For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கட்டுனா பெங்காலி பொண்ண தான் கட்டனும், ஏன்னு தெரியுமா?

  |

  பெங்கால் என்றால் முதலில் நினைவிற்கு வருவது பாங்கு, இனிப்புகள், அழகான பெண்கள். இந்த மூன்று ஆண்களுக்கு மிகவும் பிடித்தமானவை என்பது வேறு விஷயம். 

  உங்களுக்கொன்று தெரியுமா? பெங்கால் பெண்கள் எப்போதும் இளமையாக தோற்றமளிப்பார்கள். நீங்கள் 25 வயதிருக்கும் என கருதும் பெண், உண்மையில் 35 வயதை எட்டிய பெண்ணாக இருப்பார்.

  மிகவும் நட்பாக பழக கூடிய பெற்றோர், இயல்பாகவே இரத்தத்தில் கலந்திருக்கும் தைரியம் என பெங்கால் பெண்களிடம் நிறைய ப்ளஸ் இருக்கிறது....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  புறா போன்ற கண்கள்!

  புறா போன்ற கண்கள்!

  பொதுவாகவே பெண்களின் அழகை மேம்படுத்தி காட்டுவதில் கண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதிலும், பெங்காலி பெண்கள் கண்ணழகிற்கு பெயர் போனவர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பெங்கால் பெண்களின் கண்கள் புறா போல இருக்கும் என வர்ணிப்பார்கள். அதற்கென சிறகுகள் இருக்குமா என கேள்வி கேட்டக் கொடாது. அவர்களது கருநிற கண்கள் ஆண்கள் ஈர்க்கும் காந்தங்கள் என கவிப்பாடுகிறார்கள்.

  தைரியம்!

  தைரியம்!

  மிக கனிவான இதயம் கொண்டவர்கள் என பெங்காலி பெண்களை கூறுகிறார்கள். அதே சமயம் கனிவிற்கு இணையாக தைரியம், சுய சார்பு மற்றும் சுதந்திரம் கொண்டுள்ளவர்கள். எதற்கும் அச்சம் கொள்ளமாட்டார்கள். தாங்கள் செய்யும் செயல்களில் தீர்க்கமாக இருப்பார்கள். அதே போல, ஒரு தருணத்தில் / இடத்தில் தனக்கு தைரியம் இல்லை எனலும், அதை ஒப்புக்கொள்வார்கள்.

  பேச்சு!

  பேச்சு!

  மிக தெளிவாக, அறிவுப்பூர்வமாக பேசுபவர்கள். கடவுளிடம் வேண்டுவது மட்டுமின்றி, தான் வேண்டுவதை எப்படி அடைய வேண்டும் என்ற வழியும் அறிந்தவர்கள். ஓர் நல்ல ஆரோக்கியமான விவாதம் மேற்கொள்ள சிறந்தவர்கள் பெங்காலி பெண்கள்.

  மேஜிக்!

  மேஜிக்!

  பெங்காலி பெண்கள் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் சமைக்கவும் தெரிந்தவர்கள். அதிலும் முக்கியமாக நொறுக்கு தீனிகள், சாட் ஐட்டம்ஸ், பால் இனிப்புகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். நீங்கள் ஒரு சாப்பாட்டு பிரியராக இருந்தால், வாழ்வில் ஒருமுறையாவது பெங்கால் சென்று வர வேண்டும்.

  பேச்சுத்திறன்!

  பேச்சுத்திறன்!

  தங்கள் குரல்வளம் மற்றும் பேசும் அந்த ஸ்லாங்கிலேயே திணறடிக்க கூடிய திறன் கொண்டவர்கள். அவர்கள் பேசுவது கட்டளை இடுவது போல இருக்கும். பேச்சிலேயே வீரம் இருக்கும். நீங்கள் ஓரிரு நாள் பழகியிருந்தால் கூட, வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகள் தரவல்லவர்கள்.

