செக்ஸ் பொம்மைகள் உண்டாக்கும் தாக்கங்கள் - வினையோடு விளையாடும் மனித இனம்!

Posted By:
Subscribe to Boldsky

எவல்யூஷன்! சில சமயங்களில் முன்னேற்றமாகவும், சில சமயங்களில் பின்னடைவாகவும் அமைகிறது இந்த எவல்யூஷன். நினைத்து பாருங்களேன் மனிதர்கள் எவல்யூஷன் ஆகாமல் இருந்திருந்தால் ஓசோன் லேயரில் ஓட்டை விழுந்திருக்காது, உலகின் பல அழகிய தீவுகள் அழிந்திருக்காது, வட, தென் துருவங்கள், கிரீன்லாந்து பகுதியில் இருந்து க்ளேசியர் எனும் பனி பாறைகள் உருகியிருக்காது. பச்சைப்பசேல் என உலகம் தினம், தினம் புத்துணர்ச்சியுடன் தனது தாயுமானவனான சூரியனை சுற்றி, சுற்றி வந்துக் கொண்டிருந்திருக்கும்.

உலகில் எத்தனையோ அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றின் போது அந்தந்த உயிரினங்கள் தான் அழிந்தனவே தவிர, உலகிற்கோ, உலகின் இயற்கை வளங்களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிடவில்லை.

ஆனால், மனிதனின் எவல்யூஷன் ஒன்று ஒருசில நூற்றாண்டுகளில் ஒட்டுமொத்த உலகையும் அக்குவேறு, ஆணிவேராக புரட்டிப் போட்டுவிட்டது.

செக்ஸ் டாய்ஸ் டூ செக்ஸ் டால்ஸ் என்ற இந்த எவல்யூஷன் மனித உறவுகளில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செக்ஸ் டாய் எவல்யூஷன்!

செக்ஸ் டாய் எவல்யூஷன்!

சுய இன்பம் காணுதல், சுயமாக இன்பம் காணுதல் போன்ற செயல்களில் கூடுதல் இன்பம் அடைய இந்த செக்ஸ் கருவிகள் தயாரிக்கப்பட்டன. ஆண்குறி, பெண்குறி, வைப்ரேட்டர்கள் என இருந்த இந்த செக்ஸ் கருவிகள், எவல்யூஷனாகி ஆண் செக்ஸ் பொம்மை, பெண் செக்ஸ் பொம்மை என்ற உருமாறியிருக்கிறது.

கொரியன், ஜப்பான்...

கொரியன், ஜப்பான்...

கொரியன், ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடுகளில் இந்த செக்ஸ் பொம்மை உற்பத்தி ஏகபோகமாக நடந்து வருகிறது. இதை வாங்க லைனில் நிற்கிறார்கள். இந்தியாவில் இது தடைசெய்யப்பட்ட பொருளாக இருக்கிறது. முக்கியமாக கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

எதுக்கு?

எதுக்கு?

இந்த செக்ஸ் பொம்மைகளின் வருகை பாலியல் தொழில் மற்றும் பால்வினை நோய் தொற்று அபாயம் போன்றவற்றை அழிக்க உதவும் என்று தான் கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இந்த செக்ஸ் பொம்மைகள் மூலம் மனித இனத்தின் உறவு சங்கிலி அறுபடும் நிலை உருவாக துவங்கியிள்ளது.

திருமணம்!

திருமணம்!

உலக மக்களில் ஆண், பெண் இருபாலரும் செக்ஸ் பொம்மைகளை திருமணம் செய்துக் கொள்ள துவங்கியுள்ளனர். இதனால் உறவில் செக்ஸ் மட்டுமே பிரதானமாகவும், தனது துணை தன் பேச்சை கேட்கும் ஒரு அடிமையாக மட்டும் இருந்தால் போதுமென்ற கருத்து நிலை அதிகரிக்க துவங்கியுள்ளது.

விவாகரத்து!

விவாகரத்து!

துணை பிரிந்தாலோ, சண்டை, விவாகரத்து ஏற்பட்டாலோ அதற்கான தீர்வை தேடாமல், செக்ஸ் பொம்மை தீர்வு காணும் பொருளாக மாறிவருகிறது.

முக்கியமாக ஜப்பானியர்கள் மத்தியில் துணை மீது ஏற்படும் கோபத்திற்கு தீர்வு செக்ஸ் பொம்மைகள் தான் என்ற நிலை அதிகரித்து வருகிறது.

இச்சை மட்டும்!

இச்சை மட்டும்!

திருமணம் ஆனவர்கள் ஒருபுறம் இப்படி இருக்க, திருமணமாகாதவர்கள் தங்கள் இச்சை பசிக்கு சரியான தீர்வாக செக்ஸ் பொம்மைகளை காண்கிறார்கள். மேலும், தாங்கள் விரும்பும்படி செக்ஸ் வைத்துக் கொள்ள இயலாதவர்கள் செக்ஸ் பொம்மைகளை கொண்டு ஆசைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். இதனால் மிகுதியாக பாதிக்கப்படுவது ஒரு நபரின் மனநலமும், மக்களின் உறவு சங்கிலி இணைப்பும் தான்.

உறவுகள் என்னாகும்?

உறவுகள் என்னாகும்?

ஒரு தலைமுறையில் இந்த செக்ஸ் பொம்மை தாக்கம் ஏற்படுத்தினாலே உறவு சங்கிலி அறுந்துவிடும். அப்பா - அம்மா என்ற கரு தான் ஒரு குடும்பத்தை உருவாக்கி அதன் பால் உறவு சங்கிலி உருவாக காரணமாக இருக்கிறது. இந்த செக்ஸ் பொம்மைகளின் தாக்கம் இந்த அப்பா - அம்மா உறவையே சீர்குலைத்துவிடுகிறது.

மனிதனின் எவல்யூஷனில் அணு ஆயுத கண்டுபிடிப்பிற்கு பிறகு மிகவும் மோசமான கண்டுபிடிப்பு இந்த செக்ஸ் பொம்மைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Japanese Men Are Finding 'True Love' In Sex Dolls?

Why Japanese Men Are Finding 'True Love' In Sex Dolls?