ஓவியா பிழைப்பாரா? பிக் பாஸின் அடுத்த நகர்வு

Posted By:
Subscribe to Boldsky

'பிக் பாஸ்' உள்ளே இருப்பவர்களின் மனநிலையை மட்டுமல்ல வெளியே இருக்கும் நம்முடைய மனநிலையையும் வெகுவாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவரை ஏற்றுவதும், மறுநாளே அவரை கெட்டவர் போன்ற சித்திரத்தை காண்பிப்பதும் பிக் பாஸிற்கு கை வந்த கலையாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாக காட்டப்பட்ட வரும் ஓவியா, காய்திரியின் மாற்றங்கள், ரைசா-ஜூலி கூட்டணி, என சில விஷயங்கள் அப்பட்டமாகவே தெரிகிறது. இதில் வெளியே இருப்பவர்களை மட்டுமல்ல உள்ளே இருப்பவர்களின் கண்களையும் உறுத்தும் ஓர் விஷயம் 'ஆரவ்-ஓவியா' காதல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓவியா :

ஓவியா :

ஓர் குழந்தையை போல நம்மிடம் காண்பிக்கப்பட்டார். உண்மையிலேயே அவர் அந்த குணத்தின் சொந்தக்காராரா அல்லது பிக் பாஸின் ஸ்க்ரிப்ட்டா என்று ஆராய வேண்டாம். மனதில் தோன்றியதைச் செய்திடும் ஓர் பறவை என்று கூட சொல்லலாம். எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கும் உதடுகள். டேக் இட் ஈஸி என கடந்து போகும் குணம், வலியச் சென்று பேசுவது, பின்னால் சென்று புலம்பாமல், புகார் பட்டியல் வாசிக்காமல் எதையும் மனதிற்குள் எடுத்துச் செல்லாமல் கடந்து வருவது என, தனக்கான பெரும் கூட்டத்தையே சம்பாதித்துக் கொண்டார்.

அன்பு :

அன்பு :

எத்தனை பலசாலியாய் இருந்தாலும் அவரை வீழ்த்த அன்பால் முடியும் என்பதற்கு ஓவியா ஓர் எடுத்துக்காட்டு. பிக் பாஸிடம் பேசுகையில் யாராவது அன்பா பேசினா என்னால தாங்க முடியாது. ஐ எம் நாட் ஸ்ட்ராங் என்று உடைந்து அழுதிடுவார். அன்புக்காக ஏங்கும் ஓவியா அதனை பிறரிடம் காண்பிக்காமல் ஜாலி டைப், டேக் இட் ஈஸி என்று மேற்பூச்சு பூசிக் கொண்டிருக்கிறார்.

ஆரவ்-ஓவியா :

ஆரவ்-ஓவியா :

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சில தினங்களிலேயே விளையாட்டாக ஆரம்பித்த ஓர் விஷயம்..... நல்ல நண்பனாகவும், காதலனாகவும் வளர்ந்துவிட்டது. ஆரம்பத்தில்,ஆரவிற்கு விருப்பமில்லை என்று தெரிந்ததுமே எதுவும் மனதிற்குள் வைத்துக் கொள்ள வேண்டாம் இனி நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கைகுலுக்கிக் கொண்டார்.

ஓ பெண்ணே! :

ஓ பெண்ணே! :

ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் குடும்பத்திலிருந்து தனிமைபடுத்தப்பட்ட போது கூட அழுதிடாமல் சமாளித்த ஓவியா ‘ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன?' என்ற பாடல் வரியைக் கேட்டதுமே அடக்க முடியாமல் கண்ணீர் வருகிறது. தனியாக இருக்கும் போது அல்லது தனிமையை உணரும் போது, யாராவது வந்து நமக்கு ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கும் போது மனதிலிருக்கும் காதல் கிடைக்காமல் தவிக்கும் போது இந்தப் பாடல் கேட்டால் யாருக்கும் அழுகை வந்திடும்.

மாற்றம் :

மாற்றம் :

ஏதோ ஒரு விஷயம் ஓவியா மீது நல்ல அபிப்ராயத்தை ஆரவிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ஓவியாவின் காதலை வெளிப்படையாக ஏற்க தயக்கம் காட்டுகிறார். ஓவியா இங்கே எனக்கு கிடைத்த ஓரே நண்பன் என்று சொல்லும் போதும் எதுவும் தடுக்காத ஆரவ், 25 வருடங்களாக தேடிய ஓர் ஆணை இங்கே கண்டுபிடித்து விட்டேன் என்று ஓவியா சொல்லும் போது, போதும் இதுக்கு மேல எதுவும் சொல்லாத என்று தடுத்துவிடுகிறார்.

விருப்பம் :

விருப்பம் :

நிச்சயமாக ஆரவிற்கு ஓவியா மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது. ஆனால் சில யோசனைகள் இருக்கலாம் அது அவரது குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் மரியாதையாக இருக்கலாம், சமூகத்தினர் கேட்கும் கேள்விகளை, கேலிகளை எல்லாம் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம் என்கிற தவிப்பாக இருக்கலாம், என்னென்ன விமர்சனங்கள் வரும் என்கிற யோசனையாக இருக்கலாம், எதிர்காலம் குறித்த பயமாக இருக்கலாம், பொருளாதரத்தை சிந்தித்திருக்கலாம் முக்கியமாக ஓவியாவின் டேக் இட் ஈஸி பாலிசி குறித்த அச்சமாக இருக்கலாம்.

காதல் ஓவியா :

காதல் ஓவியா :

ஆரவிற்கு தன் மீது விருப்பம் இருக்கிறது ஆனால் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதை ஓவியாவும் உணர்ந்து விட்டார். 25 ஆண்டுகள் தேடிய தேடலின் முத்தாய் கிடைத்த ஆரவ் எப்போதும் விலகிடலாம் என்ற எண்ணம் அவருக்கு ஓர் பயத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். இந்த அன்பாவது நிலைக்குமா என்ற தவிப்பு தான் நேற்றைய ஓவியாவின் செயல்பாடுகள்.

தவிப்பு :

தவிப்பு :

ஏற்கனவே இங்கே கிடைத்த உண்மையான அன்பு விலகிடுமோ என்ற பயத்தில் தான் முந்தைய நாள் இரவில் தவித்திருக்கிறார். மறுநாள் அதே யோசனையில் தான் பல முறை ரைசா அழைத்தும் ஆரவை விட்டு எழுந்து வராமல் இருந்திருக்கிறார் ஓவியா.

ஒரு பக்கம் காதல் நிலைக்குமா என்ற தவிப்பு, இன்னொரு பக்கம் தன் சுயமரியாதையை குறைக்கும் விதமாக ரெட் கார்பெட் டாஸ்க் என நிச்சயமாக மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

சினேகன் :

சினேகன் :

யார் அழுதாலும் ஓடிச்சென்று ஆறுதல் சொல்லும் சினேகனின் குணத்தை எப்படி எடுத்துக் கொள்ள என்று தெரியவில்லை. அது ஆறுதலுக்காகவா அல்லது தான் எதிர்ப்பார்க்கும் சந்தர்ப்பமாக அவர் எடுத்துக் கொள்கிறாரா என்று சினேகனுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆறுதல் :

ஆறுதல் :

கண்ணீர் வந்தாலே கேமராவிற்கு முகம் தெரியக்கூடாது என்று மறைத்துக் கொள்ளும் ஓவியா கடந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து அழுகிறார். வழக்கம் போல சினேகன் ஆறுதல் சொல்ல வரும் போது, "ஐ எம் டன்...", "ஐ எம் ஒகே..." என்று சொல்லி சினேகனை நெருங்கவிடாமல் தடுக்கும் ஓவியா, உரிமையாய் ஆரவ் தோளில் சாய்ந்து அழுகிறார். தன் அழுகைக்கான ஆறுதலாய் ஆரவ் இருப்பான் என்று உறுதியாய் நம்புகிறார் ஓவியா.

எது நாகரிகம் ? :

எது நாகரிகம் ? :

திரைப்பட நடிகை, குட்டப்பாவாடையை சர்வ சாதரணமாக எடுத்துக் கொள்ளும் ஓர் சமூகப் பார்வை கொண்ட இடத்திலிருந்து வந்த ஓவியா தான் நம்பும், தான் காதலிக்கும் ஆணை தன்னை நெருங்க அனுமதிப்பதன் பெயர் தான் நாகரிகம்.

தீர்வு :

தீர்வு :

எதையும் தைரியமாக சமாளித்திடுபவர்கள் கூட காதல் என்று வரும் போது சற்று தடுமாறத்தான் செய்கிறார்கள். காதலொன்றும் பயத்தை மட்டுமே தரும் உணர்வல்ல, பயத்தையும் தரும். இதற்கான தீர்வு ஆரவ் கையில் தான் இருக்கிறது. பல வருடங்கள் கழித்து நமக்கு கிடைத்த ஓர் அன்பு நிலைக்குமோ நிலைக்காதோ என்ற அச்சத்தை தாண்டி, என் காதலை ஆரவ் ஏற்றுக் கொள்வானா என்ற தவிப்பு பொல்லாதது.

 பிழைப்பாரா? :

பிழைப்பாரா? :

ஓவியாவிற்கு உறுதுணையாய் இருப்பேன் என்று மட்டும் சொல்லிவிட்டு அழும் போது தட்டிக் கொடுக்காமல், தன் எண்ணத்தை வெளிப்படையாக ஆரவ் ஓவியாவிடம் சொல்ல வேண்டும். அல்லது ஓவியாவின் காதலை ஏற்க முடியாத பட்சத்தில் அதையும் ஆரம்பத்திலேயே சொல்வது நல்லது. தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டானா இல்லையா? அவன் என்னை காதலிக்கிறானா? இந்த அன்பு நிலைத்திடுமா? என்று ஓவியாவை தடுமாறச் செய்யும் கேள்விகளுக்கு ஆரவ் விரைவில் பதில் சொல்லிவிட்டால் ஓவியா பிழைத்துக்கொள்வாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: love romance
English summary

Will Oviya Survive?

Many Fan Followers were disappointed for oviyas yesterday performance in bigg boss.Here is the solution.
Story first published: Saturday, July 29, 2017, 17:24 [IST]