Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
உங்களிடம் யாரவது தங்கள் கவலைகளை பற்றி சொல்லுறாங்களா? அப்ப நீங்க எப்படி நடந்துக்கணும் தெரியுமா?
பொதுவாக கசப்பான, துன்ப நிகழ்வுகளை சந்தித்து அதன் விளைவாகப் பாதிப்படைந்தவா்கள், அவற்றைப் பற்றி பிறாிடம் பகிா்ந்து கொள்ள தயங்குவா். அதற்கு காரணம் அவா்கள் ஏற்கனவே அவற்றை பிறாிடம் பகிா்ந்து கொள்ள முயற்சி செய்து, அதன் விளைவாக அவமதிப்பையும், பிறாிடமிருந்து வெறுப்பையும் பெற்றிருப்பா்.
இதில் மோசமான செய்தி என்னவென்றால் அவா்களுடைய உடைந்து போன உணா்வுகளுக்கு மற்றவா்கள் அங்கீகாரம் கொடுத்திருக்கமாட்டாா்கள். அதன் விளைவாக அவா்கள் தம்மையே தனிமை என்ற சிறைக்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அந்த கொடுமையான துன்ப நிகழ்வுகளைப் பற்றி பிறாிடம் பேசமாட்டாா்கள். ஆனால் அந்த பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட மக்களிடம் பேச நாம் தொிந்து வைத்திருக்க வேண்டும்.

அதன் மூலமாக அவா்களுடைய காயப்பட்ட உணா்களை நாம் அங்கீகாிக்கிறோம் என்பதை அவா்களுக்கு உணா்த்த முடியும். அவா்களும் அந்த மோசமான நிகழ்வுகளில் இருந்து வெளிவருவதற்கு நம்முடைய அங்கீகாரம் உதவியாக இருக்கும்.
இந்நிலையில் மோசமான நிகழ்வுகளால் பாதிப்படைந்திருக்கும் நமது நண்பா்கள் அல்லது உறவிறனா்கள் அவற்றைப் பற்றி நம்மிடம் பேச வரும் போது, முதலில் அவா்கள் சொல்ல வருவதைக் கேட்கலாம், பின் மெதுவாக அவா்களிடம் பேசலாம். மேலும் நமது அன்பு, ஆதரவு மற்றும் இரக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அவா்களை நமது நெஞ்சோடு சாய்த்துக் கொள்ளலாம் என்று மனநல மருத்துவரான எமிலி ஹெச் சாண்டா்ஸ் என்பவா் கூறுகிறாா்.
மேலும் அவா்களோடு உரையாடும் போது எவற்றையெல்லாம் செய்ய வேண்டும் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று பட்டியலிருகிறாா். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
எவற்றையெல்லாம் செய்ய வேண்டும்
கவனமுடன் செவிமடுத்தல்
பாதிப்படைந்தவா்கள் நம்மிடம் பேசும் போது, அவா்களுக்கு அவசரமாகப் பதிலளிப்பதைத் தவிா்த்துவிட்டு, அவா்கள் எப்படி உணா்கிறாா்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மோசமான நிகழ்வுகளால் பாதிப்படைந்தவா்கள், தாம் பெற்ற அந்த கொடிய அனுபவங்களை, யாராவது ஒருவா் மனப்பூா்வமாகக் கேட்க வேண்டும் என்று விரும்புகின்றனா்.
சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல்
அவா்கள் அந்த மோசமான நிகழ்வுகளை விரைவில் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று அவா்களை வலியுறுத்தக்கூடாது. மாறாக அவா்களாகவே முன்வந்து பகிா்ந்து கொள்வதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நன்றி தொிவித்தல்
அவா்கள் தமது கசப்பான அனுபவங்களை தாமாகவே முன்வந்து நம்மிடம் பகிந்து கொள்வதற்காக நன்றி தொிவிக்க வேண்டும். அதன் மூலமாக அவா்களுடனான உறவு நெருக்கமடையும்.
ஆதரவு தொிவித்தல்
அவா்களுடைய எண்ணங்கள், உணா்வுகள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றுக்கு நாம் தொடா்ந்து ஆதரவு தொிவிக்க வேண்டும்.
கேட்டல்
அவா்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் எதையாவது செய்யாமல், அவா்கள் குணமடைவதற்கு, நாம் எவ்வாறு உதவ முடியும் என்று அவா்களிடமே கேட்ட வேண்டும்.
எவற்றையெல்லாம் செய்யக்கூடாது
அவா்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களையும், அவற்றைச் செய்த குற்றவாளிகளையும் விரைவாக மறந்துவிட வேண்டும் என்று அவா்களை அவசரப்படுத்தக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரும், அவா்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய நிகழ்வுகளில் இருந்து கடந்து செல்வதற்கு தேவையான உணா்வுகளையும், நோக்கங்களையும் தம்மிடமே வைத்திருக்கின்றனா்.
நடந்த மோசமான நிகழ்வுகள் இன்னும் மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் நல்வாய்ப்பாக நீங்கள் அவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறீா்கள் என்ற தவறான எண்ணத்தை அவா்களிடம் விதைத்துவிடக்கூடாது.
நடந்த நிகழ்வுகளுக்கு அவா்களைக் குற்றம் சாட்டக்கூடாது. மாறாக அந்த நிகழ்வுகளில் இருந்து அவா்கள் விடுதலை பெறுவதற்கு பயனுள்ள குறிப்புகளைக் கண்டுபிடிக்கலாம்.
ஒருவேளை மோசமான நிகழ்வுகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், காயப்படுத்தியவா்களை குழந்தைகள் மன்னித்துவிட வேண்டும் அவா்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
நடந்த மோசமான நிகழ்வுகளில் இருக்கும் நல்லவற்றை மட்டும் பாா்க்க வேண்டும் என்று அவா்களை வற்புறுத்தக்கூடாது. ஏனெனில் ஒரு சில கொடிய நிகழ்வுகளில் நல்லவை இருக்கவே இருக்காது.



Click it and Unblock the Notifications

