மூன்று முடிச்சு போடுவதற்கான நேரம் வந்துவிட்டது என எச்சரிக்கும் அறிகுறிகள்!!!

Posted By: John
Subscribe to Boldsky

ஓட்டுப் போட, தேர்தலில் நிற்க கூட வயது தகுதி மற்றும் சரியான நேரத்தில் ஓட்டுப் போடும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்திற்கு ஆண், பெண்ணிற்கு என தனி தனியாக வயது வகுக்கப்பட்ட போதிலும் கூட, அவரவர் மனநிலை பொருத்து தான் திருமணம் நடைபெறும்.

திருமணத்திற்கு பிறகு ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் சின்ன சின்ன ஆசைகள்!!!

மனநிலை, உடல்நிலை எல்லாமும் சரியாக இருந்தாலும் கூட சில வீட்டில் ஜாதி, ஜோதிடம் என நிறைய காரணங்கள் சொல்லி திருமணத்தை தட்டிக் கழித்துக் கொண்டே வருவார்கள். இந்த மாதிரியான விஷயங்களால் பிரம்மச்சாரியத்தை கஷ்ட்டப்பட்டு காத்து வரும் இளசுகள் பலர் இருக்கின்றன.

இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்!!!

ஆனால், ஜாதி, ஜோதிடம் அது, இது என எந்த காரணிகளும் இன்றி, நீங்கள் மூன்று முடிச்சு போடா வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என தெரிந்துக்கொள்ள சில எச்சரிக்கை மணிகள் அடிக்கும். அதை வைத்து நீங்கள் கூடிய விரைவில் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், இல்லாங்காட்டி, வாழ்க்கை கண்டமாயிடும்!!!!

கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறையில் இருக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டேட்டிங் வெறி!!!

டேட்டிங் வெறி!!!

டேட்டிங்கில் ஆர்வம் இல்லதாவராக இருந்தால் கூட, திடீரென யாரவதுடன் டேட்டிங் சென்று வரலாமா என நெஞ்சம் ஏங்கும். ஒரு பக்கம் ஏக்கம் இருந்தாலும், மறுபக்கம் மனது பாய்ந்து செல்ல தவிக்கும். இந்த முதல் எச்சரிக்கை மணியை வைத்து நீங்கள் உடனடியாக திருமண பயணத்தை தொடங்க வேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ஆச்சரியம் பரவசம்

ஆச்சரியம் பரவசம்

திருமணத்தின் மீது இருந்த பயத்தை தாண்டி, புதியதாய் மனதினுள் ஓர் பரவச நிலை மேலோங்கும். திருமணத்தை பற்றிய எதிர்வினை எண்ணங்கள் எல்லாம் மறைந்து, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

மது போய் மாது மீது ஆசை வரும்

மது போய் மாது மீது ஆசை வரும்

எதிர் பாலின மக்களை பார்க்கும் போது, ஓர் வித மகிழ்ச்சி அலைகள் உங்கள் மனதை தொட்டு சொல்லும். உங்களுக்கே தெரியாமல் கனவுகள் உச்சிவெயிலிலும் ஹாயாக வந்து செல்லும்.

எதிர்காலத்தை பற்றிய எண்ணங்கள்

எதிர்காலத்தை பற்றிய எண்ணங்கள்

நாளைக்கு என்ன சாப்பிட போகிறோம் என்பதை பற்றி கூட கவலை இல்லாத உங்கள் மனதில், அடுத்த பத்து வருடங்களில் நீங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை பற்றிய திட்டங்கள் தீட்டப்படும்.

சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு

எதையும் மெதுவாக, பொறுமையாக செய்யும் உங்கள் பழக்கத்தில், எந்த காரியத்தையும் அதற்குரிய நேரத்தில் செய்துமுடிக்க வேண்டும் என்ற ஈடுபாடு முளைக்கும். முனைப்பாக வேலைகளில் ஈடுபடுவீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு

குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு

நீண்ட நாட்களாக நீங்கள் காதலித்து வந்திருந்தாலும் கூட, திடீரென குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆசை வரும். காதலர்கள் என்ற எண்ணம் போய், ஒருவரை ஒருவர் கணவன், மனைவியாக பாவிக்க தொடங்குவீர்கள்.

காலை முதல் இரவு வரை

காலை முதல் இரவு வரை

காலை எழுந்ததும் முதல் நினைவாகவும், இரவு தூங்கும் போது கடைசி நினைவாகவும் உங்கள் மனதில் திருமண ஆசையோ, அல்லது காதல் தேவதையின் ஆசையோ எழும்பும்.

கரைகடந்து ஓடும் காதல்

கரைகடந்து ஓடும் காதல்

வருடங்கள் கடந்தோடிய காதல் பயணமாக இருந்தாலும் கூட, ஓர் தருணத்தில் இவருக்குள்ளே இருக்கும் காதல் வேற லெவலில் பயணிக்க ஆரம்பிக்கும். அதில் அன்யோன்யம் இருக்கும்.

நொடி பொழுதும் பிரியா வரம் வேண்டி...

நொடி பொழுதும் பிரியா வரம் வேண்டி...

தொடர்புக் கொள்ளும் தூரத்தில் இருப்பினும், தினம், தினம் தரிசனம் கொடுத்தாலும் கூட, நொடி பொழுதுக் கூட பிரிய மனம் தவிக்கும் தருணம் எழும் அந்த நாள், நீங்கள் திருமணம் செய்ய ஆயுத்தமாகிவிட்டீர்கள், இனியும் காலத்தை வீணாய் நகர்த்த வேண்டாம் என்று காலம் எச்சரிக்கை மணி அடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nine Signs You Are Ready To Tie The Knot

Do you know about the nine signs which explicit, that you are ready to tie knot? read here.