது அவ்விருவரின் சொந்த விருப்பதை பொறுத்தது. இத்தகைய கேள்விகளைக் கேட்டு பெண்களைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல, இது போன்ற முட்டாள் தனமான கேள்விகள் தவிர்க்க வேண்டிய கேள்விகளாகும்.

இந்த 10 பொதுவான கேள்விகள் கல்யாணமான பெண்களிடம் கேட்கப்படும் போது அவர்கள் சங்கடமும் எரிச்சலும் அடைகிறார்கள். கல்யாணமான பெண்களிடம் கண்ணியமாகவும் அமைதியாகவும் நல்ல கேள்விகளை மட்டும் கேட்கவேண்டும், எரிச்சலை உண்டாக்கும் வகையிலான மேற்கண்டது போன்ற கேள்விகளை தவிர்க்கவேண்டும்

இந்த கட்டுரை குறித்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுத தயங்கதீர்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Never Ask A Married Woman

Marriage is a personal affair and the rights are with the couple alone.
Story first published: Tuesday, April 17, 2018, 12:20 [IST]