காதல் டூ திருமணம், காதலர்களுக்கு நோ சொல்லும் பெண்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சென்ற நூற்றாண்டு வரை தான் காதல் அமர காவியம். காதலில் சண்டைகளின்றி வாழ்ந்த காதலர்கள் ஏது. சண்டைகள் தான் காதலை வலிமையாக்கும் ஊன்றுகோல். ஏனோ அது இன்று ஊனமாகிக் கிடக்கிறது. "பிரேக்-அப்" என்ற வார்த்தையின் மத்தியில் காதல் சின்னாப்பின்னமாகி, சீண்ட ஆளில்லாமல் இருக்கிறது. ஃபேஷன் என்ற போர்வைக்குள் காதலை பந்தயம் வைத்து ஆடிக்கொண்டிருகின்றனர். ஓர் உறவின் தொடக்கம் தான் காதல் என சொல்பவர்கள் தான் இந்த உலகின் முதல் முட்டாள் கூட்டம். ஆம்! காதல் ஒரு உறவின் தொடக்கம் அல்ல, ஒரு சந்ததியினரின் தொடக்கம், காதல் ஒரு கருப்பொருள் அதற்கு உருவம் கொடுக்க வேண்டுமே தவிர, கர்வம் கொடுக்கக்கூடாது. இன்றைய இளைஞர்கள் காதலை தலையில் வைத்துக் கொண்டு ஆடுகின்றனர். ஆனால் கர்வம் வந்த பிறகு தரையில் போட்டு உடைத்துவிட்டு வேறொன்றை தேடி சென்றுவிடுகின்றனர்.

உங்கள் முன்னாள் காதலன்/காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கக்கூடாத 6 காரணங்கள்!

இவ்வாறான காதலினால் தான், பெற்றோரும் காதலை ஒத்துக்கொள்வதில்லை... நிறைய திருமணங்களும் நிலைபெறுவது இல்லை. முன்பு கூறிக்கொண்டிருந்தனர், ஆண்கள் ஏமாற்றுக்காரர்கள் பெண்களை ஏமாற்றுவது ஆண்களின் குலத்தொழில் என்று, சரித்திரத்தை கொஞ்சம் புரட்டி பாருங்கள், தேவதாஸ், அம்பிகாபதியில் இருந்து தருமபுரி இளவரசன் வரை காதலுக்காகவும், காதலினாலும் உயிரை விட்டவர்கள் ஆண்கள் மட்டும் தான். இன்றைய நிலையில் எந்த கேள்வியும் இன்றி காதலை ஒப்புக்கொள்ளும் பெண்கள், "திருமணம் செய்துக் கொள்ளலாமா?" என்ற கேள்வி எழும்போது தான் தனது தாய், தந்தை, ஜாதி மதம், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, இந்த ஊர் என்ன பேசும், நீ என்ன நிலையில் இருக்கிறாய் என ஆயிரம் கேள்விகளை அம்பெனத் தொடுத்து ஆண்களின் இதயத்தை கிழித்து எறிகின்றனர். காதலுக்கு ஓகே சொல்லும் பெண்கள் திருமணதிற்கு நோ சொல்வதன் காரணங்கள்....

காதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோர்கள்

பெற்றோர்கள்

காதல் டூ கல்யாணத்திற்கு முட்டுக்கட்டை போடும் முதல் காரணம், என் பெற்றோர் அவர்களது கெளரவம் பாதிக்கும் என்கின்றனர், எங்கள் குடும்பத்திற்கு என்று இந்த ஊரில் ஒரு பெயர் இருக்கின்றது என கூறுவார்கள். இதெல்லாம் ஏனோ காதலிக்கும் முன் பெண்கள் யோசிப்பதே இல்லை.

ப்ளாக்மெயில்

ப்ளாக்மெயில்

தாய், தந்தை குடும்பத்துடன் இறந்துவிடுவேன் என்று கூறுகிறார்கள். நமது சந்தோஷத்திற்காக அவர்களை ஏன் கொல்ல வேண்டும். இந்த சாபம் நம்மை சும்மா விடுமா, என கூறுவது. ஓ! அப்போ ஆண்கள் இறந்தால் சரி அப்படி தானே!

அக்கா, தங்கை

அக்கா, தங்கை

எனக்கு பிறகு எனது அக்காவும், தங்கையும் இருக்கின்றனர். நாம் திருமணம் செய்துக் கொள்வதன் மூலம், அவர்களது திருமண வாழ்க்கை பாதித்துவிடுமோ என பயமாக இருக்கிறது என கூறுவது. இதை நீங்கள் காதலிக்கும் முன்பே யோசித்திருக்க வேண்டும். ஏன் அப்போது அவர்கள் பிறக்கவில்லையோ?

ஜாதி, மதம்

ஜாதி, மதம்

பெரும்பாலுமான பெண்களும், பெண்களுது வீட்டாரும் காதல் டூ கல்யாணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமாய் இருப்பது ஜாதி, மதம். வேறு ஜாதி, வேறு மதம் என தெரிந்திருந்தும் பின் விரும்பியது எதற்கு, இந்த காரணங்கள் இருக்கின்றன, பிரிந்துவிடலாம் என்பதற்கா?

வேலை

வேலை

வேலையில்லா பட்டதாரி என சொல்லிக் கொண்டு நடனம் ஆட நன்றாகத் தான் இருக்கும். ஆனால், பெண்கள் இதை காரணம் காட்டி வருடங்கள் புரண்ட காதலை விரட்டும் போது தான் அதன் வலி புரியும். ஆம்! இந்த காரணம் சொல்லும் பெண்களை குற்றம் சொல்ல இயலாது. இந்த வேகமான சமூகத்தில் குழந்தையை எல்.கே.ஜி. படிக்க வைக்கவே லட்ச ரூபாய் தேவைப்படுகிறதே.

 செட்டில்!

செட்டில்!

காதலிக்கும் போது செட்டானால் மட்டும் போதும் என்று எண்ணும் பெண்கள். கல்யாணம் என்று வரும் போது செட்டில் ஆனால் தான் என்பது தவறு. ஏன், காதலனுடன் இன்பமாக மட்டும் தான் இருக்க பிடிக்குமா என்ன? அவனது துன்பத்தில் பங்கெடுத்து அவனுக்கு உறுதுணையாய் இருந்து வெற்றிப்பெற வைக்க முடியாதா? இது ஒட்டுமொத்த பெண்களையும் குறைக்கூற சொல்லவில்லை. இங்கு ஆண்களும், பெண்களும் இருபாலரும் காதலை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் இருகின்றனர். ஆனால், பெண்கள் இல்வாழ்க்கையின் கரு. அவர்கள் இதை புரிந்திருக்க வேண்டும். ஆண்களைக் காட்டிலும் மேன்மையுடையவர்கள் பெண்கள், அதை எடுத்துக்கூற தான் இந்த கட்டுரை.

ஜாதகம்

ஜாதகம்

காதல் டூ கல்யாணத்திற்கு ஒட்டுமொத்த பெண் வீட்டாரும் கூறும் ஒரு மிக பெரிய காரணம் ஜாதகம் சரிவரவில்லை என்பது தான். இதற்காக பத்து பொருத்தம் பார்த்தா மனம் ஒருவர் மீது காதல்கொள்ளும். காதலில் ஜாதகம் தடையை வருவது இல்லை. காதலையே தடை செய்ய தான் ஜாதகம் உட்புகுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Reasons Thats Why Girls Rejects Marriage Proposals From Their Boyfriends

In love there are 7 Reasons Thats Why Girls Rejects Marriage Proposals From Their Boyfriends.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter