இந்த 7 கேள்விகளை உங்கள் மனைவியிடம் ஒருமுறையாவது கேட்டதுண்டா?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே தனிப்பட்ட விருப்ப, வெறுப்புகள் இருக்க தான் செய்கிறது. நான் வேலைக்கு போகிறேன், நீ வீட்டிலே இருக்கிறாய், உனக்கு என்ன அப்படி? என எளிதாக கேட்டுவிட முடியாது. நீங்களாக இது அவர்களுக்கு பிடிக்கும் என கருதி செய்வதற்கும், அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியும் எல்லையற்றதாக மாறுகிறது.

உறவில் அலுப்பு ஏற்பட்டது போல தோன்றுகிறதா? இந்த 5 வழிகளை முயற்சியுங்கள்!

எப்படி இருக்கிறாய், என்ன சமைத்தாய், என்ன செய்கிறாய் என்ற பொதுவான கேள்விகளை போல வேறு சில கேள்விகளையும் நீங்கள் உங்கள் மனைவியிடம் அன்றாடம் கேட்டு வந்தால், உங்கள் உறவில் இருக்கும் காதலும், இறுக்கமும் மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன...

இந்த 7 விஷயம் பொய்யின்னு தெரிஞ்சா உங்க கதி அதோகதிதான்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்?

உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்?

இந்த கேள்வியை நீங்கள் உங்கள் மனைவியிடம் கேட்கும் போது அவர்கள், இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான நபராக மாறுகிறார். இது உறவில் காதலை அதிகரிக்க செய்யும் கேள்வியாகும்.

இது நல்ல நேரமா?

இது நல்ல நேரமா?

தனது துணை தன்னிடம் மரியாதையாக நடந்துக் கொள்வதை பெண் மிக கௌரவமாக கருதுகிறார். இது உங்கள் மீதான மதிப்பையும் அதிகரிக்கும். உங்கள் மனைவிக்கும் வேலை இருக்கும், எனவே, அவரிடம் பேசுவதற்கான நேரத்தை அவரிடம் கேட்பதில் தவறில்லை. வெளியே செல்வதாக இருப்பினும், எந்த செயலாக இருப்பினும், அவரிடம் கேட்டு செய்யுங்கள், காதல் பெருகும்.

மன்னிப்பு

மன்னிப்பு

மனைவியிடம் மன்னிப்பு கேட்பது இழுக்கு என எண்ண வேண்டாம். உங்கள் சரி பாதி எனும் போது அவரும் உங்களில் ஐக்கியம் தானே, உங்களிடமே நீங்கள் மன்னிப்பு கேட்க தயங்குவது ஏன்?

புரிந்துக் கொள்ள உதவு?

புரிந்துக் கொள்ள உதவு?

நமக்கு தான் அனைத்துமே தெரியும் என்றில்லை. உங்கள் மனைவிக்கும் பலவன தெரிந்திருக்கும். உங்கள் நண்பருக்கு கால் செய்து கேட்கும் முன்னர் உங்கள் துணையிடம் ஒருமுறை கேளுங்கள். சந்தேகங்கள் தீரும், உறவும் சிறக்கும்.

கருத்து?

கருத்து?

உங்கள் வெற்றி, தோல்வி, பார்வை என எதுவாக இருப்பினும், ஒருமுறை உங்கள் மனைவி முன் வெளிப்படுத்தி கருத்து கேளுங்கள். மனைவியை விட உங்களை மேம்படுத்த வேறு எந்த நபரும் முன்வர மாட்டார்.

கனவு?

கனவு?

உனக்கு கனவு வந்ததா? என்ன வந்தது என எப்போதாவது உங்கள் துணையிடம் கேட்டதுண்டா. கேட்டுப் பாருங்கள். இது உங்கள் உறவில் சுவாரஸ்யமான தருணங்களை பரிசளிக்கும்.

உன் மகிழ்ச்சி

உன் மகிழ்ச்சி

பெரும்பாலும் நீங்கள் இதை அறிந்து வைத்திருக்க வேண்டும். அல்லது கேட்டாவது தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆம், உங்கள் துணை ஒரு சூழலில் /தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என கேள்வி கேளுங்கள். உறவில் இறுக்கம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Simple Questions That Lead To Happiness In A Marriage

Seven Simple Questions That Lead To Happiness In A Marriage , read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter