நமக்கு எந்த அளவிற்கு காதல் அவசியமானது?

Posted By:
Subscribe to Boldsky

காதல் தன்னம்பிக்கைக்கான ஓர் உத்தி என்று சொல்லலாம். இந்த உலகத்தில் நாம் தனியாக இல்லை என்பதை நீங்கள் உணர்வதற்க்கான ஓர் யுத்தி தான் இந்த காதல். ஆரம்பத்திலிருந்து இப்போது வரை நம்முடைய உணர்வுச்சிக்கலில் சிக்கி தவிப்பது இந்த காதல் தான்.

அதற்காக காதலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடவும் முடியாது. வாழ்க்கைக்கு காதல் மிகவும் முக்கியமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களுக்கு :

உங்களுக்கு :

காதலிக்கும் நபருக்கு ஆறுதல் அளிக்கும். நமக்கான ஓர் நபர் நம்மை அன்பு செலுத்தும் ஓர் நபர் இங்கே இருக்கிறார் என்ற எண்ணமே உங்களை உற்சாகப்படுத்தும். அதே நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பிரச்சனைகளை தவிர்க்க மனம் விட்டு பேசக்கூடிய ஓர் நபர் உங்களுக்கு தேவை. உங்கள் முழு நம்பிக்கையை பெற்ற ஓர் நபரிடம் மட்டுமே நீங்கள் உங்களின் மைன்ஸ்களை சொல்வீர்கள் அதற்காகவாவது காதல் அவசியம்!.

எமோஷனல் :

எமோஷனல் :

சோர்ந்திருக்கும் நேரங்களில் நம்மை மீட்டெடுக்க சில அன்பான வார்த்தைகளும் அரவணைப்பும் தேவை. அவற்றை நிச்சயமாக நம்மை நேசிக்கும் நபர்களிடத்தில் எதிர்ப்பார்க்கலாம். உங்களின் எண்ண ஓட்டங்களை பகிர்தலுக்கான ஓர் வடிகாலாகவும் அந்த நபர் அமையலாம்.

சுயநலம் :

சுயநலம் :

எனக்காக... எனக்கானது என ஒவ்வொன்றும் உங்களுக்காகவே சிந்திக்கும் நேரங்களில் தவிர்த்து இன்னொருவருக்காக பிறரின் நலனுக்காக அக்கறை செலுத்த ஆரம்பிப்பீர்கள். ஒன்றை நேசித்தால் அதனுடைய நலனில் நமக்கும் அக்கறை வந்துவிடும். எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு உங்கள் மீதே உங்களுக்கு ஓர் பச்சாதாபம் ஏற்பட்டிருக்கும் சூழலில் காதல் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

எதிர்காலம் குறித்த ஓர் அச்ச உணர்வு எல்லார் மனதிலும் இருக்கும். அவற்றை நான் தனியாக சந்திக்கப்போவதில்லை என்னுடன் சேர்ந்து களம் காண ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்கு ஓர் பாதுகாப்பு உணர்வைத் தரும்.

வாழ்க்கை :

வாழ்க்கை :

வாழ்க்கை ஓட்டத்திற்காக நீங்கள் மன ரீதியாக தயாராக உதவிடும். அன்புக்காக ஏங்கித்தவிக்கும் தருணங்கள் அன்பின் இருப்பை உணர்த்திடும். சண்டையிடும் போதும், பிரிவிலிருந்து மீண்டு வரும் போதும் மனரீதியாக உங்களை நீங்களே வென்றெடுத்திருப்பீர்கள்.

உடல்நலம் :

உடல்நலம் :

உரிய பருவத்தில் செக்ஸ் உணர்வு தூண்டப்படும், அதனை மூடி மறைத்துக் கொண்டேயிருந்தால் உங்களுக்குத் தான் பிரச்சனையாய் வந்து முடியும். செக்ஸ் உணர்வு வருவது பெருந்தவறு என்று நினைத்து வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.

பொறுப்பு :

பொறுப்பு :

காதலில் துணையின் மனமரிந்து செயல்பட ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களுக்கான சில பொறுப்புகள் உங்கள் கடமையை நிதர்சனமாய் செய்ய வைத்திடும். இந்தந்த பொறுப்புகள் எல்லாம் இருக்கிறது என்று உங்களை நீங்களே தட்டியெழுப்பவும் சோர்விலிருந்து மீட்கவும் உதவிடும்.

மன்னிப்பு :

மன்னிப்பு :

இருவருக்கும் இடையிலான அன்னியோன்னியத்திற்கு மன்னிப்பும் சகிப்புத்தன்மையும் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்வீர்கள். தான்தோன்றித்தனமாக திரிந்த காலத்தை விட காதலில் இருக்கும் போது விட்டுக் கொடுத்து செல்வது, மன்னிப்பது பொறுத்துச்செல்வது என்று பழகுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons For Why We Need Love?

Are you Need Love?