நீங்க ட்ரூவ்வா லவ் பண்றீங்களான்னு செக் பண்ண, பொண்ணுங்க இந்த 2 இரகசிய டெஸ்ட் வைப்பாங்க!

Posted By:
Subscribe to Boldsky

உறவுகளும் ஒரு பரிசோதனை கூடம் தான். இங்கு மனிதர்கள் மீது பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பரிசோதனை செய்யாமல் ஏற்றுக் கொள்ளப்படும் உறவுகள் இரண்டு தான் இருக்கின்றன, ஒன்று நட்பு, மற்றொன்று பெற்றோர் பிள்ளைகள் உறவு.

காதலிலும், இல்லற உறவிலும் பரிசோதனைகளுக்கு பஞ்சமே இருப்பதில்லை. முதல் பார்வையில் ஆரம்பித்து, இவன்/ள் தான் நமக்கானவர் என்ற நூறு சதவீத எண்ணம் மனதில் பதியும் வரை, சிலர் மத்தியில் பதிந்த பிறகும் அதிக அக்கறை, காதல் என்ற பெயரில் பரிசோதனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

இதில், ஆரம்பக் கட்ட காதல் வாழ்க்கையில் எண்ணிலடங்காத பரிசோதனைகள் நடக்கும். காக்க வைப்பதில் இருந்து, நெருக்கம் காட்டுவது வரையிலும்.

ஆண்கள் உண்மையாகவே விரும்புகிறார்களா என கண்டறிய பெண்கள் வைக்கும் இரண்டு இரகசிய பரிசோதனைகள் இருக்கின்றன அவற்றை பற்றி தான் இங்கு காண போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளே, வெளியே!

உள்ளே, வெளியே!

முன்பு போல பொத்தி, பொத்தி காதலிப்பதை எல்லாம் யாரும் விரும்புவதில்லை. முகநூல் பதிவு மூலமாகவே தங்கள் காதலை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் காலம் இது. ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்காவிட்டாலும், ஊருக்கு மத்தியில், நால்வர் முன்னிலையில் காதலை மறைப்பதை பெண்கள் விரும்புவதில்லை!

ஒருதலைப்பட்சம்!

ஒருதலைப்பட்சம்!

பெண்கள் வெளிப்படையாக கூறுவார்களா, இல்லையா என்று நீங்கள் வினாவக் கூடாது. ஆனால், முகநூலில் அல்லது வெளி இடங்களில் நீங்கள் காதலித்துக் கொண்டிருக்கும் போது, "மச்சான் நான் சிங்கிள் சிங்கம்" என்றும் பால் குடிக்க தெரியாத பூனை போல நடிப்புக் காட்டக் கூடாது என்று பெண்கள் விரும்புகின்றனர்.

கரார்!!!

கரார்!!!

இப்போது வண்டியில் ப்ரேக் அறுந்து தொங்குவதைவிட, காதலில் தான் நிறைய ப்ரேக் அறுந்து தொங்குகிறது. எனவே, இந்த உள்ளே ஒரு மாதிரி, வெளியே ஒரு மாதிரி என பித்தலாட்டம் ஆடும் ஆண்கள், உண்மையாக நடந்துக் கொள்ளமாட்டார்கள் என பெண்கள் கருதுகின்றனர்.

பொன் போன்ற நேரம்!

பொன் போன்ற நேரம்!

நேரம் பொன் போன்றது, அதை சரியாக பயன்படுத்தும் போது. முத்தம், கித்தம், உரசல் என எந்த ஒரு உடல் ரீதியான, காம இச்சை, உல்லாச உணர்வுகள் இல்லாத போதிலும் நீங்கள் அவருடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறீர்களா என பெண்கள் டெஸ்ட் வைப்பது உண்டு!

பொறுமை முக்கியம் பாஸ்!

பொறுமை முக்கியம் பாஸ்!

ஆண்களுக்கு பொறுமை சற்று குறைவு தான். தங்களுக்கு அங்கு ஏதேனும் வேலை இருந்தால் மட்டுமே நேரம் செலவழிப்பது வழக்கம். காதலில் பொறுமை அதிகம் இருக்க வேண்டும். ரொமான்ஸ் நேரத்தில் மட்டும் நேரம் செலவழித்துவிட்டு மற்ற நேரங்களில் கம்பிநீட்ட நினைத்தால், பழுக்க காய்ச்சி சூடு வைத்துவிடுவார்கள்.

லவ்வா அப்படினா?

லவ்வா அப்படினா?

இன்று பல காதல் கதைகள் நடுவானில் கந்தல் ஆவதற்கு காரணம், அவர்கள் பாராசூட் (காதல்) என நினைத்து ஸ்கூல் பேக் (இச்சை வேட்கை) கட்டிக் கொண்டு குதிப்பதால் தான்.

நேர்மை, உண்மை, கண்ணியம்!

நேர்மை, உண்மை, கண்ணியம்!

எனவே, முதலில் காதலை, காதலாக பாவிக்க, உணர கற்றுக் கொள்ளுங்கள். பிறகு இந்த நேர்மை, உண்மை, கண்ணியம் போன்றவற்றை தீர, தீர அனைத்திலும் ஒரு கிலோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் காதலும் நிலைக்காது, அது காதலாகவும் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

You Have To Pass These Two Secret Test To Prove Your Love

If Your Man Can't Pass These Two Easy Tests, Sorry, She Won't Get Into You.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter