தாம்பத்தியம் பற்றி நடுவயது ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இளமை துள்ளும் வரை தான் தாம்பத்தியம் பெரிய விஷயமாக இருக்கும். நடுவயதை எட்டும் போது தாம்பத்தியத்தை தாண்டிய ஒரு விஷயம் உங்கள் வாழ்வில் எட்டிப்பார்க்கும். அது உடல் ரீதியான சந்தோசங்களை தாண்டி, மன ரீதியான சந்தோசங்களை தரும்.

அதற்காக யாரும் நடுவயதில் தாம்பத்தியத்தில் ஈடுபடமாட்டார்கள் என்றில்லை. ஆனால், அது வேறுவிதமாக இருக்கும். இளம் வயது தாம்பத்திய உறவும், நடுவயது தாம்பத்திய உறவும் முற்றிலும் வேறுபடும். பல மாற்றங்கள் காணப்படும்.

அவை என்னென்ன என்று இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருப்தி!

திருப்தி!

இளம் வயதில் இருப்பது போன்ற திருப்தி நடுவயதில் அமையாது என்பார்கள். ஆனால், அது தவறு. இளம் வயதை விட நடுவயதில் தான் தாம்பத்திய உறவு சிறக்கும். இங்கு ஈட்படுதலை காட்டிலும் அன்பும், இருவர் மத்தியிலான உறவின் நெருக்கும் காரணத்தால் உண்டாகும் மகிழ்ச்சி அதிகம் இருக்கும். இது உடல் ரீதியான இன்பத்தை கடந்ததாக இருக்கும்.

துரோகம்!

துரோகம்!

நடுவயதிலும் இச்சை உணர்வின் காரணமாக ஒரு துணை செய்யும் துரோகம் உறவை நரகமாக்கும். பிரிய முடியாவிட்டாலும் கூட, கொடூரமான வலியை ஏற்படுத்தும்.

சமநிலை உணர்வு!

சமநிலை உணர்வு!

இளம் வயதில் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுவதன் காரணத்தால் தாம்பத்தியத்தில் இணைவைத்து பொதுவாக இருக்கலாம். ஆனால், நடுவயதில் இருவருக்கும் உணர்வு சமநிலையாக உண்டாகும் போது இணைவது தான் சரியானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும்.

ஆண்மையியக்குநீர்!

ஆண்மையியக்குநீர்!

"TESTOSTERONE" எனப்படும் ஆண்மையியக்குநீர் 30 - 40 வயதுக்கு மேல் மெல்ல, மெல்ல திறன் குறைய ஆரம்பிக்கும். இதனால் முன்பை போல சரியானது செயல்பட முடியாமல் போகலாம்.

நீடித்த செயல்பாடு!

நீடித்த செயல்பாடு!

இளம் வயதை கட்டிலும் நடுவயதில் தான் தாம்பத்தியத்தில் நீடித்த செயல்பாடு இருக்கும். இதற்கு காரணம் இருவர் மத்தியில் நிலவும் அந்த நெருக்கம், புரிதல், அன்பு தான். வெறும் உடலுறவு என்றில்லாமல், அது வேறுவிதமாக அமையும்.

வயது சார்ந்த ஈர்ப்பு!

வயது சார்ந்த ஈர்ப்பு!

சில ஆய்வுகளின் அறிக்கைகளில் வயதாக, வயதாக ஆண்களின் வயது சார்ந்து பெண்களின் மீதான ஈர்ப்பு வேறுபாடும் என்கின்றனர். 20 வயதில் இணையான வயது கொண்ட பெண்ணின் மீது ஈர்ப்பு இருக்கும். 20 வயதுக்கு மேல் 25 - 30 வயதுடைய பெண் மீது ஈர்பிருக்கும். 40 க்கு மேல் 43 - 49 வயதுடைய பெண்கள் மீது ஈர்ப்பு உண்டாகும் என கூறப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியம்!

உடல் ஆரோக்கியம்!

நடுவயதில் ஆண்மை குறைய ஆரம்பிக்கும் எனினும், இது உடல் ஆரோக்கியம் சார்ந்தது. அதிக உடல் பருமன் இருந்தால் மிகவும் மோசமாக இருக்கும். தாம்பத்தியம் என்று மட்டுமில்லாமல், இதர உடல்நலக் குறைபாடு ஏற்படவும் உடல் பருமன் காரணமாக விளங்கும். எனவே, உடல் பருமன் மீது அக்கறை செலுத்தி ஃபிட்டாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

நடுவயதில் தாம்பத்தியத்தில் தாக்கத்தை உண்டக்கும் மற்றுமொரு விஷயம் மன அழுத்தம். கண்டிப்பாக வேலை, குடும்ப பொறுப்புகள், பொருளாதாரம் என பல விஷயங்கள் மன அழுத்தம் உண்டாக காரணியாக அமையலாம். எனவே, மன அழுத்தம் கட்டுப்படுத்த முயற்சியுங்கள்.

மனைவியை குஷிப்படுத்த செய்ய வேண்டியவை!

மனைவியை குஷிப்படுத்த செய்ய வேண்டியவை!

நடுவயதில் தாம்பத்தியத்தை தவிர, உங்கள் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.

  1. சின்ன, சின்ன பரிசு,
  2. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துக் கொள்வது,
  3. எங்கேனும் ஒன்றாக அவர்களுடன் சென்று வருவது,
  4. அவர்களுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்வது,
  5. பிள்ளைகள் வளர்ப்பில் அக்கறை காட்டுவது,
  6. அவ்வபோது ஆசையான முத்தங்கள்,
  7. நேரம் கிடைக்கும் போது கட்டிப்பிடி வைத்தியங்கள்,
  8. தினமும் அவர்களுடன் பத்து நிமிடம் அவர்களை பற்றி பேசுதல்!
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Middle Age Men To Learned About Intercourse

Things Middle Age Men To Learned About Intercourse
Story first published: Friday, January 6, 2017, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter