திருமணத்திற்கு பிறகு ஆண்கள் இரவில் செய்யக் கூடாத 6 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

திருமணத்திற்கு பிறகு ஒருசில விஷயங்களை நீங்கள் தொடர்ந்து அனுதினமும் செய்து வந்தால் மனைவியின் சாபத்திற்கும், கோபத்திற்கும் ஆளாக வேண்டிய நிலைமை உண்டாகலாம். இவை ஒன்றும் புதியவை அல்ல, காலம், காலமாக அம்மா சொல்லி, சொல்லி நாம் கேட்காதது தான்.

ஆனால், அம்மா பொறுத்துக் கொள்வார்கள். மனைவி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் அவ்வளவு தான் வித்தியாசம். இந்த 6 விஷயங்களில் மூன்று உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், மூன்று உறவு நலத்திற்கு கேடு விளைவிக்கும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொபைல் நோண்டுவது!

மொபைல் நோண்டுவது!

கண்கள் மற்றும் மூளையின் செயற்திறனை பாதிக்கும் பழக்கம் தான் இது. படுக்கை அறைக்கு சென்ற பிறகும் மொபைலை ஆப் செய்து வைக்காமல், நோண்டிக் கொண்டே இருந்தால், எந்த மனைவிக்கும் பிடிக்காது.

ஓவர் டைம்!

ஓவர் டைம்!

சம்பாதிப்பது அவசியம் தான், ஆனால், ஓவர் டைம் பார்த்து ஓடி, ஓடி உடலில் தேய்மானம் ஏற்படும் அளவிற்கு கஷ்டப்பட தேவையில்லை. இது மனைவியருக்கும் பிடிக்காது.

அதிகம் சாப்பிடுவது!

அதிகம் சாப்பிடுவது!

பொதுவாகவே அதிகம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும். அதிலும் இரவு வேளைகளில் அதிகம் சாப்பிடுவது பெருமளவில் உடல் எடை அதிகரிக்க செய்யும். எந்த மனைவியும், தனது கணவனின் உடல் எடை அதிகரிப்பதை விரும்ப மாட்டாள்.

நைட் ஷோ!

நைட் ஷோ!

திருமணதிற்கு பிறகு நைட் ஷோ போவதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அதிலும் நீங்கள் நண்பர்கள், உடன் பணிபுரியும் நபர்களுடன் செல்வது என்றால் பத்ரகாளியாக மாறிவிடுவார்கள்.

பார்ட்டி!

பார்ட்டி!

குடி குடியை கெடுக்கும், நல்ல உறவுகளை சிதைக்கும். இப்போது குடி பார்ட்டி என்ற பெயரில் உருமாறி சமூகத்தையும், குடும்பத்தையும் சீரழித்து வருகிறது. இதை கொஞ்சம், கொஞ்சமாக நீங்கள் குறைத்துக் கொள்ள தான் வேண்டும்.

நண்பர்களுடன் ரவுண்டு!

நண்பர்களுடன் ரவுண்டு!

அது என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை, நூற்றில் தொண்ணூறு மனைவிகளுக்கு கணவன் அவனது நண்பர்களுடன் எங்காவது வெளியே சென்றால் பிடிப்பதில்லை. இரவில் தான் என்றில்லை, பட்டப்பகலில் சென்றாலும் கூட பிடிக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Men Should Not Do These Things After Marriage

Why Men Should Not Do These Things After Marriage, take a look on here.
Subscribe Newsletter