காதலியுடன் ரொமாண்டிக்கான உல்லாச பயணம் எப்படி திட்டமிட வேண்டும்??

By: John
Subscribe to Boldsky

"கல்யாணத்துக்கு அப்பறம் தான குடும்பத்தோட, புள்ள குட்டியோட பிக்னிக் போவாங்க.. லவ் பண்ணும் போதேவா போவாங்க.." பாஸ் நீங்க மேட்-இன் 1960-யா??? நான் சிறுவனாக இருந்த வரையில் பிக்னிக் என்றால் அது குடும்பத்தோடு செல்லும் பயணமாக தான் இருந்தது.

ஆனால், இன்றைய அல்ட்ரா மாடர்ன் உலகம் அனைத்தையும் அட்வான்ஸ்டாக செய்கிறேன் என்று திருமணத்திற்கு முன்பே வாழ்க்கையை சுவைத்துவிட்டு திருமணத்திற்கு பிறகு விவாகரத்து வாங்கிக் கொள்கின்றனர். ஆன, இங்க இதில்ல மேட்டர்.

காதலிக்கும் போதே பிக்னிக் செல்வது சகஜம் தான். ஆனால், அதை ரொமாண்டிக்காக மாற்றுவது எப்படி. என்னவெல்லாம் நீங்கள் செய்தால், உங்கள் பிக்னிக், நீங்கள் இருவரும் மறக்க முடியாத மாதிரி அமையும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடத்தை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்

இடத்தை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்

இரைச்சலான அல்லது மிகவும் கூட்டமான இடங்களை தேர்வு செய்ய வேண்டாம். நிறைய பேர் சுற்றுலா இடங்கள் என்று ஆட்கள் நிரம்பி வழியும் இடங்களை தேர்வு செய்வார்கள். இந்த தவறை தவிர்த்துவிட்டு. "தனிமையிலே, இனிமை காண முடியுமா..." என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, மனது சூடேற்றிய நெய்யை போல உருகி வழியும் வண்ணம் உணரும் படியான இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

எதுவா இருந்தாலும், பிளான் பண்ணி பண்ணனும்

எதுவா இருந்தாலும், பிளான் பண்ணி பண்ணனும்

வடிவேலு அடிவாங்கி குமுறும் படி இல்லாமல், எதுவாக இருந்தாலும் பிளான் பண்ணி பண்ண வேண்டியது அவசியம். அதிலும் ஒன்றுக்கு இரண்டாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் ஒன்று நினைக்கும் போது இறைவன் அல்லது காதலி வேறொன்று நினைப்பார்கள். எனவே, திட்டங்களை ஒன்றாக இல்லாமல், த்ரிஷா இல்லாட்டி திவ்யா (திட்டங்கள் மட்டும், காதலி அல்ல) என்பது போல இரண்டாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆச்சரியங்கள் தடாலடியாக இருக்க வேண்டும்

ஆச்சரியங்கள் தடாலடியாக இருக்க வேண்டும்

சென்றோம் வந்தோம் என்றோம் இருக்க கூடாது. அங்கு உங்கள் காதலியால் மறக்க முடியாத அளவு ஓர் ஆச்சரியமான அனுபவத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அது பரிசாக இருக்கலாம், நிகழ்வாக இருக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், பசுமரத்தாணி போல நெஞ்சை விட்டு நீங்காத வண்ணம் இருக்க வேண்டும்.

எதையும் அழகாக யோசியுங்கள்

எதையும் அழகாக யோசியுங்கள்

என்னதான் மற்ற ஆண்கள் அழகாக தோற்றமளித்தால் கூட, அவர்களை தங்கள் காதலர்களை அவ்வாறு அழகாக பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் பெண்கள் (அட மெய்யாலுமே... லவ் பண்ற பொண்ணுங்க நெனைப்பாங்க பாஸ்!!!) எனவே, அதற்கு ஏற்றார் போல, நீங்கள் கொஞ்சமாவது உங்களை தயார் செய்துக்கொள்ள வேண்டியது அவசியம். பெண்கள் காய்கறி வாங்கவே அலங்காரம் செய்துக்கொண்டு தான் போவார்கள். எனவே, அவர்களை பற்றி நாம் கவலைக் கொள்ள தேவை இல்லை.

பயணிக்கும் முறை

பயணிக்கும் முறை

தயவு செய்து பஸ்ஸில் பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள், பைக், கார் அல்லது தொலைவாக இருந்தால் ரயில் பயணம். ஏனெனில் இவை தான் உங்களுக்கு அட்வென்ச்சர் போன்ற ஓர் உணர்வை தரும். எனவே, பஸ்ஸில் எப்பவுமே "நோ" தான்.

 டிரஸ் ரொம்ப முக்கியம் அமைச்சரே

டிரஸ் ரொம்ப முக்கியம் அமைச்சரே

பெண்கள் பொதுவாக தங்கள் காதலனை பார்க்க போகும் போதே ஒரே மாதிரி உடை அணிய வேண்டும் என ஆசைப்படுவார்கள். அதிலும் பிக்னிக் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போது, ஏதோ துணிக்கடையில் வேலை செய்பவர்களை போல, இருவரும் ஒரே மாதிரி காட்சியளிக்க விரும்புவர்கள். ஒரே மாதிரி இல்லையெனிலும், எலியும், பூனையுமாக உடை அணிய வேண்டாம்.

ராமர் vs கண்ணன்

ராமர் vs கண்ணன்

செல்லும் இடத்திலாவது கண்ணனாக இருக்காமல், ராமராக இருக்க வேண்டயது அவசியம். இல்லையேல், உல்லாச பயணம், புல்டோசர் ஏறிய பிளாஸ்டிக் பாட்டில் போல ஆகிவிடும். மற்றும் உங்கள் காதலிதான் உங்கள் இரு கண்களில் இருக்க வேண்டும். இமைகள் முடியை தாங்குவது போல. (உங்க பிக்னிக் ரொமாண்டிக்கா இருக்கணும்னு ஆசை இருந்த, இதெல்லாம் பண்ணி தான் ஆகணும் பாஸ்!!)

பர்ஸ் நல்லா வெயிட்டா இருக்கட்டும்.

பர்ஸ் நல்லா வெயிட்டா இருக்கட்டும்.

எல்லாம் பண்ணிட்டு பர்ஸ் காத்து போன சைக்கிள் ட்யூப் மாதிரி இல்லாம, நல்ல வெயிட்டா எடுத்துட்டு போங்க, வரும் போது அது கரும்பு மெஷின்ல சிக்கின சக்கை மாதிரி தான் வரும். இதுக்கெல்லாம் பயந்தா, அப்பறம் எப்படி காதல் டூ கல்யாணத்துக்கு போக முடியும்.!! சரி பிளான் பண்ண ஆரம்பிங்க, லோன் போட போறீங்களா, இல்ல ஃபிரெண்ட்ஸ் கிட்ட கடன் வாங்க போறீங்களா???

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Plan a Romantic Picnic

Are you eagerly waiting to make romantic picnic with your lady love? take a look and make a trip.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter