For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கம் இல்லாத இன்பமான இல்லற வாழ்க்கை வாழ, தங்கமான வழிமுறைகள்!!!

By John
|

இன்றைய சூழலில், சிறு சிறு கருத்து வேறுபாடுகளின் காரணமாக விவாகரத்து பெற்று தங்களது வாழ்க்கையையே சீரழித்துக் கொள்ளும் தம்பதிகள் ஏராளமானோர் உள்ளனர். காதலித்து திருமணம் செய்தவர்களை விட அதிகமாக நிச்சயித்து திருமணம் செய்தவர்கள் தான் அதிகமாக விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை அணுகுவதாக ஓர் கருத்துக்கணிப்புக் கூறுகிறது.

இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்!!!

திருமண வாழ்வு என்ன அவ்வளவு கொடியதா? இல்லவே இல்லை, அனைவரின் வாழ்க்கையிலும் தான் துன்பம் நேரிடுகிறது. ஆனால், அதை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பது தான் முக்கியம். முன்பு போல இல்லறம் குறித்து எடுத்துரைக்கவோ, அறிவுரைக் கூறவோ பெரியவர்களும் இல்லை, அதை கேட்க இந்த தலைமுறையினருக்கு நேரமும் இல்லை.

கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறையில் இருக்கும் நன்மைகள்!!!

ஒரு சில விஷயங்களை சரியாக கடைப்பிடித்து வந்தாலே உங்கள் வாழ்க்கை தடையற்ற நதி போல சந்தோசமாக பாய்ந்து செல்ல உதவும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைவிட வேண்டாம்

கைவிட வேண்டாம்

இரவில் முத்தம் கொடுத்துக்கொள்வது, காலையில் கட்டி அணைத்துக் கொள்வது, வருடா வருடம் திருமண நாளை கொண்டாடுவது போன்றவற்றை கைவிட்டுவிட வேண்டாம். இவை எல்லாம் தான் ஓர் மகிழ்சியான இன்பமான உறவினை கட்டமைக்க உதவும் கருவிகள் ஆகும்.

வியாபாரம் அல்ல

வியாபாரம் அல்ல

எந்த விஷயத்திற்கும் நீ முதல் செய், நான் செய்கிறேன் என்று, முதுகை சொறிந்துவிட கூட அடம் பிடிக்க வேண்டாம். இல்லறம் ஒன்றும் வியாபாரம் அல்ல. நீங்களாக முன் வந்து எந்த ஓர் செயலையும் துவங்குங்கள். அது போல, உங்கள் துணையும் அவர்களுக்கான நேரம் எடுத்து அவர்களது வேலைகளை செய்ய அனுமதியிங்கள்.

 நடத்தையில் கவனம்

நடத்தையில் கவனம்

மதிப்பும், மரியாதையும் அளித்தால், உங்கள் துணை எந்தவொரு விஷயம் செய்தாலும், உதவினாலும், நன்றி கூற மறக்க வேண்டாம். அதே சமயம், நீங்கள் தவறு செய்திருந்தால் நொடி பொழுதும் யோசிக்காமல் மன்னிப்பு கேட்கவும் மறக்க வேண்டாம். இதுவே, ஓர் உறவில் பிரிவு ஏற்படாமல் இருக்க பெரும் பங்கு வகிக்கும்.

பயணங்கள்

பயணங்கள்

ஒரே வீடு, ஒரே இடம் / ஊர் என்றிருக்காமல், அவ்வப்போது வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள். இது, உங்கள் இருவருக்குள் இருக்கும் பிரிவினை போக்கவும், பிரியத்தை அதிகரிக்கவும் உதவும்.

இணைந்தே இருங்கள்

இணைந்தே இருங்கள்

படுக்கை அறையில் மட்டுமின்றி, சிறு சிறு வேலைகள் செய்யும் போதும், வெளியிடங்களுக்கு செல்லும் போதும் இனைந்தே சென்று வாருங்கள். கடை வீதிக்கு சென்று காய்கறி வாங்கி வருவதாக இருக்கட்டும், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதாக இருக்கட்டும் எதுவாயினும், சேர்ந்து செய்யுங்கள், இது உங்கள் இருவரின் மத்தியில் ஓர் வலுவான காதல் பாலத்தை அமைக்க உதவும்.

