காலங்காலமா ஆம்பிளைங்களோட இந்த "ஒரு" அட்டூழியத்த தாங்க முடியல - குமுறும் பெண்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி, திருமணமாகாதவராக இருந்தாலும் சரி, இந்த சூழலை நீங்கள் கட்டாயமாக கடந்து வந்திருப்பீர்கள்.

இந்த தொல்லையை உங்கள் அப்பா, அம்மாவிற்கு கொடுத்து பார்த்திருக்கலாம். அல்லதே நீங்களே உங்கள் மனைவிக்கு கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

On This Thing Men Become Drama Kings and Drama Queens Become Beyond The Normal!

திடீர் கால நிலை மாற்றம் அல்லது ஏதேனும் காரணத்தால் சளி, காய்ச்சல் கொஞ்சம் அதிகமாக பிடித்துவிட்டால் போதும். அம்மம்மா, அப்பப்பா... வீட்டில் இருக்கும் இந்த பெரிய குழந்தைகளின் தொல்லை தாங்க முடியாது.

காலங்காலமா இந்த ஆம்பிளைங்களுக்கு இதே வேலையா போச்சு... என தங்கள் குமுறல்களை கொட்டுகிறார்கள் பெண்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செத்துருவனோ...?!?!

செத்துருவனோ...?!?!

குமுறல் #1

சளி, காய்ச்சல் அதிகபட்சம் ஐந்தாறு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், கணவன், மனைவி வாழும் வீட்டில் இது எப்படி தெரியுமா இருக்கும்?

காய்ச்சல் / சளித்தொல்லையால் அவதிப்படும் கணவன், மனைவி... அந்நிலையை குறித்து மனைவி கூறும் ஒன்லைன் டிஸ்க்ரிப்ஷன்...

"நான் சமையற்கட்'ல சமைச்சுட்டு இருக்கேன்... அவரு படுக்கையில செத்துக்கிட்டு இருக்காரு..."

ஆண்கள், சின்ன சின்ன பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இந்த சளி, காய்ச்சல் ஏற்படும் தருணங்கள்.

இதே தனக்கென்றால்...

இதே தனக்கென்றால்...

குமுறல் #2

இதே காய்ச்சல் ஒரு நாள் மனைவிக்கு வந்தது, அதுவும் நிமோனியா காய்ச்சல்...

கணவர் : இந்த சிட்டுவேசன்லயும் நீ அங்க போயே ஆகணுமா....

நான்: ஆமா...

கணவர் : ......... (மௌனத்துடன்...)

நான்: வெறும் நிமோனியா தானே.... ஒன்னும் ஆகாது!

சாவை சேலை கொசுவத்தில் சுருக்கி வைத்துக் கொண்டு திரியும் தைரியசாலிகள் பெண்கள் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. எவ்வளவு கடினமாக சூழலாக இருந்தாலும் அதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள்.

ஆயிரம் குழந்தைகளை போல்...

ஆயிரம் குழந்தைகளை போல்...

குமுறல் #3

கணவனுக்கு காய்ச்சல், சளி காரணமாக உடல்நலம் குன்றி போவதும், ஆயிரம் குழந்தைகளை ஒற்றை பெண் பார்த்துக் கொள்வதும் ஒன்று தான்.

நொடிக்கு நொடி புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஏதோ, அடுத்த நொடியே பெரிதாக ஏதாவது வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிடும். கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு ஒரு அடி நகர விட மாட்டார்கள்.

ரிலாக்ஸ் ஆகணும்...

ரிலாக்ஸ் ஆகணும்...

குமுறல் #4

எங்களுக்கு காய்ச்சல் தொல்லை வரும் போது தேவைப்படும் எனர்ஜியைவிட, கணவனுக்கு காய்ச்சல் வரும் போது அதிக எனர்ஜி தேவைப்படுகிறது. கால்களில் சக்கரம் கட்டுக் கொண்டு சுழன்றால் கூட பத்தாது. ஒரு நாளுக்கு 24 மணி நேரம் பத்தவே பத்தாது.

வேற லெவல்....

வேற லெவல்....

குமுறல் #5

நான் நிறைமாத கர்ப்பிணி (9 மாதங்கள்), என் கணவருக்கு வெறும் சளி தான். எங்களில் யார் அதிக வலி, வருத்தம், புலம்பல்கள் கொண்டிருப்பார்கள் என எண்ணுகிறீர்கள்....? நிச்சயம் என் கணவர் தான். ஏனெனில், சளி உலகின் கொடுமையான நோய் அல்லவா.

இருள் சூழப் போகிறது...

இருள் சூழப் போகிறது...

குமுறல் #6

"எனக்கென்னவோ என் கணவருக்கு அடுத்த ஐந்தாறு நாட்கள் சளித்தொல்லை இருக்கும் என கருதுகிறேன். அடுத்த ஒரு வாரம் நான் ஒரு இருள் சூழ்ந்த கிரகத்தில் தான் வாழப்போகிறேன்."

இப்படி நீங்க என்னிக்காவது பொண்டாட்டிய இம்சை பண்ணியிருக்கீங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

On This Thing Men Become Drama Kings and Drama Queens Become Beyond The Normal!

On This Thing Men Become Drama Kings and Drama Queens Become Beyond The Normal!