நடுரோட்டில் ட்ராபிக் ஜாம் இடையே ப்ரபோஸ் செய்த முகேஷ் - நீத்தாவின் காதல் கதை!

Posted By:
Subscribe to Boldsky

முகேஷ் அம்பானி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் சிறந்த தொழிலதிபராக திகழும் நபர். ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர் முகேஷ் அம்பானி. தான் எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

Mukesh Ambani and Nita, The Richest Love of India!

வியாபாரத்தில் மட்டுமல்ல, காதலிலும் இவர் கெட்டி தான். தனது காதல் மனைவிக்கு ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் யோசிக்க முடியாத அளவில் ஒரு வியக்கத்தக்க பரிசை கொடுத்து அசத்தும் சூப்பர் காதலனும் கூட.

அப்பாவின் தேர்வாக இருந்தாலும், நீத்தாவிடம் ப்ரபோஸ் செய்த பிறகே திருமணம் செய்துக் கொண்டார் முகேஷ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடன கலைஞர்!

நடன கலைஞர்!

நீத்தா அம்பானி ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர். இவரது தாய் ஒரு குஜராத்தி நடன கலைஞர்.

நீத்தா ஐந்து வயது முதலே பரதநாட்டியமும் கற்க துவங்கிவிட்டார். பல மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார் நீத்தா அம்பானி.

திருபாய் அம்பானி!

திருபாய் அம்பானி!

நீத்தா அம்பானிக்கு 20 வயது இருக்கும் போது, நவராத்திரி விழாவில் ஒரு மேடையில் பரதநாட்டியம் நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார். அந்த விழாவில் திருபாய் அம்பானி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நீத்தாவின் நடன திறனை கண்டு வியந்தவர் அம்பானி. அவரை தனது மருமகள் ஆக்கிக்கொள்ள முடிவு செய்து, ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம் நீத்தாவின் தொடர்பு எண் பெற்று சென்றார்.

அழைப்பு!

அழைப்பு!

திருபாய் அம்பானி முதலில் கால் செய்து "நான் திருபாய் அம்பானி பேசுகிறேன்" என்றதும் மறுமுனையில் இருந்த நீத்தா "ராங் நம்பர்" என கூறி கட் செய்துவிட்டார்.

மீண்டும் அழைத்து, "நான் திருபாய் அம்பானி பேசுகிறேன், நீத்தாவிடம் பேசவேண்டும்" என்றதும். நீத்தா, "நீங்கள் திருபாய் அம்பானி என்றால், நான் எலிசபத் டெயிலர்" எனக் கூறி காலை கட் செய்துள்ளார்.

அப்பா!

அப்பா!

பிறகு நீத்தாவின் தந்தை மூலமாக தொடர்பு கொண்டு நீத்தாவிடம் பேசியுள்ளார் திருபாய் அம்பானி. அப்போது அவரிடம் "என் மகனை (முகேஷ்) திருமணம் செய்து கொள்வாயா?" என கேட்டுள்ளார். அதிர்ந்து போனார் நீத்தா. பிறகு தன் மகனை நேரில் சந்தித்து பேசு என்று கூறியுள்ளார்.

முதல் சந்திப்பு!

முதல் சந்திப்பு!

முதல் சந்திப்பு உஷா கிரண் என்ற இடத்தில் நடந்தது. வெள்ளை ஷர்ட், கருப்பு பேன்ட் அணிந்து வந்துள்ளார் முகேஷ். இப்படியாக ஒரு ஆறேழு சந்திப்புகள் நகர்ந்தன.

ஆனால், இருவரும் திருமணம் பற்றியோ, காதல் பற்றியோ பெரிதாக பேசிக் கொள்ளவும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் ப்ரபோஸ் செய்துக் கொள்ளவும் இல்லை.

மோசமான ப்ரபோசல்!

மோசமான ப்ரபோசல்!

ஒருநாள் இருவரும் காரில் சென்றுக் கொண்டிருந்த போது. ட்ராபிக் சிக்னலில் கார் நின்றுக் கொண்டிருக்கையில், "நீத்தா நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா? என கேட்டுள்ளார் முகேஷ்.

சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. பின்னடி நின்ற அனைவரும் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தனர். நீத்தா நீ பதில் கூறாமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் என அடம் பிடித்துள்ளார் முகேஷ்.

ஓகே!

ஓகே!

பிறகு, "எஸ். நான் உன்னை திருமணம் செய்துக் கொள்வேன்" என நீத்தா கூறிய பிறகு வண்டியை எடுத்துள்ளார் முகேஷ். அந்த பயணம் இன்று வரை இனிதாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. முகேஷ் ஒரு சிறந்த காதலன் என்பதற்கு உதாரணம், அவர் தனது காதல் மனைவிக்கு அளிக்கும் பரிசுகள்.

எத்தனை பெரிதாக எதிர்பார்ப்பு கொண்டிருந்தாலும், அதை தாண்டி ஒரு பெரிய வியக்கவைக்கும் பரிசை கொடுத்து அசத்துபவர் முகேஷ். கோடிகளை செலவு செய்தாலும், அதில் ஒரு தனித்துவம் கொண்டு பரிசளிக்க கிரியேட்டிவ் மைன்ட் வேண்டும். அந்த கிரியேட்டிவ் மைன்ட் தான் காதலிலும், தனது தொழிலும் முகேஷ் சிறந்து விளங்க காரணமாக இருக்கிறது போல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mukesh Ambani and Nita, The Richest Love of India!

Mukesh Ambani and Nita, The Richest Love of India!