நலமும் வளமும் பெருக தீபாவளியை இப்படி கொண்டாடலாமே!!!

Posted By:
Subscribe to Boldsky

தீபாவளி வருடத்தில் ஓர் நாள் என்றாலும், அந்த நாள் வருடம் முழுக்க நமது மனதில் நிலைக்கும் திருநாளாக இருக்கும். வெடி வெடிப்பது, புத்தாடை உடுத்துவது, இனிப்பு சாப்பிடுவது என எத்தனை நாட்கள் தான் நாம் ஒரே மாதிரியான தீபாவளியை கொண்டாட போகிறோம்.

ஓர்நாள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது போதுமா, வீண் செலவுகள் செய்து அடுத்த மாத பட்ஜெட்டையும் சீர்குலைத்து கொண்டாடுவது சரியான முறை அல்ல. மகிழ்ச்சி தேவையானது தான். மற்றவரோடு ஒப்பிட்டு அதை நீங்களே கெடுத்துக் கொள்ள வேண்டாமே.

எப்போதும் போல இல்லாமல், இந்த வழியில் நீங்கள் தீபாவளி கொண்டாடினால் மகிழ்ச்சி மனம் முழுக்க மட்டுமின்றி. வருடம் முழுக்கவும் நிலைத்திருக்கும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடம்பரம் தவிர்த்தல்

ஆடம்பரம் தவிர்த்தல்

சிலர் தீபாவளி என்றதும் கையில் பணம் இருக்கிறதோ, இல்லையோ ஆடம்பரமாக செலவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். வருடத்தில் ஒரு நாள் தான் தீபாவளி வருகிறது அன்று செலவு செய்வதில் என்ன தவறு என்று கேட்கலாம். ஒருநாள் ஆடம்பரம் அடுத்த ஓரிரு மாத குடும்ப பட்ஜெட்டை பதம் பார்த்துவிட கூடாது அல்லவா.

முடிந்த வரை உதவி

முடிந்த வரை உதவி

இந்த வீண் செலவுகளை தவிர்த்து, எல்லோரும் கொண்டாடும் ஒளிவெள்ள திருநாளில் கூட இருள் சூழ்ந்து வாடும் ஏழை எளியவர் அல்லது அனாதை இல்லம், முதியோர் இல்லத்திற்கு சென்ற உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். இது மன நிறைவை தரும்.

வெளி இடங்களுக்கு சென்று வாருங்கள்

வெளி இடங்களுக்கு சென்று வாருங்கள்

இன்றைய நாட்களில் நாம் நல்ல நாட்களில் கூட வெளியிடங்களுக்கு பெரிதாய் சென்று வருவதில்லை. இந்த நன்னாளில் ஆவது கோவில் குளம் என்றில்லாவிட்டாலும் கூட உங்களுக்கு பிடித்த இடத்திற்கு உங்கள் குடும்பத்துடன் சென்று வாருங்கள். வருடம் முழுக்க வேலை வேலை என்று அழுத்தத்தோடு அலுத்து போய் வேலை பார்க்கும் உங்களுக்கு இது நிம்மதியை தரும்.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

இப்படி குடும்பத்தோடு வெளி இடத்திற்கு சென்று வருவாதால் உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் குடும்பத்தார் மத்தியிலும் புத்துணர்ச்சி காணப்படும். இது உங்கள் உறவில் இன்பம், நெருக்கம் அதிகரிக்க உதவும்.

உற்பத்தி திறன்

உற்பத்தி திறன்

இந்த மன நிம்மதி மற்றும் புத்துணர்ச்சி உங்களது உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும். இதனால், அலுவல் வேலைகள் மட்டுமின்றி, வீட்டு சமாச்சாரங்களிலும் கூட நீங்கள் சிறந்து செயல்பட முடியும்.

வளம் பெற உதவும்

வளம் பெற உதவும்

இந்த புத்துணர்ச்சி உங்கள் உடல் நலத்தை அதிகரிக்கவும், உற்பத்தி திறன் அதிகரிப்பதால் வாழ்வில் வளம் பெருகவும் என இரண்டு விதத்திலும் பயனளிக்கிறது.

நிலையான மகிழ்ச்சி

நிலையான மகிழ்ச்சி

பண்டிகை தினங்கள் என்பது அந்த ஓரிரு நாட்களில் மட்டும் சந்தோசமாக இருக்க அல்ல. அந்த நாளில் இருந்து நமது வாழ்க்கையே சந்தோசமாக மாறுவதற்கான ஓர் ஊன்றுகோல் ஆகும். எனவே, சிறந்த முறையில் உங்கள் தீபாவளியை கொண்டாடுங்கள் நலமோடு சேர்த்து வளமும் பெறுங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Cant You Celebrate Diwali Like This

Diwali is bright full celebration of our nation. But we all wasting huge amount of money for short time happiness. why cant you celebrate diwali in a differ manner. read here in tamil.
Story first published: Friday, November 6, 2015, 14:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter