For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  'இதுக்கு நிர்வாணமா திரியலாமே... விப***ரி...' இப்படி அவன் திட்ட நான் செய்த குற்றம் இதுதான் - My Story

  By Staff
  |

  சென்னையின் வெயில் எப்படி இருக்கும் என்று இந்தியாவில் யாரிடமும் கேட்க தேவையில்லை. நான் ஒரு நவநாகரீக பெண். நான் மாடர்ன் உடை உடுத்தும் வழக்கம் கொண்டிருக்கிறேனே தவிர, பார்ப்பவர் கன் கூசும் படி என்றுமே நான் உடை உடுத்தியது இல்லை. மேலும், உடை அணிவது அவரவர் சுதந்திரம் மற்றும் உரிமை.

  என் வாழ்வில் ஒரு நாளில் அவ்வளவு ஆத்திரம், கோபம், மன சங்கடங்களை நான் அதுவரை அனுபவித்ததே இல்லை. ஒரு வயதான மூதாட்டி, மற்றும் முதியர்வர்களின் திட்டுகளில் ஆரம்பித்து, ஆட்டோ ஓட்டும் நபரின் வசைப் பேச்சு வரை கேட்டு ஒரு மார்கெட் தெருவில் அத்தனை அவமானத்தை நான் கடந்து வர வேண்டும் என்று எனது விதியில் எழுதி இருந்தது போல.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஓராண்டுக்கு முன்..

  ஓராண்டுக்கு முன்..

  இதே ஏப்ரல் மாதம் தான்... அந்த சம்பவம் நடந்து ஓராண்டு காலம் இருக்கும். அந்த நாள் மட்டும் என் நினைவில் இல்லை. அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. காரணம், நான் தலைப்பில் குறிப்பிட்டு இருப்பது தான். "இதுக்கு நீ நிர்வாணமா திரியலாமே...", "தே***" இப்படியான வார்த்தைகள் கூறி ஒரு ஆட்டோ காரர் எங்களை (என்னையும் எனது தோழியையும்) திட்டி சென்றார்.

  சரி! இதற்கான கதை மற்றும் காரணம் என்ன...?

  வெகேஷன்!

  வெகேஷன்!

  அது வெகேஷன் டைம். நான் வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன். ஆனது உறவுக் கார பெண் ஒருத்தி வெகேஷனுக்காக சென்னை வந்திருந்தாள். தங்கை என்பதை காட்டிலும், அவளை எனது தோழியாகவே காண்கிறேன். எனக்கும் அவளுக்கும் ஐந்து வயது தான் வித்தியாசம். அவள் பள்ளி தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தாள். சரி! ஊரில் இருந்து ஓரிரு ஆண்டுகள் கழித்து சென்னை வந்திருக்கிறாளே என்று அவளுடன் ஊர் சுற்ற கிளம்பினோம்.

  கொளுத்தும் வெயில்!

  கொளுத்தும் வெயில்!

  உங்களுக்கே தெரியும், சென்ற ஆண்டு சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூரிய பகவான் கோலியை மிஞ்சும் அளவிற்கு சதமடித்து வெளுத்து வாங்கினார். ஆகையால், அன்று முட்டி வரையிலுமான ஒரு ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து நானும் அவளும் வெளியே கிளம்பினோம். காலையில் கிளம்பிய எங்களை ஏறத்தாழ ஒரு ஆயிரம் பேருக்கு மேல் பார்த்திருக்கலாம். ஆனால், யாரும் எதுவுமே கூறவில்லை.

  திரைப்படம்!

  திரைப்படம்!

  சென்னையின் ஒரு பிரபல ஷாப்பிங் மால் சென்று, திரைப்படம் பார்த்தோம். பத்து மணிக்கு ஆரம்பித்தது படம். படம் முடிந்து நாங்கள் வெளியே வரும் போது சூரியன் உக்கிரத்தில் இருந்தார். நிச்சயம் அடுத்த இடத்திற்கு எங்களால் நடைப்பயணம் மேற்கொள்ள முடியாது என்பதை அறிந்தோம். கால் டாக்ஸ் புக் செய்ய முடியவில்லை. நாங்கள் அழைக்கும் இடத்திற்கு ஆட்டோ காரர்கள் டபிள், ட்ரிபிள் மடங்கு வாடகை கேட்டனர்.

