லவ்வர் தன் தோழிக்கு ரூட்டு விடுவதை பெண்கள் எப்படி கண்டுபிடிப்பார்கள் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். அப்படி பார்த்தல் ஆண் புத்தி என்னமாதிரியான புத்தி என ஆண்களால் கூட கூற முடியாது. என்னதான் அழகு தேவதை போல மனைவி / காதலி இருந்தாலும், இன்னொரு பெண் கடந்து போகும், மனதையும் அலைபாய விடுவது ஆண்களின் புத்தி.

வேலைக்கு போயிட்டு வர கேப்புல, வெளியூர் போகும் போதுஅப்படி இப்படி என இருக்க ஆண்கள் விரும்புவது அவர்களின் இயற்கையாக அமைந்துவிட்டது. பல நேரங்களில் துணையின் தோழியை கூட சைட் அடித்து மாட்டிக் கொள்வார்கள்.

ஒருவேளை, நீங்கள் உங்கள் காதலியின் தோழியை ரூட்டு விடுகிறீர்கள் எனில், அதை எந்தெந்த அறிகுறிகள் வைத்து உங்கள் காதலி கண்டுபிடித்துவிடுவார் என்பதை தான் இங்கே காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காட்டு, காட்டுன்னு காட்றது...

காட்டு, காட்டுன்னு காட்றது...

நான் ஒரு ரொமாண்டிக் பர்சன் என்பது போல காண்பித்துக் கொள்வது, காதலியின் தோழிக்கு முன் பரிசுகள் கொடுத்து அசத்துவது. நான் எல்லாம் யாரு தெரியுமா? என்பது போல தான் எப்படிப்பட்டவன் என்பதை காதலியின் தோழி இருக்கும் போது பறைசாற்றிக் கொள்வது...

உடனே ஓகே!

உடனே ஓகே!

அந்த ஒரு குறிப்பிட்ட தோழியுடன் வெளியே போகும் போது மட்டும் உடனே ஓகே சொல்லி அனுப்பி வைப்பது. பிறகு "நீங்க ரெண்டும் பேரும் சேஃபா இருக்கீங்களா? எந்த பிரச்சனையும் இல்லையே? நான் வேணா வரட்டுமா" என கேட்பது.

கண்காணிப்பு!

கண்காணிப்பு!

அந்த ஒரு குறிப்பிட்ட தோழியின் முகநூல் படங்கள், பதிவுகளுக்கு மட்டும் அதிகமான லைக்ஸ் மற்றும் கருத்துகள் பதிவிடுவது. நீங்கள் அந்த தோழியை பற்றி பேசும் போது அதிகமாக கவனிப்பது.

தோழன்!

தோழன்!

திடீரென காதலியின் அந்த ஒரு பெண் தோழியுடன் தோழமை பாராட்டுவது. "உன் பிரென்ட் என் பிரென்ட் இல்லையா" என்பது போல காதலியிடமே கூறுதல்.

உதவி!

உதவி!

நான் வேணும்னா அவள போய் டிராப் பண்ணிட்டு வரவா... அவளுக்கு எதாவது உதவி வேணும்னா என்கிட்டே கூச்சப்படமா கேட்க சொல்லு என காதலியிடமே பில்டப் காண்பிப்பது.

சிரிப்பு!

சிரிப்பு!

காதலியின் அந்த குறிப்பிட்ட தோழி மொக்கை ஜோக்கு அடித்தாலும் விழுந்து, விழுந்து சிரிப்பது. எப்படி நீ இப்படி எல்லாம் காமெடி பண்ற என உசுப்பேத்தி விடுவது. அவரை மட்டும் அதிகமாக சீண்டுவது.

அவளையும் கூப்பிடேன்

அவளையும் கூப்பிடேன்

சாப்பிட வெளியே போகும் போதோ, படம் பார்க்க தியேட்டர் போகும் போதோ அல்லது விண்டோ ஷாப்பிங் சென்றாலுமே கூட அவளையும் கூப்பிடேன் ஒண்ணா போகலாம் என தூதுவிடுவது.

முக மாற்றம்!

முக மாற்றம்!

எல்லாரும் ஒன்றாக அமர்ந்து பேசும் போது அந்த குறிப்பிட்ட தோழி இருக்கும் வரை சுறுசுறுப்பாகவும், அவர் நகர்ந்து சென்றவுடன் கம் பேக் டூ நார்மல் மோட் என்பது போல இருப்பதை வைத்து இந்த மூஞ்சி, அந்த மூஞ்சிக்கு ரூட்டு விடுதோ என காதலிக்கு டவுட்டு வரும்.

காதல்!

காதல்!

ஆண்கள், காதலியின் அந்த குறிப்பிட்ட தோழி யாருடனாவது புதியதாக பழகினாலோ, அவர் யாரையாவது விரும்புவதாக கூறினாலோ, அதை பிரிக்க அட்வைஸ் செய்வதை வைத்து சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்துவிடுவார்கள் காதலிகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How She Knows That You Attracted To Her Close Friend? Signs!

How She Knows That You Attracted To Her Close Friend? Signs!