அவள் உங்களுக்கானவள் என்பதை எடுத்துரைக்கும் பத்து அறிகுறிகள் - லவ்வோ லவ்வு!!!

By: John
Subscribe to Boldsky

அறிகுறி இல்லாத நோய்கள் கூட உண்டு ஆனால் காதல் இல்லை. ஆம், ஒருவர் உங்களை லவ்வுகிறாரா என்பதில் இருந்து அவள் உங்களுகானவள் என்பது வரை காதலில் அனைத்திற்கும் அறிகுறிகள் உண்டு. ஏன், உங்களை அவர் பிரியப் போகிறார் என்பதை கூட சில அறிகுறிகளை வைத்து தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களை ஒருவர் லவ்வுகிறாரா.. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்!!!

அப்படி, ஓர் பெண்ணை பார்த்ததும், அவள் உங்களக்கென்று பிறந்த தேவதை என்று எடுத்துரைக்கும் சில அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றை கண்டால்., சற்றும் தயங்காமல் உங்கள் காதல் கூறிவிடுங்கள், ஆஃபர் குறுகிய காலம் மட்டும் தான் இருக்கும் ப்ரோ!!! மிஸ் பண்ணிடாதீங்க. அதுக்கு முன்னாடி அந்த அறிகுறிகள எல்லாம் தெரிஞ்சுக்குங்க....

டேட்டிங்கின் போது இதெல்லா பேசினால் பெண்களுக்கு பிடிக்காது - தெரிஞ்சுக்கங்க ஆண்களே!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவள் கண்களில் உங்கள் உலகம்

அவள் கண்களில் உங்கள் உலகம்

அனைவரும் அவரவர் கண்களில் தான் இந்த உலகத்தை பார்க்கின்றனர். ஆனால், அவளது கண்களில், நீங்கள் உங்களது உலகை காண்பீர்கள்.

"என் கண்களில் இவ்வுலகை கண்டேன்.., உன் கண்களில் தான் என்னுலகை கண்டேன்..." என்று கவிதையாக கூட கூறலாம். உடனே, லவ்வு தான், ஃபாரின்'ல சாங்கு தான்!!!

உங்கள் புன்னகைக்கு அவள் காரணமாக இருப்பாள்

உங்கள் புன்னகைக்கு அவள் காரணமாக இருப்பாள்

வடிவேலு, சந்தானம், சூரி போன்றவர்கள் காரணமாக இன்றி நீங்கள் சிரிப்பதற்கு அவள் மட்டுமே காரணமாக இருந்தால், அவள் தான் உங்கள் தேவதை, தவறியும் கூட, தவற விட்டுவிட வேண்டாம்.

உங்களை நீங்களாகவே ஏற்றுக்கொள்பவள்

உங்களை நீங்களாகவே ஏற்றுக்கொள்பவள்

எந்த நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் இன்றி, உங்களை நீங்களாக எப்படி இருக்கிறேர்களோ, அவ்வாறே ஏற்றுக்கொள்பவர் தான் உங்களது வருங்கால துணையாக இருக்க முடியும். எனவே, அவ்வாறான பெண்ணை பார்த்தல் மிஸ் பண்ணீடாதீங்க பாஸ்!!!

முழுமையான ஆதரவு

முழுமையான ஆதரவு

வெற்றிகளில் மட்டுமின்றி, தோல்விகளிலும் தோள் கொடுப்பவள் உங்களுது உயிர் தோழியாக மட்டுமல்ல, உங்களது உயிரை தாங்கும் தோழியாகவும் இருக்க உகந்தவள். எனவே, எதையும் எதிர்பார்க்காமல் காதலை கூறிவிடுவது, உங்களுக்கு ஓர் சிறந்த வாழ்க்கையை பரிசளிக்கும்.

பூரணமானவள்

பூரணமானவள்

எல்லா பெண்களையும் பார்க்கும் போதும், அவள் நமக்கு உரியவள் என்ற எண்ணம் மனதில் எழாது. ஆனால், நமக்கு பிடிக்காததை செய்யும் போதும் கூட "அட பரவாயில்ல அவ தான.." என்று உங்கள் மனது ஏற்கும் ஒருத்தி தான் உங்களுக்கான பெண்.

எதிர்காலத்தில் நிற்பவள்

எதிர்காலத்தில் நிற்பவள்

நேற்று, இன்று மட்டுமின்றி, உங்களுடைய நாளைய நாளிலும் நூறு சதவீதம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் ஒருத்தி இருந்தாள் எனில், அவள் தான் உங்கள் வாழ்க்கை துணை. மிஸ் பண்ணீடாதீங்க!!!

விட்டுக்கொடுப்பவள்

விட்டுக்கொடுப்பவள்

நீங்கள் அடம்பிடிக்கும் விஷயத்தில் எல்லாம், உங்களுக்காக விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு உடையவள். அவளை தவிர ஓர் சிறந்த துணை உங்களுக்கு கிடைப்பது, வெள்ளிகிழமை விடுமுறை கிடைப்பது போல எல்லா நேரத்திலும் கிடைக்காது.

உங்களுக்கான இடத்தை கொடுப்பவள்

உங்களுக்கான இடத்தை கொடுப்பவள்

அவளது வாழ்க்கையில் உங்களுக்கான இடத்தை கொடுப்பவள். உங்களோடு நேரம் செலவழிப்பது, உங்கள் நேரத்திலும் பங்கெடுத்துக் கொள்வது என யார் ஒருத்தி உங்களோட தனது நேரத்தை பங்கிட்டு செலவு செய்கிறாளோ அவள் தான் உங்கள் காதலி!!!

உங்களது முயற்சிகளை உற்று நோக்குபவள்

உங்களது முயற்சிகளை உற்று நோக்குபவள்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் உற்று நோக்குபவள். அதற்கு தனது பங்களிப்பையும், ஆலோசனைகளையும் வழங்கும் பண்புடையவர்.

உங்களுக்கானவள்...

உங்களுக்கானவள்...

இப்படி ஒரு பெண்ணை உங்களுக்கு மட்டும் அல்ல உங்களது குடும்பத்திற்கும் பிடிக்கும். எனவே, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம். சரியான் நேரத்தில் தாமதிக்காமல், உங்கள் காதலை வெளிபடுத்துவது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Signs That Tell You She Is The One

Ten Signs That Tell You She Is The One
Please Wait while comments are loading...
Subscribe Newsletter