இன்றைய தம்பதியர்கள் தங்கள் துணையிடம் மறைக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் எப்படி ஆசை இருக்குமோ, அதேப்போல் ரகசியம் என்ற ஒன்றும் இருக்கும். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆகவே ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும் பலரும் தங்களின் ஆசைகளை மறைத்து பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணையோ/ஆணையோ திருமணம் செய்து கொள்வதால், தவறுகள் செய்ய நேரிடுகிறது. இதனால் பெற்றோருக்காக தங்கள் துணையுடன் நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழ, துணையுடன் தங்கள் ஆசைகளை மறைத்து அவர்களை அனுசரித்து நடப்பார்கள். இந்நிலையில் ஒருசில விஷயங்களை மறைக்கக்கூடும்.

இப்படி ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தன் பெற்றோர் மீது கொண்ட பாசத்தால், சிலர் துணைக்கு தெரியாமல் அவர்களுக்கு செலவுகளை செய்வார்கள். இங்கு அப்படி வாழ்க்கைத்துணையிடம் மறைக்கும் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துப் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னாள் காதலன்/காதலியுடன் தொடர்பு

முன்னாள் காதலன்/காதலியுடன் தொடர்பு

காதல் தோல்வி என்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. அப்படி காதல் தோல்வி அடைந்து, வேறு ஒருவரை மணந்த பின்னரும், முன்னாள் காதலி/காதலனுடன் தொடர்பில் இருப்பார்கள். அதுமட்டுமின்றி ஒருவரை மணந்த பின்னர், தனக்கு முன்பே இப்படி ஒரு காதல் இருந்தது என்பதை தன் துணையிடம் மறைப்பதோடு, அவர்களுடன் இன்னும் தொடர்பில் நட்புறவு கொண்டாடுவதை பலரும் மறைப்பார்கள். ஏனெனில் முதல் காதல் எப்போதுமே யாராலும் மறக்க முடியாதது. மேலும் ஒருவர் மீது காதல் வந்துவிட்டால், அவருடன் மீண்டும் நட்பு கொண்டாடுவது என்பது சாத்தியம் இல்லை.

கன்னித்தன்மை

கன்னித்தன்மை

தென்னிந்தியாவில் கன்னித்தன்மை என்பது மிகவும் சென்சிடிவ்வான விஷயம். ஒருவனுக்கு ஒருத்தி என்று தான் இந்தியாவில் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். மேலும் தனக்கு வரப்போகும் துணைக்கு கற்புக்கரசியாக/கற்புக்கரசனாக இருக்க வேண்டுமென்று இருந்தார்கள். ஆனால் தற்போது நாகரீகமானது மிகவும் வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில், ஒருவர் திருமணத்திற்கு முன் காதலித்தால், அவர்கள் இருவருக்குள்ளும் அனைத்தும் முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது. அப்படி கருதப்படுவதோடு, சில நேரங்களில் சிலருக்கு அது உண்மையாகவும் உள்ளது. இப்படி திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழந்துவிட்டால், அதையும் தம்பதியர்கள் மறைப்பார்கள்.

பணச்செலவு

பணச்செலவு

ஒவ்வொருவருக்குமே பெற்றோர்கள் தமக்கு என்ன கொடுமை செய்திருந்தாலும், எப்போதுமே நன்றாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்மென்று நினைப்பார்கள். ஆனால் திருமணமான பின் தங்களது பெற்றோரை பலரால் தன் வாழ்க்கைத்துணையின் துணையுடன் கவனித்துக் கொள்ள முடியாமல் போகிறது. இதற்கு தற்போதைய விலைவாசி தான் காரணம். இதனால் தன் பெற்றோருக்கு உதவ கூட, துணையிடம் மறைத்து பொய் சொல்லி செலவு செய்ய வேண்டியுள்ளது.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

இன்றைய காலத்தில் கள்ளத்தொடர்புள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அத்தகையவர்கள் கட்டிய மனைவி/கணவனுக்கு சிலர் துரோகம் செய்து, அவர்களது நண்பர்களுடன் கள்ளக்காதலில் விழுகிறார்கள். இந்த விஷயத்தை தன் துணையிடம் மறைப்பதோடு, இறுதியில் கணவன்/மனைவி இடையூறாக இருக்கிறார் என்று அவர்கள் கொல்லவும் தயங்குவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Things Couples Hide From Each Other

Your partner deserves to know the real you and vice-versa. Read on as tell you about some of the shocking things couples hide from each other. 
Please Wait while comments are loading...
Subscribe Newsletter