சண்டைகளும் தேவை

சண்டைகளும் தேவை

காரத்தை ருசித்தவனுக்கு தான் இனிப்பின் உண்மையான சுவையும், அருமையும் புரியும். அதுப் போல தான் சண்டைகளும். சண்டைகள் அற்ற வாழ்க்கை இனிக்காது. ஆனால், ஒரு போதும் வேறு ஏதேனும் பிரச்சனையில் கோபமாக இருக்கும் சமயத்தில் உங்கள் துணையின் மீது கோபம் கொள்ள வேண்டாம். இது, எதிர்வினை விளைவுகளை தான் பரிசளிக்கும்.

இனைந்து செயல்படுதல்

இனைந்து செயல்படுதல்

எந்த ஒரு விஷயத்தையும், பிரிந்து செய்யாமல், இனைந்து செய்ய பழகுங்கள். ஒருவருக்கு ஒருவர் உதவுதல் முக்கியம். உன் பிரச்சனை, என் பிரச்சனை என்று பாராமல், நம்முடையது என்ற எண்ணம் பிறக்க வேண்டும்.

நண்பர்களாக இருங்கள்

நண்பர்களாக இருங்கள்

நல்லதோர் தோழன், தோழியாக இருக்க வேண்டியது அவசியம். அதே போல அவரவர் நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க அனுமதி வழங்குங்கள். இதில் எந்த தவறும் இல்லை. இது, உங்கள் இருவருக்கும் மத்தியிலான உறவில் மேன்மைக் காண உதவும்.

மனம் திறந்து பேசுதல்

மனம் திறந்து பேசுதல்

எந்த ஒரு விஷயத்தையும் நேரம் கடத்தாமல் மனதை திறந்து பேசிவிடுங்கள். நேரம் கடத்துவதனால் பிரச்சனை தான் பெரிதாகுமே தவிர குறையாது.

நக்கல், நையாண்டி

நக்கல், நையாண்டி

கேலி, கிண்டல் இல்லாமல் வாழ்வதற்கு இல்லறம் ஆசிரியர், மாணவன் உறவல்ல. ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கேலியும், கிண்டல் செய்து மகிழ்ச்சியான வாழக்கையை வாழ பழகுங்கள். ஏன் மனைவி கலாய்த்தால் கணவனுக்கு அவமானமா என்ன?

மறந்தும் மறந்துவிடாதீர்கள்

மறந்தும் மறந்துவிடாதீர்கள்

உங்கள் துணைக் கொடுத்த பரிசு அல்லது அவர்களை சார்ந்த முக்கியமான நாட்கள் போன்றவற்றை மறந்தும் மறந்துவிடாதீர்கள். கணவன்மார்கள் கொஞ்சம் அதிகமாக அவர்களது நண்பர்கள் மற்றும் பெண் வீட்டு உறவினர்கள் பற்றியும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், பெண்கள் இவற்றை எல்லாமும் நினைவில் வைத்திருப்பார்கள்.

ஆலோசனை

ஆலோசனை

அனைவரின் வாழ்விலும் ஓர் கடினமான காலம் வரும், ஒரு சிலரின் வாழ்வில் அது தொடர்ச்சியாக கூட வரலாம். அதற்காக மனம் நொந்துப் போய்விட வேண்டாம். நல்ல ஆலோனை அந்த கடின காலகட்டத்தை கடந்து வர உதவும், கவுன்சிலிங் செல்லலாம், அல்லது நண்பர்கள், உறவினர்களிடம் ஆலோசனை கேட்கலாம். அனுபவசாலிகளின் அறிவுரை கண்டிப்பாக ஓர் நல்ல வழிகாட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Golden Rules Of A Happy Long-Lasting Love Life

Do you know about the Golden Rules of a happy long lasting love life? read here.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more