For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே இடத்துல புருஷனும், பொண்டாட்டியும் வேலை பண்ணா இவ்வளோ பிரச்சனை வருமா என்ன?!!

|

பொருளாதார பிரச்னையினாலும், விலைவாசி உயர்வினாலும் தற்போதைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இல்லாவிட்டால், வீட்டை மட்டும் அல்ல வாகனத்தை கூட ஓட்ட முடியாது நமது இந்திய திருநாட்டில்.

"பேச்சுலர் லைஃப் டூ பேஜாரான லைஃப்" - திருமணத்திற்கு பின் ஆண்களின் வாழ்க்கை!!!

ஐ.டி என்ற இரண்டெழுத்து, இந்த பிரச்சனைக்கு லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தீர்வளித்தது. கை நிறைய சம்பளம் சந்தோஷமான வாழக்கை என்று அவர்களை மகிழ வைத்தது. ஆனால், ஐடி. மட்டுமல்லாது எந்த ஒரு அலுவலகமாக இருந்தாலும் கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் வேலை செய்தால் ஒரு சில பிரச்சனைகள் கண்டிப்பாக எழும்.

காதலுக்கு முன், காதலுக்கு பின் ஆண்களுக்கு ஏற்படும் "OMG" மாற்றங்கள்!!!

சம்பளம், பதவி உயர்வு, மரியாதை என்று பல வில்லன்கள் இதற்கு காரணமாக இருப்பார்கள். இது போக சக ஊழியர்களின் பார்வை என பல பிரச்சனைகள் எழுகின்றன. இது போக ஒரு சில நல்ல விஷியங்களும் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதிப்பு

மதிப்பு

வேலை செய்யும் இடத்தில் திடீரென மனைவிக்கு பதவி உயர்வு அல்லது மதிப்பு கூடும்படியான ஏதேனும் ஒரு விஷயம் நடந்தால் கணவன்மார்கள் கொஞ்சம் வருத்தம் அடைய தான் செய்வார்கள். (கெத்து குறைஞ்சு போயிடுமாம்)

சம்பளம்

சம்பளம்

இந்திய தம்பதியினர் மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை, மனைவியை விட கணவன் தான் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது. இல்லாவிட்டால் ஊரு நாலு விதமாக பேசும். (இதெல்லாம் பார்த்தா வாழ்க்கைய வாழ முடியாது பாஸ்!!)

சைட் அடிப்பாங்களோ

சைட் அடிப்பாங்களோ

அழகான மனைவிகள் கொண்டுள்ள ஒவ்வொரு கணவனுக்கம் அன்றாடம் ஏற்படும் பயம் தான் இது. அதிலும், ஒரே இடத்தில வேலை செய்தால் கண்காணிப்பதே ஒரு வேலையாகிவிடும். (இதுக்கு பொண்ணுகள ஒன்னும் பண்ண முடியாது, ஆம்பளைங்க தான் திருந்தனும்)

சந்தேகம்

சந்தேகம்

ஓர் உறவில் விரிசல் ஏற்படுகிறது என்றால் அதற்கு 90% காரணமாக இருப்பது இந்த சந்தேக பிரச்சனை தான். அலுவலகத்தில் யாரவது ஓர் ஆணுடன் கொஞ்சம் அதிகமாக பேசினால் கூட கணவன்மார்களால் தாங்கிக் கொள்ள முடியாது. உடனே சந்தேகத்தில் மூழ்கிவிடுவார்கள் (இந்த பேய அடிச்சு ஓட்டிட்டா.. எல்லாம் சரியாயிடும்.)

வேலை திறன் குறைவு

வேலை திறன் குறைவு

இந்த சந்தேகம் என்பதன் நோயால் ஏற்படும் பக்க விளைவு தான் வேலையில் ஏற்படும் குறைபாடு. (கவனம் முழுக்க அங்கேயே இருந்தா பின்னா எப்படி ஒழுங்கா வேலை செய்ய முடியும். பொண்டாட்டிய நம்புங்க பாஸ்)

அலுப்பு

அலுப்பு

ஒரே முகத்தை வீட்டிலும், அலுவலகத்திலும் என 24 மணி நேரமும் ஓயாமல் பார்க்க முடியாது அல்லவா. (இது நியாயமான பேச்சு!!!)

பெட்ரோல் செலவு

பெட்ரோல் செலவு

ஒரே இடத்தில் வேலை செய்வதனால் ஏற்படும் ஓர் முக்கியமான நன்மை என்னவெனில் பெட்ரோல் செலவு அதிகமாக குறையும். மற்றும் பிக்கப், ட்ரோப் என்ற அலைச்சல்கள் இருக்காது.

நினைத்த நேரத்தில் பார்க்கலாம்

நினைத்த நேரத்தில் பார்க்கலாம்

அதிகப்படியான காதலில் கூடி குலாவும் தம்பதியினருக்கு, ஒரே இடத்தில வேலை பார்ப்பது வரம் போன்றது. நினைக்கும் போதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். (ஒரே ஜாலி தான் போங்க!!!)

நேரம் பிரச்னையாக இருக்காது

நேரம் பிரச்னையாக இருக்காது

ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர் என்றால் தினந்தோறும் காலை கொஞ்சம் கடுகு வெடிப்பது போல தான் இருக்கும். கணவன் ஒரு நேரத்தில் கிளம்ப வேண்டும், மனைவி ஒரு நேரத்தில் கிளம்ப வேண்டும், இதற்கு நடுவில் குழந்தைகள். ஆனால், இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்தால் இந்த பிரச்சனையே இருக்காது.

சாப்பாடு செலவு மிச்சம்

சாப்பாடு செலவு மிச்சம்

ஆண்கள் எப்போதுமே ஒருவேளையாவது மனைவியின் சமையலில் இருந்து தப்பித்து மதியம் உணவகத்தில் சாப்பிடலாம் என்று இருப்பார்கள். ஆனால், மனைவியும் ஒரே இடத்தில வேலை செய்யும் போது இருவரும் ஒன்றாக தான் சாப்பிட வேண்டும். அதனால், மனுஷன் தப்பிக்க முடியாது. (செத்தாண்டா சேகரு!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Husband And Why Should Not Work On Same Place

Do you know about the reasons why husband wife should not work on same place? read here.
Story first published: Tuesday, April 28, 2015, 14:17 [IST]
Desktop Bottom Promotion