  நடராஜா சர்வீஸ்!

  நடராஜா சர்வீஸ்!

  இது சரிப்பட்டு வராது என்று பேசிக்கொண்டே ஆளுக்கொரு இளநீர் குடித்து விட்டு, குடையை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆனால், சூரியன் எங்களை விட்டுவிடுவதாய் இல்லை. கொஞ்ச தூரம் நடந்த உடனே வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. ஒரு விளம்பரத்தில் காண்பிப்பது போல, சூரியன் எங்கள் உடலுக்குள் இருந்த நீர் சத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி கொண்டார்.

  பார்க்!

  பார்க்!

  நல்ல வேலையாக... கடவுள் இருக்கான் என்பது போல அருகே ஒரு பார்க் தன்பட்டது. அடர்ந்த மரங்களுடன் குளுகுளு காற்று வாங்க அந்த பார்க் உள்ளே நுழைந்தோம். கொஞ்ச நேரம் பார்க் பெஞ்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் வயிறு பசிக்கிறது என்று அலார்ம் அடிக்க துவங்கியது. அருகே நிச்சயம் ஏதேனும் ஒரு ஹோட்டல் இருக்கும் சாப்பிட்ட பிறகு, அடுத்த பிளான் போடலாம் என்று பார்க்கை விட்டு வெளியே வந்தோம்.

  வயதான தம்பதி...

  வயதான தம்பதி...

  நாங்கள் பார்க்கை விட்டு வெளியே அந்த ஆட்டோவுக்காக காத்திருந்த போது, ஒரு முதிய தம்பதி எங்கள் அருகே வந்து... நீங்க எல்லாம் பொம்பள புள்ளையா... இப்படியா ட்ரஸ் பண்ணுவீங்க என்று திட்ட ஆரம்பித்தார். எங்களுக்கு அவர் எங்களை ஏன் திட்டுகிறார் என்றே தெரியவில்லை. பாட்டிமா நாங்க என்ன பண்ணோம், எங்கள ஏன் திட்டுறீங்க என்று என் தோழி கேட்டாள்.

  கடுங்கோபம்!

  கடுங்கோபம்!

  உடனே அவருக்கு எங்கிருந்த அவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை. இதெல்லாம் ஒரு டிரஸ்ஸா? என்று கூறி ஏதேதோ கூறி திட்டினார். அவர் திட்டிய வார்த்தையில் பாதிக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. அருகே இருந்த ஆட்டோக் காரர்கள் மற்றும் சில கடைக்காரர்கள் எங்களை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே சென்றனர்.

  நன்றி!

  நன்றி!

  நீங்கள் எங்கள கொடுத்த அறிவுரைக்கு நன்றி... நாங்க கிளம்புறோம் என்று கூறி விட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தோம். சரி அந்த காலத்து ஆட்கள் அவர்களுக்கு இப்படி தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். அருகே ஒரு மார்கெட் சாலை வந்தது. அங்கே ஏதேனும் ஹோட்டல் இருக்குமா என்று தேடிக் கொண்டே சாலையோர கடை ஒன்றில் ஐஸ் க்ரீம் வாங்கி சபித்துக் கொண்டே நடந்தோம்.

  மீண்டும் சோதனை..

  மீண்டும் சோதனை..

  திடீரென ஒரு ஆட்டோ எங்களை கடந்தது.. அதில் இருந்து டிரைவர் நீ எல்லாம் இதுக்கு பதிலா நிர்வாணமா சுத்த வேண்டியது தானே.." என்று திட்டுவிட்டு வேகமாக கடந்தார். அவரை பிடிக்கவோ, அவரது வாகன எண்ணை கவனிக்கவோ முடியவில்லை. இது என்னடா நமக்குன்னே இப்படி வராங்க என்று தலையை பியித்து கொண்டு நானும், அவளும் அதே இடத்தில் பேசிக் கொண்டு நின்றிருந்தோம்.

  விடல...

  விடல...

  மீண்டும் அதே வழியில் வந்த அதே ஆட்டோக்காரர் எங்களை மிக "தே***" என்று கூறி திட்டுவிட்டு மீண்டும் மின்னல் வேகத்தில் பறந்தார். இம்முறை அவரை பிடித்து வெளியே இழுக்க முயற்சித்தேன். ஆனால், முடியவில்லை. வாகன எண்ணையும் கவனிக்க முடியவில்லை. ஒருவேளை அந்த முதிய தம்பதி எங்களை திட்டிய இடத்தில் இவர் இருந்தாரோ என்ற சந்தேகம்.

  பாகுபாடு!

  பாகுபாடு!

  சரி அப்படி என்ன நாங்கள் தவறு செய்துவிட்டோம். ஆண்கள் வெயில் காலத்தில் டிரவுசர் அல்லது லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டே வெளியே போவதே இல்லையா? பெண்கள் ஷார்ட் டிரஸ் அணிந்தால் தான் குற்றமா? நிர்வாணமாக சேல், தே*** என்று திட்டும் அளவிற்கு நாங்கள் தரக்குறைவாக நடந்துக் கொள்ளவில்லையே.

  கற்பழிப்புகள்!

  கற்பழிப்புகள்!

  கடந்த ஒரு வாரமாக ஜஸ்டீஸ் ஃபார் என்று ஆசிபா என்று ஒரு சிறுமியின் கற்பழிப்பு கொலைக்காக நீதி கேட்டு கத்திக் கொண்டிருக்கிறோமே.. அந்த சிறுமி அப்படி என்ன உடை உடுத்தி இருந்தால் என்று காம வெறி பிடித்த அந்த நாய்கள் அந்த குழந்தையை கற்பழித்து கொன்றன. தே*** போல ஆண்களை திட்ட ஒரு வார்த்தை வேண்டும் என்று நெஞ்சம் குமுறுகிறது.

  இன்னும் எத்தனை நாளுக்கு...

  இன்னும் எத்தனை நாளுக்கு...

  பெண்களின் உடை தான் கலாச்சார சீராழிவுக்கு காரணம் என்று எத்தனை நாளுக்கு பொய்களை பரப்பி வருவீர்கள். ஆண்களின் அவசியமற்ற வீராப்பும், அனாவசிய விறைப்பும் தான் கலாச்சார சீரழிவுக்கு காரணம் என்று நான் கூறுகிறேன்.

  நானாவது முட்டி வரை உடை அணிந்திருந்தேன். என் தோழி அதற்கும் கீழே 3/4த் உடை அணிந்திருந்தாள். இதில் எங்கிருந்து அவர்களுக்கு இச்சை எட்டிப் பார்த்து என்று நான் வியக்கிறேன்.

  படத்துல வந்தா விசில்..

  படத்துல வந்தா விசில்..

  இதே படத்தில் ஒரு நடிகை கவர்ச்சியாக உடை அணிந்து நடனம் ஆடினால், அதை வெறிக்க, வெறிக்க பார்ப்பார்கள். அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். என்னை திட்டி சென்ற அந்த ஆட்டோக் காரரின் மொபைல் வால்பேப்பர் நிச்சயம் ஒரு நடிகையின் கவர்ச்சி படமாக தான் இருக்கும்.

  அவரவருக்குள் ஆயிரம் குப்பைகளை வைத்துக் கொண்டு, எங்களை ஏன் திட்டுகிறீர்கள்?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Shameless Peoples, Asks Me To Roam Naked and Scolds Me Prostitute.

  Shameless Peoples, Asks Me To Roam Naked and Scolds Me Prostitute.
  Story first published: Monday, April 16, 2018, 15:40 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more