  பெற்றோர்!

  பெற்றோர்!

  காதலியின் பெற்றோர் வில்லன்கள் என்ற கூற்று தான் உலக சினிமாவில் நாம் கண்டறிந்த காட்சிகள். ஆனால், பெங்கால் பெற்றோர்கள் மிகவும் நட்பாக பழக கூடியவர்கள். மகளை காதலிக்கும் ஆணாக இருப்பினும், அந்த நபரை பெண்ணின் அப்பா ஒரு நண்பன் போல ட்ரீட் செய்து பேசும் மனோபாவம் கொண்டவர்கள். ஆனால், அம்மாவை கையாள்வது தான் கொஞ்சம் கடினம்.

  திருமணம்!

  திருமணம்!

  இந்தியாவிலேயே திருமணத்தை மிக விமர்சியாக, ஒரு பெரும் திருவிழா போல கொண்டாடுபவர்கள் பெங்காலியினர். அந்த ஏரியாவில் ஏதோ திருமணம் போல என பக்கத்து ஏரியா நபர்கள் பேசும் அளவிற்கு திருமணம் பெரும் கொண்டாட்டமாக நடக்கும். மிக வண்ணமயமான, சப்தம் மிகுந்த, உணவுகள் நிறைந்த விழாவாக இருக்கும்.

  பேரம்!

  பேரம்!

  சந்தையில் பேரம் பேசுவது பெண்கள் அறிந்த கலை எனில், அதில் கில்லாடிகள் பெங்காலி பெண்கள். தனது முக பாவனையில் மிரட்டியே பேரத்திற்கு படிய வைத்துவிடுவார்கள். அப்படி, இப்படி பேசி தாங்கள் விரும்பும் விலைக்கு பொருளை மிக எளிதாக வாங்கி விடுவார்கள்.

  பூஜை!

  பூஜை!

  கணவனிடம் பேசியே ஜெயித்துவிடும் பெங்காலி பெண்கள், கணவனுக்காக பூஜைகள் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். துர்கா பூஜை மிகவும் சிறப்புடையதாக காணப்படுகிறது. மிகுதியான ஈடுபாட்டுடன் பூஜைகள் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் பெங்காலி பெண்கள்.

  மாடர்ன்!

  மாடர்ன்!

  மாடர்ன் - டிரெண்டி - கலாச்சாரம் என எல்லாம் கலந்த கலவை பெங்காலி பெண்கள். ஜீன்ஸ், டீ-ஷர்டாக இருந்தாலும் சரி, புடவையாக இருந்தாலும் சரி, இவர்களை அடித்துக் கொள்ள முடியாது. புடவையில் துர்கா தேவி போலவே காட்சியளிப்பார்கள்.

  கோபம்!

  கோபம்!

  கொஞ்சம் அவர்கள் வெறுப்படையும் படி நடந்துக் கொண்டாலோ, பேசினாலோ, பத்திரகாளி போல மாறிவிடுவார்கள். எனவே, இவர்களிடம் வாய் கொடுப்பதற்கு முன்னர், கொஞ்சம் பயிற்சியும், முதிர்ச்சியும் அவசியம்.

  திறமை!

  திறமை!

  சமையல் செய்வதில் கெட்டிக்காரி என கூறியிருந்தோம் அல்லவா, அதை படித்து சில பெண்ணியவாதிகள், பெண்கள் என்றால் சமைப்பதற்கு மட்டும் தான் என குமுறலாம். கொஞ்சம் பொறுங்கள்... பெங்காலி பெண்கள் இயல்பாகவே நன்கு பாடவும், நடனம் ஆடவும் தெரிந்தவர்கள். ஆடல், பாடல் கலையிலும் மற்ற மாநில பெண்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் ஒரு படி மேல இருக்கிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Reasons Why Bengali Girls are Best Wives?

  Reasons Why Bengali Girls are Best Wives?
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more