Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இதெல்லாம், இப்படி எல்லாம் பேசுனா பிடிக்காது - சாட்டிங் பாய்ஸ் மீதான பெண்களின் கருத்து!
அந்த மாறி பேசுனா, இந்த மாறி தான் நினைப்போம் - சாட்டிங் பசங்க பத்தி பொண்ணுங்க என்ன சொல்றாங்க?
ஃபிளர்ட் செய்யும் ஆண்கள் என்று மட்டுமில்லாமல், நண்பர்கள், உறவினர்களில் யாரோ ஒருவர், உடன் பணிபுரியும் நபர் என அவர் யாராக இருப்பினும், எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது ஓவர் பில்டப் செய்து, நான் எல்லாம் அங்க இருந்திருந்தா நடக்குறதே வேற... என கிலோ கணக்கில் மொக்கை போடும் ஆண்கள் மீதான பெண்களின் கருத்து என்ன? வாங்க பாப்போம் / படிப்போம்...

பரிந்துரை!
ஜொள்ளு விடுபவர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அளவுக்கு மீறி ஜவ்விழுப்பு இழுத்து பேசும் ஆண்களை தங்கள் தோழிகள், நண்பர்களிடம் அவனிடம் அதிகமா வெச்சுக்காத என பரிந்துரைத்து, உங்கள் நட்பு வட்டாரம், சமூக வட்டார விரிவாக்க பணிகளை முடக்கி விடுவார்களாம்.

கால் கட்!
நீங்கள் பொதுவாக அழைத்தாலும் சரி, அவசரத்திற்கு அழைத்தாலும் சரி கால் செய்தால் எடுக்கவும் மாட்டார்கள், கால் செய்யவும் மாட்டார்கள்.

கருத்து!
ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி எல்லாரிடமும் கருத்து கேட்டாலும், உங்களிடம் கேட்க மாட்டார்கள்.

முக்கியமானவை!
நீங்கள் முக்கியமான விஷயத்தை கூற வந்தாலும் கூட, உங்களை விட்டு விலகி தான் செல்வார்கள். தட்டிக்கழிக்க செய்வார்கள்.

தவிர்த்தல்!
நீங்கள் பத்தடிக்கு தொலைவில் வருவதை காணும் போதே, பிஸியாக இருப்பது போலவும், வேறு நபருடன் பேசுவது போலவும் தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

எச்சரிக்கை!
போதுமப்பா சாமி, மொக்கை தாங்கல, கொஞ்சம் நிப்பாட்டு... காத்து வரட்டும் என நேரடியாக எச்சரிக்கை செய்வார்கள்.

பிளாக்!
முன்பு தான் எச்சரிக்கை, கால் எடுக்காமல் இருப்பது எல்லாம். இப்போதெல்லாம் நேரடியாக பிளாக் செய்துவிட்டு அப்பா சாமி, தொல்லை ஒழிந்தது என நிம்மதி பெருமூச்சு விட்டு, அவர்களுடைய வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்களாம்.

எரிச்சல்!
பொதுவாக ஒரு பெண்ணுடன் அதிகம் பேசும் போது, அவரது முக பாவனை வைத்தே அவர் ஆர்வமாக உள்ளார, எரிச்சல் அடைகிறாரா? என அறிந்துவிடலாம். எனவே, அவர் எரிச்சல் அடைகிறார் என தெரிந்துவிட்டால் பைபை சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம்.

திட்டு!
ஒவ்வொரு பொண்ணுக்கும், ஒவ்வொரு ஃபீலிங் அல்லவா. எனவே, சிலர் முகத்திற்கு நேராகவே திட்டு அனுப்பி விடுவார்களாம்.

பேசவே கூடாது!
இரண்டாவது, மூன்றாவது சந்திப்பிலும் நீங்கள் அளவுக்கு அதிகமாக பேசிக்கொண்டே இருந்தால். அவர்களோடு நான்காவது சந்திப்பு கிட்டவே கிட்டாது!



Click it and Unblock the Notifications