மனைவியிடம் கணவன்மார்கள் கேட்க தயங்கும் 12 கேள்விகள்!

Posted By:
Subscribe to Boldsky

கட்டுன புருஷனாவே இருந்தாலும், பொண்டாட்டிக்கிட்ட ஒருசில விஷயம் பேச பயம் இருக்கும். அதுலயும், பொண்டாட்டி தாசனாக இருந்தால், ஒரு டீஸ்பூன் அச்சம் கூடுதலாவே இருக்கும்.

நாம சும்மா இருந்தாலும், நம்ம வாய் சும்மா இருக்காது. ரோட்டுல போற ஓணானா, வேஷ்ட்டிக்குள்ள எடுத்து விட்ட கதையா... இந்த கேள்வி கேட்டா அவ பத்திரகாளியா மாறிடுவா என தெரிஞ்சும், அந்த கேள்வியை கேட்டு வாங்கிக்கட்டிக் கொள்வார்கள் சில கணவன்மார்கள்.

இது ஜஸ்ட் ஃபார் ஃபன் தான் என்றாலும், ஒருசில சூழலில் இந்த Fun தான், சண்டையை பெரிதாக்கும் Gun-னாகிவிடுகிறது...

சரி, வாங்க... என்னென்ன கேள்வி கேட்டு தேவையில்லாம பொண்டாட்டிக்கிட்ட மாட்டிக்கக் கூடாதுன்னு பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெயிட்டு...

வெயிட்டு...

"நீ கொஞ்சம் வெயிட்டு போட்டுட்ட போல...?"

இந்த கேள்விய தயவு செஞ்சு கேட்டுடாதீங்க... ஒய் பிகாஸ்... கோபம், அழுகை, மன வருத்தம், சண்டை, சச்சரவு என சகல பிரச்சனைகளையும் இழுத்து விடும் விபரீத கேள்வி இது.

ஒரு தடவ...

ஒரு தடவ...

அந்த 3 நாட்களில் (அல்லது) கர்ப்பமாக இருக்கும் போது, "ஒரு தடவ..?" அப்படின்னு அசடு வழிந்துகொண்டே கேட்க வேண்டாம். இது மனிதத்தன்மையற்ற செயலுமாகும்.

கவலையா?

கவலையா?

"அட இவன ஏன்டா கல்யாணம் பண்ணோம்-னு என்னிக்காவது கவலை பட்டதுண்டா?" என்ற கேள்வி ஜென்மத்திற்கும் கேட்டுவிட வேண்டாம். அதன் பிறகு ஓரிரு மணிநேரம் பெரிய குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏடாகூடமாக...

ஏடாகூடமாக...

"நீ என்ன எப்பவாவது ஏமாத்தி இருக்கியா?" என்ற கேள்வி வீட்டிலும், இல்லறத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த அவுட் ஆப் சிலபஸ் கேள்வி எல்லாம் கேட்காதிங்க.

சந்தேகம் இருந்தா, துப்பறிவாளன் விஷால் மாதிரி புலன்விசாரணை செஞ்சு கண்டுப்பிடிச்சுக்குங்க!

இத வாங்கட்டுமா?

இத வாங்கட்டுமா?

உங்களுக்கு ஒன்று வேண்டும் என, "அதை வாங்கலாமா.." என கேட்டால், "ஏன் இப்படி வீண் செலவு பண்றீங்க...?" என்ற பதில் மட்டுமே வரும்.

மற்றபடி ஐ லைனர், மேக்கப் கிட், பலவண்ண காலணிகள், லிப்ஸ்டிக் எக்ஸ்டிரா போன்றவை எல்லாம் வீட்டின் மிக அத்தியாவசிய செலவு பட்டியலில் சேர்கின்றன.

ஓகே வா?

ஓகே வா?

"அதுல நான் கில்லியா? உனக்கு ஓகே வா...?" என உங்க செயற்திறன் குறித்த 18+ அந்தரங்க கேள்வி கேட்டு சிக்கிக் கொள்ள வேண்டாம். ஒருவேளை அவர் விமர்சனம் செய்துவிட்டால்.... மூஞ்சிய எங்க வெச்சுப்பிங்க?

கோபம்!

கோபம்!

மனைவிக்கு பிடிக்காத செயல் ஏதாவது செய்துவிட்டு, அவர் ருத்திர தாண்டவம் ஆட முனைந்து கொண்டிருக்கும் போது, "கோபமா இருக்கியா?" என எரியும் புகையில் சாம்பிராணி போட்டுவிட வேண்டாம்.

போன் செக்கிங்!

போன் செக்கிங்!

சந்தேகம் என்பதும், அதன்பால் ஏற்படும் சண்டைகள் என்பதும் கணவன், மனைவி உறவில் சாதாரணம். ஆனால், அதை தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, வளர்த்துக் கொள்ள கூடாது. ஏதேனும் சந்தேகத்தின் காரணத்தால் மனைவி சண்டையிடம் போது, "வேணும்னா என் போன செக் பண்ணிக்க? இப்போ என்ன என் போன் செக் பண்ணனுமா?" என்ற கேள்வியை கேட்க ஆண்களிடம் அச்சம் ஏற்படுகிறது.

போயே ஆகணுமா?

போயே ஆகணுமா?

"உங்க அப்பா, அம்மா வீட்டுக்கு போயே ஆகணுமா? "

இந்த கேள்விய தைரியமா கேட்டுருவீங்கன்னா உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்குங்க. ஆனா, ஒன்னு, இந்த கேள்விய அவங்க ரொம்ப தைரியமா, அசால்ட்டா கேட்பாங்க...

எதுக்கு?

எதுக்கு?

"எதுக்கு நீ இவ்வளோ மேக்கப் பண்ற...? "

"இல்ல சாதாரணமாவே அழகா தானே இருக்க.. எதுக்கு அழகுக்கு அழகுசாதன பொருட்கள்..."

கேள்விய கேட்டுட்டு, அவங்க கண்ணுல எரிமலை வெடிச்சுட்டு இருக்கும் போது, இது மாதிரி பல சாமாலிச்சிபிகேஷன் டயலாக் ரெடி பண்ணி வெச்சிக்கணும். இல்ல, கதி அம்பேல்!

இது என்ன விலை?

இது என்ன விலை?

அவங்க வாங்கிட்டு வர டிரஸ், செருப்பு, மேக்கப் பொருளோட "விலை என்ன?"-ன்னு கேட்டிட கூடாது... அதுலயும் சம்பாதிக்கிற மனைவிகிட்ட கேட்டுடவே கூடாது...

வெளிய போறேன்...

வெளிய போறேன்...

"நான் என் பிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வரட்டா?"

அதென்னமோ தெரியல, நம்ம பிரண்ட்ஸ கண்டாலே ஏதோ தீவிரவாதி மாதிரி பாக்குறாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Husbands Are Afraid To Ask These Questions to Their Wives!

Husbands Are Afraid To Ask These Questions to Their Wives!
Story first published: Friday, September 22, 2017, 15:24 [IST]