ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சைட்டில் ஆரம்பித்து, கிறுக்குத்தனமான காதல் வெளிபாடு, காதல் தோல்வி வலி என அனைத்தும் ஆண்களிடம் தான் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் வெளிப்படுத்தும் சைகைகளை புரிந்துக் கொள்ளவே ஆண்களுக்கு நாட்கள் பல ஆகிறது என்பது தான் உண்மை.

காதலினால் வலியும் சுகமும் இரண்டையுமே அதிகம் அனுபவிப்பது அவர்கள். பெண்களின் கற்பனை வாழ்க்கை சொர்கத்தை காட்டிலும் சிறந்தது. அதே போல, வலியை ஆண்கள் வீட்டிலும் ரோட்டிலும் காட்டி வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால், பெண்கள் எங்கும் வெளிபடுத்த முடியாத சமூகத்தில் நாம் வைத்திருக்கிறோம்.

எனவே, அவர்கள் சின்ன சின்ன விஷயகளை கூட மிகவும் பார்த்து, பார்த்து நுணுக்கமாக தான் செய்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஆண்களுக்கு அவர்கள் விரும்பி செய்யும் செயல்கள் சிறிதாக தெரிந்தாலும், அதன் பின்னே இருக்கும் காதல் மிகவும் பெரியது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை வணக்கம்

காலை வணக்கம்

பெண்கள் எப்போதுமே தான் விரும்பும் ஆணுக்கு தான் எழுந்ததும் முதல் செய்தியை அனுப்புவாள். வெறும் காலை வணக்கமாக ஆண்கள் கருதினாலும், அதன் பின்னணியில் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியத்தின் வெளிபாடு தான் இது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

கண்களை விரித்து பார்ப்பது

கண்களை விரித்து பார்ப்பது

பிரேமம் திரைப்படத்தில் சாயப் பல்லவி கண்களை விரித்து பார்ப்பது போல தான். சில சமயங்களில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த ஆண்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையிலும் அப்படி ஒரு பெண் இருந்தால், தயங்காமல் திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

சின்ன சின்ன பரிசுகள்

சின்ன சின்ன பரிசுகள்

பெரும்பாலும் ஐம்பது - நூறு ரூபாய் மதிப்பிலான பரிசுகளாக தான் இருக்கும். பர்ஸ், மோதிரம், காப்பு என எதையாவது பரிசளித்துக் கொண்டே இருப்பார்கள் பெண்கள். இதெல்லாம் அவர்கள் மனதில் உங்கள் மீதான விருப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதன் அறிகுறி.

உற்சாகப்படுத்துதல்

உற்சாகப்படுத்துதல்

சில சமயங்களில் எங்கு சென்றாலும் தங்களுடன் பெண்கள் வர நினைப்பதை ஆண்கள் விரும்பமாட்டார்கள். ஆனால், பெண்கள் அவர்களை உற்சாகப்படுத்தவும், சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவும் தான் உடன் இருக்க விரும்புவார்கள்.

அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வது

அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வது

மற்றவர்களை விட தங்களுக்கு உரியவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மனதில் ஆழ பதிந்திருக்கும். வேறு யாரேனும் இதில் போட்டிக்கு வந்தால் பத்திரகாளி ஆகிவிடுவார்கள்.

அசாத்திய அழகு

அசாத்திய அழகு

பெண்களின் உண்மையான அழகு அவர்கள் தூங்கி எழும் அந்த தருணம் தான். களைந்த கூந்தல், முட்டை போன்று விருந்திருக்கும் கண்கள். ஆனால், இந்த அழகுடன் உங்கள் முன் தோன்ற அவர் தயங்குவதில்லை என்றாலே, அவர் உங்கள் மீது விருப்பமாக உள்ளார் என்று தான் அர்த்தம்.

உணர்ச்சிவசப்படுவது

உணர்ச்சிவசப்படுவது

தங்களுக்கு மிகவும் பித்த ஆண் மீது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவர்கள் பெண்கள். அதற்கான உரிமையை நீங்கள் தராமலேயே அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

காதலிக்கிறேன்

காதலிக்கிறேன்

உங்கள் காதலிக்கு உங்கள் மீது அளவில்லாத காதல் இருக்கிறது என்பதை, அவர்கள் ஐ. லவ் யூ சொல்லும் எண்ணிக்கையை வைத்தே கண்டறிந்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Small Things Girls Love To Do For Their Boyfriends Do For Them

Eight Small Things Girls Love To Do For Their Boyfriends Do For Them, take look guys.
Story first published: Saturday, February 6, 2016, 13:05 [IST]