ஆண்களை கூலாக வைத்துக்கொள்ள பெண்கள் செய்யும் 10 ட்ரிக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களால் தங்கள் கோபத்தை அதற்குரிய நபரிடம் காண்பிக்க முடியவில்லை எனில், நேராக வீட்டிற்கு வந்து மனைவியிடம் தான் காண்பிப்பார்கள். முக்கியமாக தங்கள் மேலதிகாரியிடம் காண்பிக்க முடியாத கோபங்கள், உடன் பணிபுரியும் நபரிடம் காட்ட முடியாத கோபங்கள் என ஏராளம் இருக்கின்றன.

Girls Do These Ten Unusual Ways To Bring Down Your Ego

எல்லா வீட்டிலும் கணவன், மனைவி மல்யுத்தம் இடுவது போல அடித்துக் கொள்வதில்லை. சிலர் சமயோசிதமாக யோசித்து எப்படி தன் அத்தானின் கோபத்தை குறைக்கலாம் என்று தான் முயற்சிகளில் இறங்குவார்கள். அப்படி வீட்டுக்காரர் கோபத்தில் இருக்கும் போது அதை தணிக்க மனைவிகள் கையாளும் சிலபல ட்ரிக்ஸ் பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்திசாலித்தனம்!

புத்திசாலித்தனம்!

ஆண்களுக்கு தங்களை யாரேனும் புத்திசாலி என பறைசாற்றிவிட்டால் போதும். அவர்களுடன் நெருங்கி நட்பு பாராட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஏனென்றால், ஆண்களை முட்டாள் என்று திட்டினால் அவர்களுக்கு கடும்கோபம் வந்துவிடும்.

எனவே, ஆண்கள் எப்போதாவது அதிக கோபம் அல்லது ஈகோவை வெளிக்காட்டினால், அதை கட்டுபடுத்த பெண்கள், அவர்களது புத்திசாலித்தனத்தை பாராட்டி கூல் செய்துவிடுவார்கள்.

கேட்க வையுங்கள்!

கேட்க வையுங்கள்!

ஆண்களுக்கு கோபம் வருவதும் பெண்கள் பேசுவதால் தான், அந்த கோபம் தணிய காரணமாக இருப்பதும் பெண்களின் பேச்சு தான். ஆண்கள் ஈகோ காரணமாக சூடாகும் போது கூலாக பேச்சை மாற்றி கோபத்தை தணித்துவிடுவார்கள் பெண்கள்.

தனித்திறன்!

தனித்திறன்!

பெண்களுக்கு எப்போதுமே தனித்திறன் கொண்டுள்ள ஆண்களை பிடிக்கும். ஆண்களுக்கு எப்போதும் தங்கள் தனித்திறன் அதிகம் வெளிப்பட வேண்டும், அதை நால்வர் கவனிக்க வேண்டும் என எண்ணுவார்கள். பெண்கள் இதை கண்ணுற்று பாராட்டினால், ஆண்களின் ஈகோ, கோபம் எல்லாம் பஞ்சாய் பறந்து போய்விடும்.

வெளிப்படுத்துதல்!

வெளிப்படுத்துதல்!

காதலை இருவருக்குள் மட்டும் காண்பித்துக் கொண்டிருக்காமல், வெளி நபர்கள், நண்பர்கள் போன்றவரிடமும், நான் அவரை எந்த அளவு காதலிக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் அளவிற்கு அன்பு செலுத்தினால் ஆண்களின் ஈகோ தூள்தூளாகிவிடும்.

இனிய தருணங்கள்!

இனிய தருணங்கள்!

ஆண்களுக்கு பெரிதாக ஞாபக சக்தி இருக்காது. ஆனால், தங்கள் வாழ்வில் நடந்த இனிய தருணத்தை யாரேனும் கவனித்து, மீண்டும் நினைவுப் படுத்தினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள். அதுவே, அந்த நபர் ஒரு பெண்ணாக இருந்தால், சொல்லவே வேண்டாம். உல்லாசத்தில் துள்ளிக் குதிப்பார்கள்.

நடத்தை / ஒழுக்கம்!

நடத்தை / ஒழுக்கம்!

ஆண்களிடம் ஈகோ தென்படும் போது, அவர்களுக்கு தங்களிடம் இருக்கும் எந்த பழக்கம் / நடத்தை பிடிக்காதோ, அதை ஈகோ / கோபம் குறையும் வரை பெண்கள் குறைத்துக் கொள்வார்கள்.

குடும்பம்!

குடும்பம்!

தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதிகளில், கணவன் தொடர்ந்து கோபமாக இருப்பது போல இருந்தால், தன் குடும்பம், அல்லது கணவன் குடும்பத்தாரை வரவழைத்து உபசரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால், ஆண்களில் கோபம் குறையவும், அன்பு அதிகரிக்கவும் வாயப்புகள் அதிகம் இருக்கின்றன.

பதிபக்தி!

பதிபக்தி!

ஒருசில வேளைகளில் பெண்களுக்கு கணவன் அதிகமாக கோபம் கொள்வதாக தெரிந்தால், மொத்தமாக பதிபக்தியுடன் சகலமும் நீங்கள் என்பது போல மாறிவிடுவார்கள். இதனால் ஆண்களின் கோபம் தணியும் என்பது பெண்களின் கருத்து மற்றும் இயல்பும் கூட.

அவராக வரட்டும்!

அவராக வரட்டும்!

சில பெண்கள் ஏன் மீண்டும் மீண்டும் பேசி தொல்லை செய்ய வேண்டும் என, அவராக கோபம் குறைந்து வரட்டும் என காத்திருப்பார்கள். இதுவும் ஒருவகையான ட்ரீட்மென்ட் தான். ஆண்களால் அதிக நேரம் பேசாமல், அவர்கள் குரலை கேட்காமல் இருக்க முடியாது.

லாஸ்ட் சான்ஸ்!

லாஸ்ட் சான்ஸ்!

எதற்கும் கோபம் தணியாத ஆண்கள், கண்டிப்பாக அந்த விஷயத்தில் விழுந்துவிடுவார்கள். ஆசையாக நாலு வார்த்தை, சற்று நெருக்கம் காண்பித்தால், ஆண்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girls Do These Ten Unusual Ways To Bring Down Your Ego

Girls Do These Ten Unusual Ways To Bring Down Your Ego
Story first published: Wednesday, October 12, 2016, 16:00 [IST]
Subscribe Newsletter