For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி பிரபோஸ் பண்ணினா பெண்களால நோ சொல்லவே முடியாதாம்... ட்ரை பண்ணிபாருங்க...

|

"காதல்ங்கறது பக்கம் பக்கமா பேசற சமாச்சாரம் இல்ல, பக்குவமா பேசறது" என்ற டயலாக் ஞாபகம் வருதா? நாகேஷ் சார் ஒரு படத்தில் அழகாக சொல்லி இருப்பார். காதலிக்கிறத விட முக்கியம் அத அழகாக வெளிப்படுத்துவது. புறாக்களில் தொடங்கி இன்னைக்கு பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்று காதலை பரிமாறும் நிலை மாறிக் கொண்டே இருக்கிறது.

Proposal Ideas which will Definitely Make her say Yes!

நாமும் அதற்குத் தகுந்தாற் போல் மாறித்தான் ஆக வேண்டும். சில பேர் ரெம்ப நாளா ட்ரை பண்ணி பொண்ணு ஓகே சொல்ற டைம்ல காதலை சொல்லத் தெரியாம சொதப்பிடுவாங்க. ஆமாங்க காதலில் சொதப்புவது எப்படி என்கின்ற படம் நம் எல்லோர் வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரபோசல் ஐடியாக்கள்

பிரபோசல் ஐடியாக்கள்

சில பேருக்கு ரிங் போட்டு பூ கொடுத்து 'ஐ லவ் யூ' சொன்னா போதும், சில பேருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி பறந்து குதித்து புரோபோஸ் பண்ணாலும் புரியாது. காதலுக்கு ஐ லவ் யூ முக்கியம் தாங்க. ஆனா அத நீங்க எப்படி சொல்லிறீங்கன்னு வெச்சு தான் உங்க அழகான தருணங்கள் அமையப் போகிறது. இப்படி காதலை சொல்ல படாத படும் உங்களுக்காக சில சூப்பர் ஐடியாக்களை இங்கே தரப் போகிறோம். சரி வாங்க பார்க்கலாம்.

MOST READ: இந்த மூன்று லக்கி ஜோடிகளுக்கு தான் 2019- ல் திருமண யோகம் அமோகமா இருக்குமாம்...

உங்கள் காதல் திரைப்படம்

உங்கள் காதல் திரைப்படம்

நீங்கள் காதல் வயப்பட்ட தருணங்களைக்கூட ஒரு படமாக எடுத்து உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அப்படியே பிண்ணனியில் உங்களுக்கு பிடித்த லவ் சாங்க்ஸ் ஓட விட்டு ஒரு பெரிய திரையில் போட்டு உங்கள் காதலியிடம் காட்டலாம். கண்டிப்பாக இந்த வீடியோ உங்கள் லவ்வரை சந்தோஷப்படுத்தும். அப்புறம் என்னங்க காதலுக்கு பச்சை கொடி தான். நீங்களும் அப்படியே சேர்ந்து டான்ஸ் ஆடுங்க.

பெற்றோரின் ஆசிர்வாதம்

பெற்றோரின் ஆசிர்வாதம்

பொதுவா பொண்ணுங்களுக்கு உங்கள பிடிச்சு இருந்தாலும் வீட்ல என்ன சொல்வாங்களோ என்ற பயம் இருக்கும். இதனால் கூட காதல மறுப்பாங்க.எனவே உங்கள் காதலியோட பெற்றோரின் சம்மதத்த பெற்று கூட உங்க காதல வெளிப்படுத்தலாம். இது அன்பான பெற்றோர்களையும் அவங்களுக்காக நீங்க தர முடியும் என்பதை காட்டும். உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு உங்கள் உறவு அடுத்த கட்டத்திற்கு போகும். இரு பெற்றோர்களின் ஆசிர்வாதத்தோடு உங்கள் காதல் ஈடேறிய சந்தோஷம் கிட்டும்.

இது காதல் புதிர் விளையாட்டு

இது காதல் புதிர் விளையாட்டு

உங்கள் காதலை சொல்லும் போது ஒரு சஸ்பென்ஸை நீங்கள் கொடுக்கலாம். அவர்களுடன் பயணித்த இடங்கள், பிடித்த பொழுதுகள் இவற்றை வைத்து ஒரு புதிர் விளையாட்டை உருவாக்கலாம். சின்ன சின்ன அழகான குறிப்புகளை கொடுத்து ஒவ்வொன்றாக அந்த புதிர்களை அவிழ்த்து அவர்களை குஷிபடுத்தலாம். நிறைய சஸ்பென்ஸ் உடன் அழகான மலர்களையும் வைத்து இறுதியில் உங்கள் காதல் முடிச்சியை அவிழ்த்து அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாம். இந்த வித்தியாசமான விளையாட்டு உங்கள் காதலுக்கு துணை போகும்.

சர்ப்ரைஸ் புரோபோஸல்

சர்ப்ரைஸ் புரோபோஸல்

உங்கள் காதலிக்கு பிடித்தமான நீல நிறத்தில் ஆடை, அணிகலன்கள் மற்றும் பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு அவருடைய ஆபிஸ்க்கு சென்று ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கலாம். எதிர்பார்க்காத சமயத்தில் உங்களை பார்க்கும் போது அவருக்கு கண்டிப்பாக சந்தோஷம் கூடும்.

MOST READ: கோதுமையைவிட அரிசிதான் ஆரோக்கியமானது... சொன்னா நம்பமாட்டீங்க... நீங்களே பாருங்க

அழகான காதல் மாலைப்பொழுது

அழகான காதல் மாலைப்பொழுது

இந்த கேண்டில் லைட் டின்னர்ல்லாம் இப்போ பழசா போச்சுங்க. கூட்டத்தில புகுந்து காதலை சொல்வது தான் இப்போ புதுசு.அழகான மாலைப் பொழுதில் நண்பர்களுடான பார்ட்டி ஏற்பாடு செய்து பலூன்களை எல்லாம் பறக்க விட்டு, மலர்களால், சாக்லெட்களால் அந்த இடத்தையே அலங்கரித்து, இசை கொண்டாட்டம் என்று உற்சாகமாக எல்லார் முன்னிலையிலும் உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். கண்டிப்பாக இதை பார்க்கும் போது அவருடைய காதல் கண்ணீராகத் தான் வெளிப்படும்.

என்னங்க அப்போ காதல சொல்ல நீங்க ரெடியாகிட்டீங்களா. அப்போ தடுமாறாமல் தைரியமா சொல்லுங்க. அன்பை சொல்லுவதற்கு எதற்கு தயக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Proposal Ideas which will Definitely Make her say Yes!

Read on to know some unique proposal ideas which will make her feel so special that she will say yes.
Story first published: Thursday, January 10, 2019, 11:32 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more