தமிழகம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஜெயலலிதா - சசிகலா மத்தியிலான உறவு!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு புதிய பாடம் தான். அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பலவன இருக்கின்றன. அந்த வகையில் ஜெயலலிதா - சசிகலா மத்தியிலான உறவில் இருந்து தமிழகம் கற்றுக் கொள்ள வேண்டியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமன்பாடு!

சமன்பாடு!

ஒரு பெரும்புள்ளியுடன் எப்படி ஒரு சாதாரண நபர் நெருக்கமாக முடியும்? என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். ஆனால், இருவர் மத்தியில் ஏதேனும் ஒரு மையப்புள்ளி ஒருநிலையில் அமைந்துவிட்டாலே போதும். அவர்கள் மத்தியில், அவர்களுடைய உறவின் பிணைப்பு பிரிக்க முடியாத அளவில் மாறிவிடும். சினிமா என்ற ஒரு மையப்புள்ளி தான் ஜெயலலிதா - சசிகலாவை இணைத்த ஒன்று.

குருட்டுத்தனமான நம்பிக்கை!

குருட்டுத்தனமான நம்பிக்கை!

ஒருவர் மீது நாம் வைக்கும் குருட்டுத்தனமான நம்பிக்கை நமது வாழ்க்கையை அழித்துவிடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஜெயலலிதா - சசிகலாவின் நட்பு.

கட்டுப்படுத்த விடுதல்!

கட்டுப்படுத்த விடுதல்!

எந்த ஒரு உறவாக இருந்தாலும், வேறு நபரை உங்களை முழுமையாக கட்டுப்படுத்த விடுதல், உங்களை கொல்லும். அது நட்பாக இருக்கட்டும், துணையாக இருக்கட்டும். ஒருவர் உங்களை கட்டுப்படுத்தும் போது உங்களை சுற்றி அவர் ஒரு சுவர் எழுப்புகிறார். இதனால், ஒரு கட்டத்தில் நீங்கள் விரும்பும், நீங்கள் வேண்டும், உங்களுக்கு நன்மை விளைவிக்கும் நபர்கள் கூட உங்களை விட்டு விலக நேரிடும்.

பேராசை...

பேராசை...

பேராசை பெரிய நஷ்டத்தை அளிக்கும் என்பார்கள். தங்க முட்டை இடும் வாத்தை பேராசை கொண்டு அறுத்து கொன்றதன் நிலையால் இழப்பு யாருக்கு? பேராசை உங்களை ஒரு நாள் புதை குழியில் தான் தள்ளும்.

தனிமை...

தனிமை...

சசிகலா வீட்டாரை தவிர்த்து ஜெயலலிதாவுடன் வேறு யார் இருந்தார் என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. அதிக பணத்தை விட, அதிக உறவுகளே நல்ல வாழ்க்கையை அமைத்து தரும். உறவுகள் குறைந்துவிட்டால் ஆரோக்கியம் குறைந்துவிடும். இதற்கும் ஓர் நல்ல உதாரணம் இவர்களுடைய உறவு.

ஆடம்பரம், ஆழ்குழியில் தள்ளும்!

ஆடம்பரம், ஆழ்குழியில் தள்ளும்!

நல்வாழ்வுக்கு ஆடம்பரம் தேவையற்றது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் பெரும் எதிர்மறை திருப்புமுனையாக அமைந்தது அந்த ஒரு ஆடம்பர திருமணம். அதன் பிறகு தான் அவர் தனது வாழ்வில் வீழ்ச்சியை காண துவங்கினார்.

ஒரு நபர் வேண்டும்...

ஒரு நபர் வேண்டும்...

ஆணோ, பெண்ணோ.., ஒருவர் வேலையில் கவனம் செலுத்தும் போது வீட்டில் கவனம் செலுத்த ஒரு நபர் வேண்டும். அந்நபர் நமக்கு நம்பகமான, நமக்கு தீமை விளைவிக்க எண்ணாத நபராக இருக்க வேண்டும். அப்படி ஒரு நபர் ஜெயலலிதாவின் வாழ்வில் கிடைக்கவில்லை.

நல்ல உறவுகள்...

நல்ல உறவுகள்...

நம் மீதும், நமது ஆரோக்கியத்தின் மீதும் நல்ல அக்கறை கொண்டிருக்கும் உறவுகளை நமது அருகாமையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த உறவு நட்பாக இருக்கலாம், துணையாக இருக்கலாம், சகோதர, சகோதரியாக இருக்கலாம். அப்படி ஒரு உறவு ஜெயலலிதாவுடன் இருந்திருந்தால் அவர் இன்று உயிருடன் கூட இருந்திருப்பார்.

பணம் தான் எல்லாம்...

பணம் தான் எல்லாம்...

ஒருவரிடம் பணமும், அதிகாரமும் இருந்தால், அவருடன் ஒட்டிக்கொள்ள ஒரு கூட்டமும், அவரை வெட்டி சாய்க்க ஒரு கூட்டமும் உடன் இருந்துக் கொண்டே இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What We Can Learn From The Relationship Between Jayalalithaa And Sasikala

What We Can Learn From The Relationship Between Jayalalithaa And Sasikala
Story first published: Wednesday, February 15, 2017, 18:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter