உறவுகளினால் பெண்கள் தங்களது உறக்கத்தை தொலைக்கும் தருணங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண் தனது உறக்கத்தை தொலைக்கிறாள். கணவனுக்காக என்று தொடங்கி, கரு, குழந்தை வளர்ப்பு, தாய் உள்ளம் என தனது கடைசி நாள் வரை ஏதேனும் ஓர் உணர்ச்சியின் காரணமாக தனது உறக்கத்தை தனது உறவுகளுக்காக தியாகம் செய்கிறாள் மனைவி, தாய் எனும் கதாப்பாத்திரம் ஏற்கும் பெண்.

தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் சரி, தன் குடும்பத்தில் வேறு யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் சரி உறக்கத்தை தொலைப்பது என்னவோ பெண் தான். இது போன்ற பல தருணங்கள் பெண்களின் வாழ்க்கையில் அவர்களது உறக்கத்தை களவாடி சென்றுவிடுகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவர் வீட்டிற்கு தாமதமாக வருதல்

கணவர் வீட்டிற்கு தாமதமாக வருதல்

திருமணமாகி மூன்று நாட்களாக இருந்தாலும் சரி, முப்பது வருடங்கள் ஆனாலும் சரி, கணவன் தாமதமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் மனைவி தனது தூக்கத்தை தொலைத்துவிடுகிறாள்.

கர்ப்பக் காலம்

கர்ப்பக் காலம்

கர்ப்பமாக இருக்கும் ஆறு, ஏழாவது மாதத்தை கடக்கும் போது கண்டிப்பாக ஓர் பெண் தனது தூக்கத்தை தொலைக்க ஆரம்பிப்பாள். இது இத்துடன் நின்றுவிடுவது இல்லை.

குழந்தை வளரும் போது

குழந்தை வளரும் போது

குழந்தை பிறந்து அது வளரும் போது ஆண்களை விட பெண் தான் அதிகம் தூக்கத்தை தொலைக்கிறாள். பசிக்காக அழுகும் போதும், உடல்நல கோளாறுகளினால் அழுகும் போதும், சமாதானப்படுத்தி உறங்க வைப்பதற்குள் இவளது தூக்கம் காணாமல் போய்விடும்.

பிள்ளைகள் சாப்பிட நேரத்திற்கு வராமல் இருத்தல்

பிள்ளைகள் சாப்பிட நேரத்திற்கு வராமல் இருத்தல்

பெரும்பாலும் பிள்ளை வெளியே சென்று இரவு சாப்பாட்டிற்கு வீடு திரும்பவில்லை எனில், அவன் சாப்பிட்டானோ இல்லையோ என்ற ஏக்கமே தாயின் உறக்கத்தை காணாமல் போக செய்துவிடுகிறது.

கணவன் / பிள்ளைக்கு உடல்நலம் சீர்கெடும் போது

கணவன் / பிள்ளைக்கு உடல்நலம் சீர்கெடும் போது

வீட்டில் யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும், அவர்களை விட அதிகமாக உறக்கத்தை தொலைப்பவள் பெண் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத நிதர்சனம்.

நினைத்தது நடக்காமல் இருக்கும் போது

நினைத்தது நடக்காமல் இருக்கும் போது

எத்தனை செய்தாலும் கூட, தான் நினைத்தது தன் கணவன் அல்லது பிள்ளைகளின் மூலம் நடக்காமல் போகும் போது அந்த பெண் மன அழுத்தத்தின் காரணமாக தனது தூக்கத்தை தொலைக்கிறாள்.

காதல் தோல்வி

காதல் தோல்வி

ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் கூட காதல் தோல்வி தூங்கவிடாமல் செய்துவிடும். இதில் பாலினம் விதிவிலக்கு அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Moments Women Will Lost Their Sleep

There some moments women will lost their sleep completely, take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter