Latest Updates
-
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க
இந்த மூன்று லக்கி ஜோடிகளுக்கு தான் 2019- ல் திருமண யோகம் அமோகமா இருக்குமாம்...
2019 இல் எந்த ராசிக்காரருக்கு திருமண யோகம் உண்டு. அதில் குறிப்பாக மூன்று ராசிக்கு திருமண யோகம் அதிகம் என்பது பற்றிய கணிப்புகளை இங்கே பார்க்கலாம்.
2019- ஆம் ஆண்டில் அவர்களது திருமண மணியின் ஓசையைக் கேட்பதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் மூன்று இராசிகளுக்கு தென்படுகின்றன. கீழுள்ள மூன்று அதிர்ஷ்டமான இராசிகள் 2019-ம் ஆண்டில் தங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய படியைக் கடப்பார்கள். அதில் மிக முக்கியமான ராசிக்காரர்களாக இந்த அதிர்ஷ்டத்துக்கு உரிய விருச்சிகம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களைக் குறிப்பிடலாம்.

இந்த மூன்று அதிர்ஷ்ட ராசிக்காரர்களுக்கு தான் இந்த 2019 ஆம் வருடத்துக்கான திருமண யோகம் மிக அதிகமாக இருக்கிறது. அவர்கள் தான் சூப்பரான படுஜோரான வாழ்க்கை அமையப் பெறுவார்கள் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கூறுகிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தங்களின் காதலுக்கு 'ஆமாம்' சொல்வதற்கான சரியான நேரம் இது. இந்த ஆண்டு உங்கள் உறவை நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள். உங்கள் விருப்பப்படி யாரையாவது நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். உங்கள் வாழ்க்கையின் வேறு கட்டத்திற்குள் நுழைய உங்கள் கதவுகளை முழு சக்தியுடன் காதல் உடைத்துவிட்டது போலத் தோன்றுகிறது. நீங்கள் யாரையேனும் காதலிக்கிறீர்கள் அல்லது உங்களை காதலிப்பவர்களுக்கும் நீங்கள் ஓகே சொல்லும் மிக சரியான தருணம் இதுதான். உங்களுடைய வீட்டிலும் உங்களுடைய காதலுக்கு போராட்டமே இல்லாமல் பச்சை காட்டுவார்கள். அதனால் தைரியமாகக் களத்தில் இறங்குங்கள்.

தனுசு
தனுசு வாசிகளுக்கு 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்கு மிக சாதகமான ஆண்டாக இருக்கும். இவர்களின் நீண்ட கால திருமணத் தடை உடைந்து இந்த ஆண்டு திருமணம் கை கூடி வரும். உங்கள் தொழில் மற்றும் சமூக வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு உங்கள் திருமணம் மட்டுமே மிகவும் பிடித்த தலைப்பாக இருக்கும். திருமண வரன்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகளுக்காக நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் புாகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வங்கள். நீங்கள் இதுவரையிலும் செய்த பரிகாரங்களுக்கான மொத்த பலன்களையும் இந்த வருடத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக அனுபவிப்பீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களும் 2019- ல் அதிர்ஷ்டசாலி இராசிகளில் ஒருவராக உள்ளார்கள், அவர்களும் மகிழ்ச்சியான மணவாழ்விற்கு வழிவகுப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை இந்த ஆண்டு நித்திய மகிழ்ச்சியை நோக்கி நகர்த்துவார்கள். அவர்கள் வழியில் உள்ள எல்லா தடங்கல்களையும் நீக்கிய பிறகு தங்கள் மிகவும் நேசித்தவரை மணந்து கொள்ள முடியும். மீன ராசிக்காரர்கள் எதையுமே மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் நிதானத்துடன் அணுகக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் திருமணங்கள் கைகூடி வருவதிலும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்திருக்கும். அந்த கெட்ட சக்திகள் விலகி, உங்கள் வாழ்க்கையில் தாம்பத்திய வாழ்க்கையில் நிலைபெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டிய நேரம் உங்களுக்கு கூடி வந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications
