For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் டீ-ஷர்ட் கழட்டுனா தான் அவனுக்கு காதல் வருமா? - My Story #145

நான் டீ-ஷர்ட் கழட்டுனா தான் அவனுக்கு காதல் வருமா? - My Story #145

|

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ங்கிறது எல்லாம் அந்த காலம். லவ் இஸ் ஆல்மோஸ்ட் லஸ்ட்ங்கிறது தான் இந்த காலம். அதெப்படி லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் கூட ஃபிகரா இருக்க பொண்ணுங்க மேல தான் ஆம்பளைங்களுக்கு வருமா என்ன? கல்யாணம் பண்ண பின்ன... இல்ல லவ் பண்ணிட்டு இருக்கும் போதே ஏதாவது நோய் நொடி, ஆக்சிடன்ட்ன்னு உடம்பு மெலிஞ்சுட்டா இல்ல பெருத்துட்டா வேண்டாம்ன்னு விட்டுட்டு போயிடுவீங்களா?

ஏறத்தாழ என்னோட லைவ்ல வர்த்தே இல்லாத ஒருத்தனுக்காக ஒரு வருஷம் வீணாக்கியிருக்கேன். அவன் பேசுன வார்த்தையவிட, போயும் போயும் இவனுக்காகவா ஒரு வருஷம் நொந்து போயி உட்கார்ந்திருந்தோம்ன்னு தோணுது. ஒரு மாசமாவே ஏன் நம்ம கதைய எல்லார் கிட்டயும் பகிர்ந்துக்க கூடாதுன்னு தோணுச்சு. அதான் முடிவு பண்ணேன். வெட்கப்பட வேண்டியது அவனே தவிர நான் இல்லன்னு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒபிசிட்டி!

ஒபிசிட்டி!

ஒபிசிட்டி.... உடல்பருமன்ங்கிறது எங்க ஃபேமிலி வாங்கிட்டு வந்த வரம். இது ஏதோ மரபணு பிரச்சனைன்னு சொல்றாங்க. நான் சாப்பிடாம இருந்தாலுமே கூட உடம்பு குறையாது. நானும் என் வாழ்க்கையில உடம்ப குறைக்கணும்ன்னு ட்ரை பண்ணது இல்ல.

ஏன்னா நான் நாள் முழுக்க சாப்பிட்டுட்டே இருக்குற ஆள் கிடையாது. என் வயசுல இருக்க ஒரு சாதாரண பொண்ணு எவ்வளோ சாப்பிடுமா அவ்வளோ தான் சாப்பிடுவேன். ஆனா, சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும். இது குறைக்க முடியாத ஒபிசிட்டின்னு. எங்க வீட்டுலயே ஒல்லி எங்க அப்பா தான். ஒருவேளை நான் பையனா பிறந்திருந்தா அப்பா போல ஒல்லியா இருந்திருப்பேனான்னு அடிக்கடி அவரக்கிட்ட கேட்டுட்டே இருப்பேன்.

லவ்???

லவ்???

குண்டா இருக்க பொண்ணுங்க மேல யாருக்கும் லவ் வராது, அவங்களும் யாரையும் லவ் பண்ண மாட்டங்கங்கிறது எல்லாருக்கும் இருக்க ஒரு பொதுவான கருத்து. ஏன்னா சினிமாவுல அப்படி காட்றாங்க. குண்டா இருந்தா காமெடி பீஸ், கிண்டலடிக்கணும்ங்கிறது எழுதப்படாத நியதி.

ஆனால், நான் அப்படி இல்ல. எங்க ஃபிரண்ட்ஸ் கேங்ல நான் தான் ரொம்ப லூட்டி. ஒருத்தர கூட வம்பிழுக்காம விடமாட்டேன். கேலி, கிண்டல்ன்னா முதல் ஆளா வந்து நிப்பேன்.

காலேஜ்!

காலேஜ்!

ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் பெரிசா இந்த காதல், கீதல் கதைகள் எல்லாம் இருக்காது. முஸ்தபா, முஸ்தபான்னு ஃபிரெண்ட்ஷிப் மட்டும் தான் அதிகமா இருந்துச்சு.

ஆனா, காலேஜ் போய் ஒரு செமஸ்டர் கூட முடியல, என் கேங்ல இருந்த பொண்ணுங்கள்ல பாதி பேருக்கு லவ் வந்திடுச்சு. அது எப்படி வந்துச்சுன்னு கேட்டா... காரணத்தோட வந்தா லவ் இல்ல. காரணமே இல்லாம வந்தாதான் லவ்வுன்னு டயலாக் எல்லாம் பேசுனாங்க.

நமக்கு?

நமக்கு?

அப்பதான்... குண்டா இருந்தா யாருக்கும் லவ் வராதுன்னு தெரிஞ்சுக்கிக்டேன். அதுமில்லாமா... காரணமே இல்லாம நடக்குற எந்த விஷயத்துலயும் எனக்கு நம்பிக்கையும் இல்ல. ஆனாலும், முன்ன எல்லாம் எங்களுக்குள்ள பேசிக்கிட்ட பொதுவான கம்மியாகி, அவங்களோட காதல் சரித்திரம் மட்டும் பேசும் போது... அட... நமக்கு மட்டும் ஏன் இந்த கன்றாவி எல்லாம் வரல. ஒருவேளை... நிஜமாவே ஒபிசிட்டி பெரிய குறையோன்னு நெனச்சேன்.

ஒருவழியா வந்துச்சு...

ஒருவழியா வந்துச்சு...

கடவுள் தான் ஒருத்தர் பிறக்கும் போதே, அவருக்கான ஜோடி யாரு, என்ன வேலை, எப்படி சாவார்ன்னு எல்லாமே முடிவு பண்ணிடுவாராம்ல. அப்படி பார்த்தா எனக்குன்னு ஒருத்தன் கண்டிப்பா இருக்கணும்ல.

ஒருத்தன் வந்தான். எனக்குன்னே வந்தான். நான் ஜாலியா பேசுறது தான் புடிச்சிருக்கு. குண்டா இருந்தாலும் நீ அழகுன்னு நிறையா பேசுனான். ஆரம்பத்துல அவனையும் கலாய்ச்சு தான் பேசிட்டு இருந்தேன். ஆனா, ஒரு கட்டத்துல... நான் விளையாட்டுக்கு சொல்லல. சீரியஸா தான் பேசுறேன்னு சொல்லி பிரபோஸ் பண்ணான்.

தோழிகள் கிண்டல்!

தோழிகள் கிண்டல்!

அதுனால் வரைக்கும் நான் கிண்டல் பண்ணிட்டு இருந்தவங்கஎல்லாம் என்ன கிண்டல் பண்ணாங்க. ஏதோ தீபாவளி, பொங்கல் ஆபர்ல கிடைக்கிற விலை மலிவான பொருள் போல... இவன விட்ட வேற ஒருத்தன் கிடைக்கமாட்டான். பேசமா இவனையே ஓகே பண்ணிடுன்னு சொன்னங்க. எனக்கு எரிச்சல் தான் வந்துச்சு.

ஒருவேளை, அவனும் நம்ம மேல ஈவிரக்கம் வந்து தான் லவ் பண்றானோன்னு ஒரு சந்தேகம் வேற எனக்குள்ள ஓடிகிட்டே இருந்துச்சு.

மறுநாள்!

மறுநாள்!

மறுநாளே காலேஜ் போனதும் அவன்கிட்ட...,

"என் மேல இந்த ஈவிரக்கம் பாட்டெல்லாம் லவ் பண்ணாத. நான் சிம்பதி கிரியேட் பண்ற ஆளும் இல்ல, எதிர்பார்க்குற ஆளும் இல்லன்னு" கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டேன்.

நான் பேசி முடிச்சதும் இரண்டு நிமிஷம் விடாமா சிரிச்சான்... நானும் சந்தானம் மாதிரி இதொண்ணும் அவ்வளவோ பெரிய காமெடி இல்ல. எதுக்கு சிரிக்கிறன்னு கேட்டேன்.

"நீ பேசுற பேச்சுக்கும்... நீ கலாய்க்கிற விதத்துக்கும் உன் மேல கோபம் தான் வரணும். அனுதாபம் எல்லாம் வராது"ன்னு சொன்னான்.

பூத்துடுச்சு....

பூத்துடுச்சு....

அப்பறம் என்ன எந்த இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பின்னணி இசையும் இல்லாம எங்க லவ் ஸ்டார்ட்டாக ஆரம்பிச்சது. ரொம்ப நல்லா தான் போச்சு. எனக்குன்னு ஸ்பெஷல் டயட் எல்லாம் சொன்னான். சில டாக்டர், ஜிம் ட்ரெயினர் கிட்ட எல்லாம் பேசி உடம்ப குறைக்க வலி இருக்கான்னு கேட்டான்.

சிலர் ஐடியா எல்லாம் கேட்டு ஃபாலோ பண்ணேன். எனக்காக அவனும் காலையில சீக்கிரம் எழுந்து வந்து கூடவே இருப்பான். என்னால நம்பவே முடியல. அப்படி என்ன இவனுக்கு நம்ம மேல இப்படி ஒரு லவ்வுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பேன்.

மாற்றம்!

மாற்றம்!

மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்வாங்களே அந்த பழமொழிய நானும் நம்புனேன். டி.என்.எ பிரச்சனை. சாகுற வரைக்கும் குண்டாவே தான இருக்கனும்ன்னு நெனச்சேன். ஆனா, அவன் எடுத்த முயற்சியில ஒரு வருஷம் கஷ்டப்பட்டு உடம்பு குறைச்சேன். எனக்கு மட்டுமில்ல, என் ஃபேமிலிக்கு மட்டுமில்ல. ஒட்டுமொத்த அக்கம்பக்கத்து வீட்டுக் காரங்க, காலேஜ், ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்ன்னு எல்லாருக்கும் ஆச்சரியம்.

