For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் நீண்ட நாள் வாழ்ந்த இந்திய வம்சாவளி தம்பதி 110 வயதில் மரணம்!

|

ஒரு 15 - 20 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து என்பது எங்கோ, யாரோ ஒருவரின் மூலம் கேள்விப்படுவோம். ஆனால், இன்று நமது குடும்பத்திலேயே குறைந்தபட்சம் தலைமுறைக்கு ஓரிருவர் விவாகரத்து செய்வதை நாம் காண முடியும்.

மேற்கத்தியம், மேற்கத்திய கலாச்சாரம் என்று நமது வாழ்வியலில் உட்புகுந்ததோ அன்றிலிருந்து தான் உறவுகளில் விட்டுகொடுத்து போவது, அனுசரித்து போவது போன்றவை அதிகரித்து, மெல்ல, மெல்ல என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்ற பெயரில் பரஸ்பர விவாகரத்து என பிரிவுகள் அதிகரிக்க ஆரம்பித்தன.

இந்த தலைமுறை குழந்தைகள் 60-ம் கல்யாணம் என்றால் என்ன? என்ற கேள்வி கேட்கும் அளவிற்கு நாம் வந்துவிட்டோம். இத்தனை இருந்தும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு ஜோடி உலகின் நீண்ட நாள் திருமண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என சாதனை புரிந்துள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரம்சந்த்!

கரம்சந்த்!

லண்டனில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான் இந்த கரம்சந்த். இவர் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சில இயற்கை காரணங்களால் மரணம் அடைந்தார்.

90 வருடங்கள்!

90 வருடங்கள்!

கரம்சந்த் இறக்கும் போது அவரது வயது 110, அவரது மனைவி கர்தாரியின் வயது 103. இவர்கள் ஒன்றாக வாழ்ந்த திருமண வருடங்கள் மொத்தம் 90.

உலக சாதனை!

உலக சாதனை!

இவர்கள் அதிகாரப்பூர்வமாக அதிக ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜோடி என்ற உலக சாதனை செய்துள்ளனர்.

சண்டைகளே இல்லை!

சண்டைகளே இல்லை!

இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் கரம்சந்த் மற்றும் கர்தாரி பெரிதாக சண்டையிட்டுக் கொண்டதே இல்லை என கூறுகின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து தான் வாழ்ந்து வந்துள்ளனர் இவர்கள்.

பிறப்பு!

பிறப்பு!

கரம்சந்த் பிறந்தது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பஞ்சாப் பகுதியில். இவர் பிறந்த ஆண்டு 1905. 1925-ல் கரம்சந்த் கர்தாரியை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த தம்பதியினர் கடந்த 1965-ம் ஆண்டு பிராட்போர்ட்-க்கு குடியேறினர்.

நான்கு தலைமுறை!

நான்கு தலைமுறை!

கரம்சந்த் தனது நான்கு தலைமுறையை கண்டுவிட்டார். இவருக்கு எட்டு குழந்தைகள், 27 பேர குழந்தைகள். டஜன் கணக்கில் கொள்ளுப்பேர பிள்ளைகள் இருக்கின்றனர்.

எந்த சாதனையை வேண்டுமானால் தற்போது உலகில் வாழும் மக்கள் முறியடிக்கலாம். ஆனால், கரம்சந்த் - கர்தாரியின் இந்த சாதனையை முறியடிப்பது இனி சாத்தியமற்ற ஒன்று என்பதை மட்டும் அடித்து சொல்ல முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian-origin man in world's longest marriage dies at 110

Indian-origin man in world's longest marriage dies at 110
Desktop Bottom Promotion