ஆண்களிடம் பெண்கள் விரும்பும் தோரணைகள்!!

By: John
Subscribe to Boldsky

மனித பிறவியில் மட்டும் தான் ஒவ்வொருவருக்கும் தனி விருப்பங்கள், ஆசைகள் இருக்கின்றன. அதிலும் சிறப்பாக, தனக்கு பிடித்தவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற தனி அட்டவணை வேறு இருக்கும். ஆண்களை சார்ந்த விஷயத்தில், அவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தாய், தங்கை, காதலி என ஒவ்வொருவரும் ஒரு விருப்பம் வைத்திருப்பார்கள்.

தம்பதியினரின் இன்பமான வாழ்க்கைக்கு பின்னணியில் இருக்கும் அறிவியல் விவரங்கள்!!!

இதில் தாய், சகோதரி போன்றவர்கள் 25 வயது வரை தான் அவர்களது விருப்பத்தை தெரிவிக்க முடியும். அதன் பிறகு அல்லி ராஜ்ஜியம் தானே. காதலி / மனைவி விரும்பும் படியான தோரணையில் இருக்க வேண்டியது தான் அவசியம், கட்டாயம் (அப்ப தான்'யா சோறு.... சோறு கிடைக்கும்!!!)

இன்பமாக இருக்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!!!

காதலி / மனைவி தங்கள் ஆண்கள் இவ்வாறான தோரணையில் இருக்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். அவற்றை பற்றி தான் இனிப் பார்க்க விருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைரியம்

தைரியம்

எந்த காரியங்களையும் தைரியமாக கைய்யாளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அதற்கென்று வம்பு சண்டைகளுக்கு எல்லாம் போக வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில்லை.

குழந்தைத்தனம்

குழந்தைத்தனம்

தைரியம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் தங்களை கொஞ்சவும், தாங்கள் கொஞ்சுவதற்கும் குழந்தையாக ஆண்கள் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள் பெண்கள்.

கிறிஸ்தமஸ் தாத்தா...

கிறிஸ்தமஸ் தாத்தா...

என்ன தாத்தா'வா... என்று வாயை பிளக்க வேண்டாம். கிறிஸ்தமஸ் தாத்தா நமக்கு என்ன தருவார்? நிறைய பரிசுகள் தருவார் அல்லவா... அதை தான் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். (நம்ம ஆளு சும்மா இருந்தாலும், அவளுக ஃப்ரெண்ட்ஸ் சும்மா இருக்க மாட்டாங்க. "ஹே.. என் ஆளு, இத கோவா'ல இருந்து வாங்கிட்டு வந்தான், துபாய்'லஇருந்து வாங்கிட்டு வந்தான்.." அப்படின்னு சொல்லுவாங்க, ஆனா அது கூரு பத்துக்கு வாங்குனதுன்னு அவனுக்கு மட்டும்'தா தெரியும்!!)

தோழனாக இருக்க வேண்டும்

தோழனாக இருக்க வேண்டும்

காதலாக இருந்தாலும் சரி, திருமண வாழ்வாக இருந்தாலும் சரி... காதலியும், மனைவியும் தங்களது துணை ஓர் நல்ல துணையாக இருப்பதை விட தோழனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

சிரிப்பூட்டும் குணம்

சிரிப்பூட்டும் குணம்

பெண்களுக்கு, தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் ஆண்களை மிகவும் பிடிக்குமாம். அதனால் நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர்களாக ஆண்கள் இருக்க வேண்டும் என்கின்றனர். (நீங்க மட்டும் சிரிச்சா பரவாயில்ல.., ஊரே கைக்கொட்டி சிரிக்கிதே....!!)

கட்டில் வீரன்

கட்டில் வீரன்

கட்டுக்கடங்காத வீரனாக இல்லாவிட்டாலும் கட்டிலில் ஆவது வீரனாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் பெண்களிடம் இருக்கின்றது.

கருத்து !!!

கருத்து !!!

ஆகவே, ஒவ்வொரு பெண்ணும் தனது ஆண் மகன்.. மசாலா டப்பா போல அனைத்தும் கலந்த கலவையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். (ஆஹா, சும்மாவே பசங்களுக்கு மசாலா'ன்னா ரொம்ப புடிக்கும்.., நான் சாப்பிடறத தான் சொன்னேன்..!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Romantic Gestures To Impress Women

Do you know about romantic gestures to impress women? Read Here.
Story first published: Wednesday, June 3, 2015, 15:18 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter