காலையில் எழுந்ததும் உங்கள் மனைவியுடன் சேர்ந்து நீங்கள் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலக்கட்டத்தில் கணவன், மனைவி அவரவரை வீட்டில் பார்ப்பதே அரிதாகி வருகிறது. மனைவிக்கு மார்னிங் ஷிப்ட், கணவனுக்கு நைட் ஷிப்ட். பணம் தேவை தான். ஆனால், அதை எதற்காக சம்பாதிக்கிறோம், யாருக்காக சம்பாதிக்கிறோம். நாம், சம்பாதிப்பதன் மூலம், நாம் அனுபவிப்பதை விட இழப்பது தான் அதிகமாகி வருகிறது. இதை ஏன் நாம் உணர்வதில்லை.

காலை எழுந்ததும் உங்கள் மனைவியை பாராட்டி, சீராட்டி கொஞ்சாமல் இருந்தாலும், குறைந்த பட்சம் இந்த ஆறு விஷயங்களையாவது செய்யுங்கள். இல்லற வாழ்க்கை பூஞ்சோலையாக மாறும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விஷ் பண்ணுங்க ஜி!

விஷ் பண்ணுங்க ஜி!

காலையில் எழுந்ததும் குட் மார்னிங் என கூறி துவங்குங்கள். இரவு தூங்கும் போது குட் நைட் சொல்லி உறங்குங்கள். அதாவது, நீங்கள் உங்கள் நாளை ஆரம்பிப்பதும், முடிப்பதும் உங்கள் துணையுடனாக என்பது தான் இது. இது சின்ன விஷயம் தான் ஆனால், தம்பதிக்குள் பிரிவு உண்டாகாமல் இருக்கவும், நீங்கள் அவர் மீது அதிக பிரியம் வைத்திருக்கிறீர்கள் என்பதையும் இது வெளிப்படுத்தும் செயல் இதுவாகும்.

பத்து நிமிடம்!

பத்து நிமிடம்!

உங்கள் வேலையை துவக்கவதுற்கு ஏற்ப தினமும் எழுவதை காட்டிலும் பத்து நிமிடம் முன்பே எழுந்து உங்கள் துணையுடன் பத்து நிமிடம் பேசுங்கள். இன்று என்ன செய்ய போகிறீர்கள், மாலை வீடு திரும்பியவுடன் என்ன செய்யலாம் என்பது குறித்து கொஞ்சம் ஆலோசியுங்கள்.

கொசுறு புகழ்ச்சி!

கொசுறு புகழ்ச்சி!

காலையில் அவர் காபி கொடுக்கும் போது, சமையல் பரிமாறும் போது, டவல் எடுத்து கொடுக்கும் போது, தலை துவட்டி விடும் போது என அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சுங்கள், புகழுங்கள். இது இருவர் மத்தியிலான உறவை மேலும் வலுவாக இணைக்கும்.

விரக்தியை வெளிப்படுங்கள்!

விரக்தியை வெளிப்படுங்கள்!

ஆபீஸில் மேனேஜர் கத்துகிறார்,டார்கெட் தலைக்கு மேல் திணிக்கிறார்கள், ஜால்ரா பேர்வழிகள் என உங்களை விரக்தி அடைய வைக்கும் விஷயங்களை உங்கள் துணையிடம் கூறுங்கள். இதற்கு அவர்களால் தான் நல்ல தீர்வும், ஆறுதலும் கூற முடியும்.

பாருங்க!

பாருங்க!

ஒருவரை, ஒருவர் சற்று நேரம் முகம் பார்த்து பேசுங்கள், உணருங்கள். உங்கள் காதலுக்குரிய துணையின் முகம் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு சிறந்த மருந்தாகும். (இதவிடவா ஒரு பெரிய பிரச்சனை வந்திடும்)

கொஞ்சம் சிரியுங்கள்!

கொஞ்சம் சிரியுங்கள்!

கொஞ்சம் சிரிக்கலாம், கொஞ்சியும் சிரிக்கலாம். ஆப்ஷன் உங்களுடையது. ஆனால், கோவத்துடன் ஆரம்பிக்காமல். கொஞ்சம் சிரித்த முகமாக அந்த நாளை உங்கள் துணையுடன் ஆரம்பிக்க தவற வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Things You Should Do With Your Wife As Soon As You Wake Up

Six Things You Should Do With Your Wife As Soon As You Wake Up,
Story first published: Friday, September 30, 2016, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter