For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லஸ்ட் ஸ்டோரீஸ்: உறவில் இந்திய பெண்களின் நிறைவேறாத ஆசைகளும், நிகழும் வேஷங்களும்!

By Staff
|

சந்தா முறையில் பணம் செலுத்தி தியேட்டர், டிவிக்களில் வெளியாகாத ஒர்ஜினல்ஸ் படம் பார்க்க உதவுகிறது நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் ஊடகம். இதில் பல சினிமாக்கள், ஒரிஜினல்ஸ், தொடர்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் சமீபத்தில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்ற படம் தான் லஸ்ட் ஸ்டோரீஸ்.

நான்கு வெவ்வேறு கதாப்பாத்திரங்கள், நான்கு வெவ்வேறு கதைகள், நான்கு வெவ்வேறு இயக்குனர்களால் உருவாக்கப்பட்டது இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் படம். இதை ஒரு படமாக மட்டும் பார்க்க முடியாது.

Lust Stories: What This Film Talks About? Lesser Known Desires That Indian Women Has in Relationship!

இந்தியாவில் இல்லற பந்தத்தில் வாழும் பெண்கள் அனுதினமும் கடந்து வரும் பிரச்சனைகள், அவர்களது நிறைவேறாத ஆசைகள் என நான்கு கதைகளும் நான்கு பாடங்களை கற்பிக்கின்றன.

கெய்ரா அத்வானி, ராதிகா ஆப்தே, பூமி பட்னேகர் மற்றும் மனிஷா கொய்ராலா இந்த படத்தின் முக்கிய கதா நாயகிகள். இந்த படத்தை அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோகர் என நான்கு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராதிகா ஆப்தே!

ராதிகா ஆப்தே!

ராதிகா ஆப்தே (Kalindi எனும் பாத்திரத்தில்) ஒரு பேராசிரியராக முதல் கதையில் தோன்றுகிறார். இவருக்கும் இவரது வகுப்பில் பயிலும் மாணவர் தேஜஸ் இருவரும் ஒரு இரவில் செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்கள். மறுநாள் காலை எழுந்ததுமே. அது ஒரே ஒரு முறை நடந்தது தான். இனிமேல் நடக்காது. இது இயல்பானது. இதை காதல், கீதல் என்று எடுத்துக் கொள்ளாதே என்று அறிவுரைத்து செல்கிறார் ராதிகா ஆப்தே.

செக்ஸுவல் உறவு!

செக்ஸுவல் உறவு!

ஏற்கனவே தன்னைவிட 12 வயது மூத்த நபரை திருமணம் செய்துக் கொண்ட ராதிகா ஆப்தே. தன்னுடன் பணிபுரியும் ஒரு பேராசிரியர் உடனும் செக்ஸுவல் உறவில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த உறவு ப்ரேக்-அப்பில் முடிகிறது. தனது மாணவன் தேஜஸ் மீது ஈர்ப்பு கொள்கிறார். அவனையும், அவன் டேட் செய்யும் பெண்ணையும் பிரிக்க நிறைய முயற்சிகள் எடுக்கிறார். அவள் நல்லவள் அல்ல உன்னை பயன்படுத்திக் கொள்கிறாள் என்றும் அறிவுரைக்கிறார்.

திருமணமானவள்!

திருமணமானவள்!

ஒரு கட்டத்தில் தேஜஸ் ராதிகா ஆப்தே தன் மீது வைத்திருக்கும் பிரியத்தை உணர்ந்து, உங்களுக்காக காதலியை பிரிவதாக கூறும் போது, நான் ஏற்கனவே திருமணமானவள் என்பதை கூறி நகர்கிறார் ராதிகா ஆப்தே. ஒரு திருமண பந்தத்தை தாண்டிய பெண்ணுக்கு ஏற்படும் செக்ஸுவல் ரீதியான ஆசை, விருப்பம், ஆர்வம் போன்றவற்றை ராதிகா ஆப்தேவின் கதாப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது.

சுதா!

சுதா!

பூமி பட்னேகர் (சுதா எனும் பாத்திரத்தில்) வீட்டு வேலை செய்யும் பெண்ணாக தோன்றுகிறார். சுதா தான் வேலை செய்யும் வீட்டில் இருக்கும் ஒரு படித்த இளைஞருடன் செக்ஸுவல் உறவில் இருக்கிறார். அவர் பெயர் அஜித். அஜித் வீட்டில் அவரது பெற்றோர் அவ்வப்போது வந்து தங்கி செல்வார்கள். அவர்களுக்கும் சுதா மீது ஒரு தனி பிரியம் உண்டு.

ரொமான்ஸ்!

ரொமான்ஸ்!

ஒருமுறை அப்படியாக தங்குவதற்கு வருகிறார்கள் அஜித்தின் பெற்றோர். சுதாவும் எப்போதும் போல வீட்டு வேலைக்கு வந்து செல்கிறார். அப்போது ஒரு நாள் அஜித் பெற்றோருக்கு தெரிந்தவர்கள் சிலர் வருகிறார்கள். பிறகு தான் சுதாவிற்கு, வந்தவர்கள் அஜித்தை மாப்பிளை பார்க்க வந்தவர்கள் என்று உணர்கிறாள். அஜித்தும், அந்த பெண்ணும் தனிமையில் ரொமான்ஸ் செய்கிறார்கள். அனைவருக்கும் வேண்டியதை சமைத்து தருகிறார் சுதா.

இயல்பு வாழ்க்கை!

இயல்பு வாழ்க்கை!

வந்த வேலை முடிந்து பெண் வீட்டார் கிளம்பியதும். அஜித்தின் அம்மா.., நல்ல வரன், நல்ல குடும்பம், ஏற்ற ஜோடி என்று புகழ்ந்து பேசி வீட்டுக்கு போகும் போது இனிப்புகள் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போ என்கிறார். அஜித் வீட்டில் இருந்து வெளியேறி, லிப்ட்டுகாக காத்திருக்கும் போது, சுதாவின் தோழி, அவர் வேலை செய்யும் வீட்டில் உடை கொடுத்ததாக பூரித்து, மகிழ்ந்து அதை காட்டி மகிழ்கிறார். சுதா தனக்கு கொடுத்த இனிப்பை அவருடன் பகிர்ந்து, இதர கசப்பான நினைவுகளை அந்த இனிப்புடன் சேர்த்து விழுங்கி கொண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்.

ரீனா!

ரீனா!

மனிஷா கொய்ராலா (ரீனா என்ற பாத்திரத்தில்) திருமணமாகி, வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருக்கிறார். ரீனாவின் கணவரும், சுதிர் என்பவரும் நீண்ட நாள் நண்பர்கள். கணவரின் நண்பருடன் தான் ரீனா தவறான உறவில் இருந்து வருகிறார்.

ஒருமுறை ரீனா சுதிர் உடன் பீச் ஹவுசில் இருக்கும் போது, ரீனா பொய் கூறிவிட்டு வேறு எங்கோ சென்றுள்ளார் என்பதை அறிகிறார் கணவர் சல்மான். ரீனாவுக்கு தன்னை பிடிக்கவில்லை போல, அவளுக்கு என்னுடன் வாழ விருப்பமில்லை என்று சுதிரிடம் கூறி வருத்தம் கொள்கிறார் ரீனாவின் கணவர் சல்மான்.

தவறான உறவு!

தவறான உறவு!

வருத்தத்தை தனது நெருங்கிய நண்பர் சுதிர் உடன் கூறிவிட்டு, தான் தற்கொலை செய்துக் கொள்ள போவதாகவும் கூறுகிறார். பிறகு வேறு வழியின்றி, நமது பிரச்சனை குறித்து பேசவே சுதிர் வீட்டுக்கு வந்ததாக ரீனா சல்மானிடம் கூறுகிறார்.

ரீனாவும், சுதிரும் மூன்று ஆண்டுகளாக இந்த உறவில் நீடித்து வருகிறார்கள். சல்மான் வெறும் பிஸ்னஸ் மேனாக மட்டுமே இருக்கிறார். அவருக்கு தனது பிள்ளைகளுக்கு ஒரு மனைவி வேண்டுமே தவிர, அவருக்கு ஒரு மனைவி தேவை இல்லை என்ற கருத்தால் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார் ரீனா.

முடிவு!

முடிவு!

சல்மான், சுதிர், ரீனா மூவரும் பீச் ஹவுசில் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள். அன்றைய இரவில் தனக்கும், சுதிருக்கும் இருக்கும் உறவை குறித்து சல்மானிடம் கூறிவிடுகிறார் ரீனா. ஒருபுறம் நெருங்கிய நண்பர், மறுபுறம் மனைவி. என்ன செய்வதென்று அறியாமல் குழம்பி நிற்கும் சல்மான். மறுநாள் காலை, தனக்கு தெரிந்ததாக சுதிரிடம் காண்பித்துக் கொள்ள வேண்டாம். இத்துடன் இந்த உறவை முடித்துக் கொள் என்று கூறி, சல்மான் ரீனாவை அழைத்து செல்கிறார்.

ஆனால், சல்மான் அனைத்தும் அறிந்துவிட்டார், தான் எல்லா உண்மைகளையும் இரவே கூறிவிட்டேன். அவர் உன்னிடம் அவை தெரிந்தது போல இனிமேல் காண்பித்துக் கொள்ள மாட்டார் என்று கூறி சுதிரை பிரிந்து கணவருடன் செல்கிறார் ரீனா.

மேகா!

மேகா!

கெய்ரா அத்வானி (மேகா என்ற பாத்திரத்தில்) பள்ளி ஆசிரியராக தோன்றுகிறார். மேகாவும் பராஸ் என்பவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். திருமணத்திற்கு பிறகு இருவரும் தொடர்ந்து தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அதில் மேகாவிற்கு திருப்தி ஏற்படுவதில்லை. தன் திருப்தி மட்டுமே போதுமானதாக கருதும் பராஸ்க்கு மேகாவின் தேவை, ஆசை குறித்து துளியும் அறிவதில்லை.

சுய இன்பம்!

சுய இன்பம்!

அப்போது தன்னுடன் பணிபுரியும் ரேகா என்ற லைப்ரரி ஆசிரியை வைப்ரேட்டர் பயன்படுத்தி சுய இன்பம் காணும் பழக்கம் கொண்டிருக்கிருப்பதை அறிந்து மேகா அவரிடம் இதெல்லாம் தவறில்லையா? குறைந்தபட்சம் பள்ளியில் இதை தவிர்க்கலாமே என்று கேட்கிறார். ஆனால், ரேகா ஆண்கள் எப்போதும் நம்மை திருப்தி படுத்த மாட்டார்கள் என்று காரணம் கூறி சென்றுவிடுகிறார். இது மேகாவிற்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வைப்ரேட்டர்!

வைப்ரேட்டர்!

இதனால் ரேகா இல்லாத சமயம் பார்த்து அவர் பயன்படுத்தும் வைப்ரேட்டர் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று முயற்சிக்க விரும்புகிறார். வீட்டில் யாரும் இல்லாத போது தனி அறையில், வைப்ரேட்டர் பொருத்திக் கொள்ளும் சமயத்தில் கணவர் பராஸ் விபத்தில் சிறு காயங்களுடன் அடிப்பட்டு வீடு திரும்புகிறார். அனைவரும் அவரை கவனிக்க, மேகா வைப்ரேட்டர் ரிமோட்டை மேஜையில் வைத்துவிட்டு ஓடுகிறார்.

அந்த வீட்டில் இருக்கும் பாட்டி ஒருவர் டிவி ரிமோட் என்று கருதி வைப்ரேட்டர் ரிமோட்டை அழுத்த. தண்ணீர் எடுத்து கொண்டிருக்கும் போது, வீட்டு ஹாலில் அனைவர் முன்னிலையில் உச்சகட்ட இன்பத்தை அடைகிறார் மேகா. இதனால் மேகாவின் நடத்தை சரியில்லை என்று கூறி பிரிந்துவிட கூறுகிறார்கள் பராஸ்ன் பெற்றோர்.

பிறகு சில காலம் கழித்து மீண்டும் பராஸ் மேகாவை காண வந்து, தவறு என்னுடையது தான் என்று அறிந்து. இனிமேல், உன் விருப்பப்படி நடந்து கொள்வேன். நான் உன்னை பிரிய விரும்பவில்லை. உன்னுடன் சேர்ந்து வாழ்வே விரும்புகிறேன் என்று கூறுகிறார்.

செக்ஸ்!

செக்ஸ்!

நான்கு பெண்கள், நான்கு விதமான வாழ்வியல்கள், ஆசைகள், விருப்பங்கள் கொண்டிருக்கும் பெண்கள். ஆனால், அடிப்படையில் இவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது செக்ஸுவல் விஷயங்கள். செக்ஸ் என்பது இயல்பானது தானே என்று நாம் கருதலாம். ஆனால், பெரும்பாலான வீடுகளில் செக்ஸ் தான் சண்டை மற்றும் உறவில் விரிசல் ஏற்பட காரணமாக இருக்கிறது.

ஆசைகள்!

ஆசைகள்!

இந்திய பெண்கள் இதை பெரிதுப்படுத்துவதில்லை என்ற கண்ணோட்டம் இருந்தாலும், உண்மையில் பல பெண்கள் இதை வெளியே கூற முடியாமல், தங்கள் ஆசைகளை வெளிக்காட்ட முடியாமல் மூடி மறைத்துக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

இங்கே தனது செக்ஸ் ஆசை பற்றி ஒரு ஆண் பேசலாம். ஆனால், பெண் பேசினால் அவள் நடத்தை கெட்டவள் என்று கூறுபவரே அதிகம். இன்று வரையிலும் பெண் ஆண்கள் கட்டமைத்த சமூகத்தினுள் தனது ஆசைகளை, உரிமைகளை இழந்து தான் வாழ வேண்டும் என்பது ஒரு விதியாக இருக்கிறது.

லஸ்ட் ஸ்டோரீஸ்!

லஸ்ட் ஸ்டோரீஸ்!

பெண்களுக்கும் இப்படியான ஆசைகள் இருக்கிறது, அவர்கள் வாழ்விலும் இப்படியான நிகழ்வுகள் உருவாகலாம் என்பதை வெளிப்படுத்தி கூறுகிறது லஸ்ட் ஸ்டோரீஸ். இந்த நான்கு கதைகளில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் சஈடுபடும் செயல்களில் பல ஆண்கள், பல காலமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

ஆனால், ஆண் ஈடுபடும் போது ஏற்படும் தாக்கத்தை காட்டிலும், பெண் ஈடுபடும் போது அதன் தாக்கம் பெரியதாக காணப்படுகிறது. ஆண்கள் சில தவறுகளை திருத்திக் கொண்டால், பெண்கள் இப்படியான செயலில் ஈடுபட வாய்ப்புகளே அமையாமல் போகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lust Stories: What This Film Talks About? Lesser Known Desires That Indian Women Has in Relationship!

Lust Stories: What This Film Talks About? Lesser Known Desires That Indian Women Had in Relationship!
Story first published: Tuesday, June 26, 2018, 14:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more