உடல்நலம் குன்றியிருக்கும் மனைவி கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன?

Posted By:
Subscribe to Boldsky

ஒரு குடும்பத்தில் ஆணுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் சரி, பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் சரி அதிகம் அவதிப்படப் போவது அந்த வீட்டின் மூத்த பெண் தான். அவள் தாய், மனைவி, சகோதரி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட நாட்டம் குறைவதற்கான காரணங்கள்!

ஒரு ஆணுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும் போது அனைத்தையும் ஒரு பெண்ணுடன் இருந்து தான் எதிர்பார்ப்பான். ஆனால், பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும் போது பார்த்து பத்திரமா இரு என கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

இல்லறத்தில் பெண்கள் நாட்டமில்லாமல் இருப்பதை வெளிகாட்டும் 10 அறிகுறிகள்!

உண்மையில், மனைவி உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது தன் கணவனிடம் அதிகமாக என்ன எதிர்பார்க்கிறாள் என இனிப் பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரவணைப்பு

அரவணைப்பு

தங்களை அரவணைப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போதும் தன்னை வேலை செய்ய கூறக் கூடாது எனவும், உடன் இருந்து தழுவியப்படியே இருக்க வேண்டும் என 49% பெண்கள் கூறியுள்ளனர்.

சமையல்

சமையல்

உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது தங்கள் உதவி நாடாமல் அவர்களே சமைத்து தங்களுக்கும் உணவு பரிமாறிவிட்டு செல்ல வேண்டும் என 46% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டு வேலை

வீட்டு வேலை

பாத்திரம் கழுவி வைத்தல், துணி துவைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்றவற்றை அவர்களே செய்து விட வேண்டும் என 34% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்து

மருந்து

உடல்நலம் மேம்பட தேவையானவற்றை உடனுக்குடன் செய்ய வேண்டும் என 29% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை

சிகிச்சை

மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், சிகிச்சை முடியும் வரை அன்புடன் பார்த்துக்கொண்டு அழைத்து வர வேண்டும் என 26% பேர் தெரிவித்துள்ளனர்.

சுடுநீர்

சுடுநீர்

சுடுநீர் வைத்து பாட்டிலில் ஊற்றி தன்னருகில் வைத்துவிட்டு செல்ல வேண்டும் என 16% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உடன் இருப்பது

உடன் இருப்பது

மற்ற வேலைகளை உதறி தள்ளிவிட்டு தன்னுடன் இருந்து தன்னை தனியாக விட்டுவிடாமல் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என 11% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

டிவி ரிமோட்

டிவி ரிமோட்

தாங்கள் விரும்பும் சேனல்களை பார்க்க ஒப்புக் கொண்டு டிவி ரிமோட்டை சமத்தாக தங்களிடம் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும் என 11% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கவனிப்பு

கவனிப்பு

மற்ற வேலைகளைவிட தங்கள் மீது அதிகமாக கவனம் செலுத்த வேண்டும், தும்மினால், இருமல் வந்தால் அடுத்த அரைநொடியில் "என்ன ஆச்சும்மா.." என அருகே வந்து நிற்க வேண்டும் என 10% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மசாஜ்

மசாஜ்

உடல்நலன் குன்றியிருக்கும் போது உடல் சோர்வாக, அசதியாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் மசாஜ் செய்துவிட வேண்டும் என 7% பேர் தெரிவித்துள்ளனர்.

அழைப்புகளை ஏற்பது

அழைப்புகளை ஏற்பது

தங்களுக்கு வரும் அழைப்புகளை ஏற்று, " நீங்கள் தொடர்புக் கொள்ளும் நபர் இப்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார், பிறகு தொடர்பு கொள்ளுங்கள்" என்று கூற வேண்டும் என 6% பேர் தெரிவித்துள்ளனர்.

தொல்லை இல்லாமல்

தொல்லை இல்லாமல்

தங்களுக்கு தொல்லை கொடுக்காமல் இரவு பக்கத்து அறை அல்லது ஹாலில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும் என 4% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உடலுறவு

உடலுறவு

உடலுறவில் ஈடுபட வேண்டும் என 2% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Do Women Really Want From Their Partners When They Are Sick

What Do Women Really Want From Their Partners When They Are Sick? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter