வீட்டு வேலைகளை ஒன்றாக செய்யும் தம்பதி மத்தியில் உடலுறவு சிறந்து விளங்குகிறதா?

Posted By:
Subscribe to Boldsky

நமது கலாச்சாரம் மற்றும் இல்லற வாழ்க்கை முறை என்பது கணவன் வெளி வேலைகள் செய்ய வேண்டும், மனைவி வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது முன்னாட்களில். ஆம், வேளாண்மை செய்துக் கொண்டிருக்கும் போது அப்படி தான் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை கணவன் மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில், ஒரே வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

கணினி மயம் அதிகமானதில் இருந்து, இல்லற வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மனக் கசப்பும், தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவாக இருப்பதும் தான். சமீபத்தில் வீட்டு வேலைகளை ஒன்றாக செய்யும் தம்பதி மத்தியில் உடலுறவு சிறந்து விளங்குகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது, அதன் தகவல்கள் குறித்து இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், வீட்டு வேலைகளை சேர்ந்து அல்லது பகிர்ந்து செய்யும் தம்பதியர் மத்தியில் உடலுறவு வாழ்க்கை சிறந்து காணப்படுகிறது. அவர்கள் முழுமையாக உடலுறவு வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள் என கண்டறியப்பட்டது.

மன நிறைவு

மன நிறைவு

தனது வீட்டு வேலைகளை பண்பாக செய்யும் ஆண்கள் தங்கள் துணையுடன் திருப்தியான, மன நிறைவான உடலுறவில் ஈடுபடுகிறார்கள், உணர்கிறார்கள் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் ஜான்சன்

பேராசிரியர் ஜான்சன்

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை சூழல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் ஜான்சன் (Matt Johnson) நடத்திய ஆய்வில் தான், வீட்டு வேலைகளில் உதவி புரியாத ஆண்கள் மத்தியில் உடலுறவு வாழ்க்கை குறைவாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது.

உள்ளுணர்வு

உள்ளுணர்வு

வீட்டு வேலைகளை பகிர்ந்துக் கொள்ளாத (அ) சேர்ந்து செய்யாத தம்பதிகள் மத்தியில் உடலுறவு சார்ந்த உள்ளுணர்வு குறைவாக இருப்பது தான், இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆய்வில் பங்கெடுத்தவர்கள்

ஆய்வில் பங்கெடுத்தவர்கள்

பேராசிரியர் ஜான்சன் நடத்திய ஆய்வில் 1,338 ஜெர்மன் தம்பதிகள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வின் போது தான், தம்பதிகள் தங்கள் இல்லற மற்றும் உடலுறவு வாழ்க்கையிலும் சிறந்து ஈடுபட உள்ளுணர்வு ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை ஜான்சன் அறிந்தார்.

காதல் அதிகரிக்கிறது

காதல் அதிகரிக்கிறது

வீட்டு வேலைகளில் ஈடுபட உறுதுணையாக இருப்பது, பெண்கள் மத்தியில் காதல் அதிகரிக்கவும், உறவில் மேலும் பிணைப்பை ஏற்படுத்தவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

அன்யோன்யம் அதிகரிக்கும்

அன்யோன்யம் அதிகரிக்கும்

இதுப் போன்று ஒன்றாக சேர்ந்து வீட்டு வேலைகளில் ஈடுபடும் போது, உங்களுக்குள் நடந்த கசப்பான நினைவுகள் மறையும், கோபம் குறையும், அன்யோன்யம் அதிகரிக்கும். இவை அனைத்தும் உங்கள் இருவருக்குள்ளான நெருக்கத்தை அதிகரிக்கும்.

புரிதலை உண்டாக்குகிறது

புரிதலை உண்டாக்குகிறது

ஒன்றாக சேர்ந்து வேலை செய்வதால், வீட்டில் மனைவி எவ்வளவு வேலை செய்கிறார் என்பதை கணவனால் உணர முடிகிறது. இது தம்பதி மத்தியில் நல்ல புரிதலை ஏற்படுத்த உதவுகிறது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

மேலும், இப்படி இருவரும் சேர்ந்து ஒன்றாக வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, உறவில் இருவர் மீதும் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறதாம். நாம் மேற்கூறியவை அனைத்தும் கணவன், மனைவி உறவில் அதிக பிணைப்பை ஏற்படுத்துகின்றன, இதனால் தான் உடலுறவு வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do Couples Who Share Chores Have Better Love Making?

Do Couples Who Share Chores Have Better Love Making? read here in tamil.