நான் தானா இதுன்னு கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க. அப்பத்தான் கண்ணாடி முன்ன நின்னு அட நீயும் அழகிதான் போல... இத்தன நாளா தெரியாமே போச்சேன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லிக்குவேன்.

ஏமாற்றம்!

ஏமாற்றம்!

நம்ம வாழ்க்கையிலே மாற்றம் மட்டுமே வரும்ன்னு சொல்லிட முடியாது. ஒவ்வொரு மாற்றத்துக்கு பின்னாடியும் சில ஏமாற்றங்களும் கூட வர வாய்ப்புகள் உண்டு. எனக்கும் அப்படி ஒரு ஏமாற்றம் வந்துச்சு. அதுனால் வரைக்கும் என் கேரக்டர் பிடிச்ச அவனுக்கு. நான் ஒல்லியானதுக்கு அப்பறம் என்னோட உடம்பு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது.

முதல் கொஞ்சநாள் என் அழகு பத்தியே பேசிட்டு இருந்தான். நானும் எல்லாரும் போல இவனும் ஷாக்குல இருந்து வெளிய வரலன்னு நெனச்சேன். ஆனா, அவன் பேச்சுல, பேசுற வார்த்தையில சில மாற்றங்கள் தென்பட்டுச்சு.

டீ-ஷர்ட் கழட்டு...

டீ-ஷர்ட் கழட்டு...

நாங்க வீடியோ காலிங்கல பேசுறது ரொம்ப இயல்பு. குண்டா இருந்தப்ப நைட்டி போட்டுக்கிட்டு கூட வீடியோ காலிங் பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்தவன். திடீர்ன்னு ஒருநாள் உன்ன பார்க்கணும்ன்னு சொன்னான். வீடியோ காலிங் பண்ணதும். இப்படி இல்ல, மொத்தமான்னு சொன்னான். எனக்கு ஒன்னும் புரியல. கொஞ்ச நேரம் கழிச்சு, நேரடியா டீ-ஷர்ட் கழட்டி காட்டுன்னு கேட்டான். கோபத்துல கால் கட் பண்ணிட்டேன்.

சண்டை!

சண்டை!

நான் அவன் என்னோட மனசுக்கு உரிமையானவன்ன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, அவன் என்னோட உடம்புக்கு அவன் தான் உரிமையாளன்ன்னு நெனச்சுட்டு இருந்திருக்கான். அவன் சொல்லி தான் உடம்பு குறைச்சேன். அதுக்காக அவன் சொல்ற மாதிரி எல்லாம் பண்ணனும்ன்னு இல்லையே.

கல்யாணம் வரைக்கும் காத்திருக்காத காதல், என்ன காதல்?

எங்களுக்குள்ள இதுனால பெரிய சண்டை வந்துச்சு. என்னென்னமோ சொல்லி திட்டிட்டு போயிட்டான்.

நான் யாரு?

நான் யாரு?

நான் எப்பவுமே இவ்வளோ ஃபீல் பண்ணது இல்ல. நான் குண்டா இருக்கும் போது என்கிட்டே இருந்த தைரியம், தன்னம்பிக்கை எனக்கிட்ட இல்லாம போச்சு. ரொம்ப அழுதேன். காலேஜ் முடிச்சு ஒரு வருஷம் வேலைக்கு எங்கயும் போகாம வீட்டுலயே இருந்தேன். சிலர் ஒல்லி ஆனதும் நான் சோம்பேறி ஆயிட்டேன்னு சொன்னாங்க.

ஒரு நாள் நான் அழுகுறேன்... நான் ஏன் இப்படி ஆனேன்னு ஒரு கேள்வி என்கிட்டையே கேட்டுக்கிட்டேன். நான் ஒன்னும் அவனோட பேண்ட கழட்டுன்னு கேட்கலயே. அவன் தான என்னோட டீ-ஷர்ட கழட்ட சொல்லிக் கேட்டான். தப்பு அவன் மேல. அதுக்காக நான் ஏன் இப்படி அழுத்துட்டே இருக்கணும்ன்னு?

மிருகமா நாம?

மிருகமா நாம?

போதும்! அழுதது எல்லாம் போதும். எனக்கு என்ன குறை. நான் அப்பவும் அழகாதான் இருந்தேன். இப்போ கொஞ்சம் கூடுதல் அழகா இருக்கேன். அவ்வளவு தான் எனக்கு ஏற்பட்ட மாற்றம்.

செக்ஸ் மட்டும் வெச்சுக்கணும், இனப்பெருக்கம் பண்ணனும்ன்னு உடம்புக்காக மட்டும் அலைய நாம ஒன்னும் மிருகம் இல்லையே?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Now a Days Love Comes at Lust Sight : My Story

Now a Days Love Comes at Lust Sight : My Story
Story first published: Tuesday, January 16, 2018, 16:18 [IST]
Desktop Bottom Promotion