காதலில் விரிசல் ஏற்பட காரணமாக இருக்கும் ஆண்கள் செய்யும் சில முட்டாள்தனமான தவறுகள்!!!

By: John
Subscribe to Boldsky

அழகிலும் சரி, அறிவிலும் சரி, முதிர்ச்சியை வைத்து ஒப்பிடுகையில் பெண்களை விட ஆண்கள் எப்போதுமே குறைவானவர்கள் தான். 25 வயது பெண்ணுக்கு இருக்கும் முதிர்ச்சி 30 வயது ஆணுக்கு இருக்காது. இதன் காரணத்தினாலேயே, சில ஒண்ணுமில்லாத காரியங்களுக்கு எல்லாம் ஆண்கள் தேவையில்லாத, அளவுக்கு மீறிய உணர்ச்சிகளை வெளிபடுத்தி உறவில் விரிசல் ஏற்படும் அளவிற்கு நடந்துக் கொள்வார்கள்.

உதாரணமாக கோவம், ஆண்களை போல பெண்களும் கோவப்பட்டால், ஊரில் இருக்கும் முக்கால்வாசி குடும்பங்கள் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஆண்கள், எதையும் முழுமையாக கேட்கும் முன்னரே கோவத்தை வெளிக்காட்டிவிடுவார்கள்.

இதற்கு பெண்களும் காரணம், ஒரு விஷயத்தை சுருக்கமாக கூறி முடிக்காமல், ஜவ்வு போல இழுத்து ஆதற்கு ஜடை பின்னி, பூ வைத்து தான் கூறுவார்கள். இது போல ஆண்களின் சில செயல்பாடுகளால் எவ்வாறு உறவில் விரிசல்கள் ஏற்படுகிறது என இனி பார்க்கலாம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீர் போல போங்க வேண்டாம்

பீர் போல போங்க வேண்டாம்

நீங்கள் எத்தனை முறை பதில் கூறினாலும், உங்களுக்கு அவர்களை எவ்வளவு பிடிக்கும்? நீங்கள் அவர்களுக்கு எவ்வாளவு முக்கியமானவர்கள் என்று கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். இது பெண்களின் இயல்பு. உங்கள் உணர்வினாலும், தாக்கத்தினாலும், காதலினாலும், இந்த கேள்விகள் ஏற்படாத வண்ணம் ஆண்கள் நடந்துக்கொள்ள வேண்டும். மாறாக கோவம் அடைய கூடாது, எரிந்து விழக் கூடாது.

உணர்ச்சி நெருக்கம்

உணர்ச்சி நெருக்கம்

அவர்கள் கேட்கும் முன்னரே அவர்கள் முன் நீங்கள் நிற்க வேண்டும். எங்காவது கூட்டி செல்ல வேண்டும். உணர்சிகளில் நெருக்கம் குறையாத வண்ணம் ஆண்கள் நடந்துக் கொள்ள வேண்டும். பெண்களின் உணர்ச்சிகள் உங்கள் வட்டத்தை தாண்டி வெளியே சென்றுவிட கூடாது.

பிரிதல் இல்லாதது

பிரிதல் இல்லாதது

பெண்கள் சில விஷயங்களை அவர்களது காதலர்களின் நலனுக்காக மறைமுகமாக செய்வார்கள். ஆனால், ஆண்கள் அதை புரிந்துக் கொள்ள மாட்டார்கள். பெரும்பாலும், ஆண்களால் ஓர் காதலில் விரிசல் ஏற்படுகிறது எனில் அது, புரிதல் இன்மையினால் தான் அதிகம் இருக்கும்.

 பாராட்டுதல்

பாராட்டுதல்

பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பாராட்டுதலின் மூலமாக எதிர்பார்க்கும் பண்புடையவர்கள். எல்லாரிடமும் இல்லாவிட்டாலும், காதலன், மற்றும் பெற்றோரிடம் கண்டிப்பாக எதிர்பார்பார்கள். அதை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

தவறுகளை திருத்துங்கள், சுட்டிக்காட்டாதீர்கள்

தவறுகளை திருத்துங்கள், சுட்டிக்காட்டாதீர்கள்

தவறுகள் செய்யாத மனிதர்கள் கருவறையில் மட்டும் தான் இருக்கின்றனர். எனவே, உங்கள் காதலி ஏதேனும் தவறு செய்தால் அதை எப்படி திருத்துவது என்று கற்றுக் கொடுங்கள். அதை விட்டுவிட்டு, அதையே சுட்டிக்காட்ட வேண்டாம்.

நன்றி சொல்ல வேண்டாம்

நன்றி சொல்ல வேண்டாம்

நட்புக்குள் நன்றி கூற வேண்டாம் என்று கூறுவார்கள். உண்மையில், இல்லற உறவிலும் நன்றிக்கு வேலை இல்லை. அதிலும், காதலியிடம் நீங்கள் நன்றி கூறினால், அவர்களை விட்டு நீங்கள் தூரம் செல்வது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். எனவே, எக்காரணம் கொண்டும் நன்றி கூறாதீர்கள்.

மகிழ்ச்சியாக உணர வையுங்கள்

மகிழ்ச்சியாக உணர வையுங்கள்

உங்கள் அரவணைப்பில் இருக்கும் போது அவர்களது சோகம் கரைய வேண்டுமே தவிர நிறைய கூடாது. எனவே, முடிந்த வரை மகிழ்ச்சியாக காதலியை உணர வையுங்கள். அழ வைத்து வேடிக்கை பார்க்காதீர்கள்.

நீங்கள் மட்டுமே முக்கியம் என்று நினைக்க வேண்டாம்

நீங்கள் மட்டுமே முக்கியம் என்று நினைக்க வேண்டாம்

உங்கள் காதலியின் உலகில் நீங்கள் மட்டுமே இல்லை, அவளது குடும்பம், அவளது வேலைகள், அவளுக்கான உறவுகள் மற்றும் வாழ்க்கை என இன்னொரு பக்கமும் இருக்கிறது. எனவே, 24 மணிநேரமும் உங்களை மட்டுமே முக்கியமாக அவர் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.

ஐ லவ் யூ சொல்வதை நிறுத்துங்கள்!!

ஐ லவ் யூ சொல்வதை நிறுத்துங்கள்!!

நீங்கள் காதலித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள். பிறகு ஏன் தினமும், நித்தம், நித்தம், அந்த மூன்று வார்த்தைகளை எதிர் பார்த்து, கூறாவிட்டால் சண்டை என உங்கள் உறவை நீங்களே நாசம் செய்துக் கொள்கிறீர்கள்.

முழுதாய் கேட்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

முழுதாய் கேட்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் காதலி என்ன கூற வருகிறார் என்று, முதலில் முழுதாய் கேட்டு, அதன் பிறகு உங்கள் திருவாயை திறக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது பெண்களுக்கும் பொருந்தும். எதையும் முழுதாய் கேட்காமல், கோவம் அடைந்து வேண்டாத வார்த்தைகளை பிரயோகிப்பதனால் தான் பெரும்பாலான உறவுகளில் சண்டை வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Ways Some Men Badly Fail In Relationships

Do you know about the ten ways some men badly fails in relationship? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter