"ஐ லவ் யூ.."க்கு பதிலாக புதுமையாக காதல் சொல்ல சில ஐடியாக்கள் !!!

Posted By:
Subscribe to Boldsky

பிறந்த குழந்தையில் இருந்து இறக்க போகும் முதியவர் வரை அனைவரும், அனைத்திலும் புதுமையையும், ஈர்க்கும் வகையிலான விஷயங்களை தான் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் "டிமாண்டி காலனி", "இன்று நேற்று நாளை" கூட அதன் வித்தியாசமான ஈர்க்கும் வகையில் அமைந்த திரைக்கதையினால் தான் பெரும் வெற்றிப் பெற்றது.

இல்வாழ்க்கையை இன்பமாக்கும் சில விசித்திரமான விஷயங்கள் - அறிவியல் கூற்று!!!

தொட்டது தொன்னூறில் அல்ல நூறிலும் புதுமை தான் வெற்றிப் பெறுகிறது. பிறகு, ஏன் இன்னும் காதலை வெளிப்படுத்த மட்டும் அதே பழைய "ஐ லவ் யூ...". அப்டேட் ஆகும் போது மொபைலை மாற்றும் நீங்கள் இந்த விஷயத்திலும் அப்டேட் ஆக வேண்டியது அவசியம் அல்லவா.

நிச்சயதார்தத்தின் போது மணமக்களைக் கடுப்படிக்கும் சில விஷயங்கள்!!

இனிமேல், நீங்கள் காதல் சொல்ல போகும் போது, "ஐ லவ் யூ.."க்கு பதிலா இப்படி செய்தால் சீக்கிரம் நீங்கள் லவ் பண்ற பொண்ண கரக்ட் பண்ணிரலாம்....

ஆண்களிடம் பெண்கள் விரும்பும் தோரணைகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் கண்களுக்கு நீதான் அழகு

என் கண்களுக்கு நீதான் அழகு

"இந்த உலகத்துலேயே நீதான் அழகுன்னு நான் சொல்ல'ல... ஆனா, என் கண்ணுக்கு நீ மட்டும் தான் அழகா தெரியிற..." முடிந்தால் நண்பர்களை பின்னணியில் அலைபாயுதே ரஹ்மான் இசையை ஒலிபரப்பு செய்ய சொல்லுங்க.

என்னுலகம் உன் கண்ணில்

என்னுலகம் உன் கண்ணில்

என் கண்ணால தான் இந்த உலகத்த இவ்வளவு நாளா பாத்துட்டு இருந்தேன். ஆனா, உன்ன பாத்த அந்த முதல் நாள்'ல இருந்து என் உலகத்த உன்னோட கண்ணுல பாத்துட்டு இருக்கேன். அந்த உலகத்துல என் வாழ்நாள் மொத்தத்தையும் வாழ, ஒரு வாய்ப்பு கிடைக்குமா??" (இத ஃபீல் பண்ணி சொல்லணும் பாஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா சொல்லிட்டு அப்பறம் கம்பெனிய குத்தம் சொல்லக் கூடாது.

தல ஸ்டைல்

தல ஸ்டைல்

"என் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமுஷமும், ஏன் ஒவ்வொரு நொடியிலயும் கூட... நீ கலந்திருக்கணும்..." இப்படி சொல்றதுக்கு முன்னாடி, அந்த பொண்ணு தல ரசிகரான்னு தெரிஞ்சுக்குங்க... இல்லாங்காட்டி, வேற மாதிரி ஆயிடும்!!!

 ஃப்ளாஷ் மாப் (Flash Mob)

ஃப்ளாஷ் மாப் (Flash Mob)

தற்போதைய புதிய ட்ரெண்டு ஃப்ளாஷ் மாப் தான். கூட்டமான இடங்களில் திடீரென உள்ளே புகுந்து ஆட்டம் போடுவது. நீங்கள் விரும்பும் பெண்ணை அழைத்துக்கொண்டு, நீங்கள் முன்பே ஏற்பாடு செய்திருந்த இடத்தில வைத்து காதலை சொல்லலாம். ஐ லவ் யூ கூட தேவையில்லை. அவரே புரிந்துக் கொள்வர்.

 நெடும் பயணம்

நெடும் பயணம்

எங்கயாவது அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு கூட்டி சென்று, சர்ப்ரைஸ்ஸாக கூறலாம். அதற்கேற்ற இடத்திற்கு கூட்டி செல்ல வேண்டியது அவசியம்.

கண்ணீரும் கூட...

கண்ணீரும் கூட...

"கண்டிப்பா உன்ன எல்லா நாள் முழுக்க சிரிச்ச முகத்தோட வெச்சுக்குவேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, உன் கண்ணுல கண்ணீர் வராம பாத்துக்குவேன்..!!" (கொஞ்சம் மொக்கையா இருக்கோ.. )

முதலும், கடைசியும்

முதலும், கடைசியும்

"காலையில நான் பாக்குற முதல் முகமும், இராத்திரி நான் பாக்குற கடைசி முகமும் நீயா தான் இருக்கணும்." (ஒருவேளை அந்த பொண்ணு கீழ குனிஞ்சு பார்த்தா வெட்கப்படுதுன்னு நெனச்சு அங்கேயே நிக்க வேண்டாம்.. செருப்ப கூட தேடலாம்....)

விழுந்துட்டேன்....

விழுந்துட்டேன்....

ஒருவேளை நீங்கள் லவ் பண்ற பொண்ணு சினிமா ஹீரோயின் மாதிரி இருந்தா, "உன் அழகும், அந்த செக்ஸி லுக்கும்... மூச்ச இவ்வளோ இழுத்து விட முடியும்'ன்னு உன்ன பாத்ததுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுக்குட்டேன். இனி, என் மூச்சு உன் கையில..."

நினைவுகளுக்கு உயிர் கொடு...

நினைவுகளுக்கு உயிர் கொடு...

"நாம சந்திச்ச நாட்கள் வெறும் நினைவுகளா மட்டும் நிறுத்திக்க நான் விரும்பல... ஏன்னா, நான் உன்ன விரும்புறேன். எனக்கு மட்டுமில்ல, நம்ம நினைவுகளுக்கும் கூட உயிர் கொடுக்குறது உன் பதில்ல தான் இருக்கு.."

நமக்குள் நாம்...

நமக்குள் நாம்...

"எனக்குள்ள நீயும், உனக்குள்ள நானும்'ன்னு கூட நாம பிரிஞ்சு இருக்க கூடாது, எப்பவுமே நமக்குள்ள நாமா இருக்கனும்..."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Romantic Words To Replace I Love You In Love Proposal

In this modern era, everyone is expecting something different in all things. Then why your are using the same word "I Love You..", Just replace by these word to get a immediate positive response from your love.
Story first published: Wednesday, July 1, 2015, 13:36 [IST]
Subscribe Newsletter