‘விர்ச்சுவல் செக்ஸ்’மேற்கொள்வதற்கு முன்னால் இதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!

Posted By: Volga
Subscribe to Boldsky

இன்றைக்கு இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் தாம்பத்தியமும் விர்ச்சுவல் செக்ஸ் என்ற கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. தனியறைக்குள் நடக்கிற தாம்பத்தியம் என்ற விஷயம் இன்றைக்கு விர்ச்சுவல் செக்ஸ் எனும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.

விர்ச்சுவல் செக்ஸ் என்றால் என்ன? அதனை மேற்கொள்வதால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதா அல்லது அது தீங்கு விளைவிக்ககூடியதா என்பதை விரிவாக தொடர்ந்து காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விர்ச்சுவல் செக்ஸ் :

விர்ச்சுவல் செக்ஸ் :

விர்ச்சுவல் செக்ஸ் என்பது தனியாகவோ அல்லது இன்னொரு நபர் துணையுடனோ இணையத்தில் உடலுறவு சார்ந்த விஷயங்களை தேடுவது, பகிர்வது,பார்ப்பது போன்றவை எல்லாமே விர்ச்சுவல் செக்ஸ் தான்.

 என்னென்ன இருக்கிறது :

என்னென்ன இருக்கிறது :

இதற்கு முன்னரே பாத்தது போல செக்ஸ்டிங் எனப்படுகிற ஒரு வகை சாட்டிங். உடலுறவு சார்ந்த விஷயங்களை பேசுவது, பாலியல் ரீதியாக இன்னொருவரை கிளர்ச்சியை உண்டாக்கிடும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்புவது.

இரண்டாவதும், போன் செக்ஸ் எனப்படுகிற ஓர் வகை. இது போன் மூலமாக உடலுறவு சார்ந்த விஷயங்களை பேசுவது மற்றும் விவரிப்பது ஆகும்.மூன்றாவது செக்ஸ் தொடர்பான கதைகளை படிப்பது. நான்காவது போர்ன் வீடியோக்களை பார்ப்பது.

இது உண்மை தானா?

இது உண்மை தானா?

பொதுவாக சுய இன்பம் காணும் போது தனிமையில் இருந்து கொண்டு கற்பனையில் தான் உடலுறவு சார்ந்த சிந்தனைகளை வைத்திருப்பார்கள்.

ஆனால் தற்போது, எல்லாமே உண்மைக்கு வந்து விட்டது. நேரில் வரமுடியவில்லை இதோ ஆன்லைனில் வருகிறேன் என அதில் தொடர்கிறார்கள்.

பிசிக்கல் செக்ஸினை விட இந்த விர்ச்சுவல் செக்ஸ் வித்யாசமானது தான்.

ஏன் விர்ச்சுவல் செக்ஸ் விரும்பப்படுகிறது :

ஏன் விர்ச்சுவல் செக்ஸ் விரும்பப்படுகிறது :

பாலியல் சார்ந்த நோய்கள் வரும் என்று கவலைக் கொள்ளத் தேவையில்லை, கர்ப்பமானால் என்ன செய்வது என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. சிலருக்கு உடலுறவு என்றாலே பயம் இருக்கும். அது பயங்கர வலிதரக்கூடியதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இது ஓர் சிறந்த வழி.

சிலர் இதனை வெறும் பொழுதுபோக்கிறாகவே செய்வதும் உண்டு.

அந்தரங்கம் :

அந்தரங்கம் :

அந்தரங்கப் பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த விர்ச்சுவல் உலகத்தை நாடிவருகின்றனர். சிலருக்கு உண்மையான உறவு குறித்து பயம் இருக்கும். இந்த விர்ச்சுவல் உலகில் உண்மையான உறவில் ஈடுபடாமலே இன்பத்தைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது.

விரும்பக் காரணம் :

விரும்பக் காரணம் :

சூழ்நிலை காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியருக்கு இது ஒருவித அன்னியோன்னிய உணர்வைத் தருகிறது.இதுபோன்ற விர்ச்சுவல் பாலியல் கிளர்ச்சியின் மூலம் சிலர் ஆசுவாசமடைந்து, மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

ஆரம்ப நிலையில் பாலியல் குறித்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள இளம் பருவத்தினர் விர்ச்சுவல் செக்ஸ் ஒரு வழியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

ஆபத்துக்கள் :

ஆபத்துக்கள் :

எல்லாத் தொழில்நுட்பங்களிலும் உள்ளதைப் போலவே, மெய்நிகர் பாலியலிலும் சில ஆபத்துகள் உள்ளன. அவர்களின் மனதில், இது உண்மை அல்ல, வெறும் விர்ச்சுவல் செக்ஸ் மட்டுமே என்பதால் உண்மையில் துரோகம் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதில்லை. இதனை இருவருமே தெரிந்து செய்தால் சிக்கல் இல்லை.

இளம் வயதிலிருந்தே :

இளம் வயதிலிருந்தே :

சிறு வயதிலேயே பிள்ளைகள் ஆபாசப் படைப்புகள், இணையவழி பாலியல் போன்றவற்றை பயன்படுத்திப் பழக வாய்ப்புள்ளது. பெரியவர்களாகும்போது அவர்கள் தங்கள் இணையருடன் நிஜத்தில் அன்னியோன்னியமாக இருக்க முடியாத பிரச்சனைகள் ஏற்படலாம்.

நிஜ உலகில் ஆரோக்கியமான, இயல்பான உறவுகளைப் பராமரிப்பது அவர்களுக்கு சிரமமாகிவிடும். விர்ச்சுவல் உலகமும் நிஜ உலகமும் சந்தித்துக்கொண்டால் பெரும் ஆபத்தாகலாம்.

அடிமை :

அடிமை :

இணையத்திற்கு அடிமையாக இருப்பதும், போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதைப் போன்றதே. பல்வேறு வகையான இணைய பாலியல் செயல்களுக்கு அடிமையாகிப் போனவர்கள் அடிமைத்தனம் அதிகரித்து தன்னையே அழித்துவிடலாம்.

அவர்களின் அடிமைத்தனம் அதிகமாகி, அதிகமாகி பின்னாளில் அவர்களின் தினசரி வாழ்விலும், தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் குறுக்கீடுகளை ஏற்படுத்தலாம்.

சிலர் விரும்பாததற்கு காரணம் :

சிலர் விரும்பாததற்கு காரணம் :

இதில் ரியல் லைஃபில் செய்வது போல உடலுறவுக்கு முன்னதான ஃபோர்ப்ளே எல்லாம் செய்ய முடியாது. இருவருக்குள்ளேயும் விரும்பம் இருக்கும் பட்சத்தில் மட்டும் இது சுவாரஸ்யமானதாக இருக்கும்.

இருவரில் ஒருவருக்கு விருப்பம் குறைந்தாலும் இந்த விர்ச்சுவல் செக்ஸ் சுவாரஸ்யம் இல்லாதவையாகிடும். இது இணையத்தை சார்ந்திருப்பதால் நடுவில் ஏற்படுகிற இணையப் பிரச்சனைகளினால் உங்களுடைய செக்ஸ் மூடில் மாற்றங்கள் ஏற்படும்.

ப்ரைவசி :

ப்ரைவசி :

அதே போல இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான விஷயம் ப்ரைவசி. உங்களை, அல்லது உங்களின் செக்ஸ் உரையாடல்கள், வீடியோ கால்கள் ஆகியவற்றை நீங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எந்த வித உத்திரவாதமும் கிடையாது.

உண்மையா? விர்ச்சுவலா:?

உண்மையா? விர்ச்சுவலா:?

விர்ச்சுவல் ரிலேசன்ஷிப் உறவுகள் அதிக கிளர்ச்சியளிப்பதாகவும் இருக்கலாம், அதிக இன்பமளிப்பது போலவும் தோன்றக்கூடும், உண்மையான உறவுகளை விட குறைவான சிரமமே தேவைப்படும்.

ஆனால் உண்மையான உறவில் கிடைக்கும் உண்மையான தோழமையையும் சந்தோஷத்தையும் விர்ச்சுவல் ரிலேசன்ஷிப் ஒருபோதும் கொடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do you Know About Virtual Relationships?

Do you Know About Virtual Relationships?
Story first published: Monday, December 18, 2017, 17:20 [IST]